வெங்கடேசன் நாராயணசாமி
[ஶ்ரீம.பா. 10.47.11]
ஒரு தேன் வண்டைக் கண்ட கோபிகை,
கண்ணனுடன் இணையும் சிந்தனையில்
தன்னையே தேற்றிக்கொள்ள,
தாமோதரனின் தூதாக அதையெண்ணி
கற்பனை செய்து கூறலானாள்:
[ஶ்ரீம.பா. 10.47.12]
கோபிகை கூறுகிறாள்:
தேனீ! அக்கபடனின் நண்ப!
நப்பின்னை கொங்கைகள் நசுக்கிய மார்பு மலரின் குங்குமக்கறை உன் மீசையில் எப்படி?
தொடாதே எமது பாதங்களை!
வணங்குவதுபோல் பாசாங்கு செய்யும் உன்
நொண்டிச் சமாதானம் தேவையில்லை எமக்கு!
சொல்லாமல் சொல்கிறாயா எமது போட்டிக் காதலிகளோடு அவ்வனமாலீ ஆடும் பல் பிணைத் தழுவுக் கூத்தை?
ஒரே பூவையா காதலிக்கிறாய் நீ? அலைகிறாயே வெவ்வேறு மலர்களைத் தேடி! அது போலத்தான் அவரும்! அவரின் தூதுவன் தானே நீயும்!
அம்மதுராபுரிப் பெண்களிடமே அவர் அன்பைச் செலுத்தட்டும்!
எங்கள் ஸக-கழுத்திகளின் முலைத்தட குங்குமப் பிரஸாதம் அத்தேனனிடமே இருக்கட்டும்! உன் மூலம் அனுப்ப வேண்டாமதை!
யதுஸபை எள்ளி நகைக்கட்டும் உன்னைத் தூது அனுப்பியவரை!
[ஶ்ரீம.பா. 10.47.13]
நீயும் அவரும் ஒன்றுதான் நிறத்திலும் திறத்திலும்.
மலரின் மதுவுண்டபின் சட்டென்று நீ நழுவுதல் போல்
பட்டென அகன்றார் எம் உளம் கவர்ந்து.
ஓரேயொருமுறை பருக அளித்தார் அவரின் திருக்கனிவாயமுதம்,
அன்றே மறந்தோம் அகிலத்தை, ஆசாரத்தை.
மதிமயங்கி மோசம் போனோம் அவரின் வஞ்சப் புகழ்ச்சிகளில், முடிவில் எங்களையே பரிகொடுத்தோம்.
நாகரீகமறியா ஆயர் நாங்கள்!
மதுராபுரிப் பெண்களோ நவ-நாகரீகத்தின் உச்சத்தில்!
கறுத்தது எல்லாம் கண்மணி என நம்பும்
கிராமத்து வெகுளிகளென்று எம்மைக் கைகழுவினார் திடீரென!
இச்சபல சித்தரின் மலரடிகளை எப்படிப் பணிகிறாள் பத்மாவதி!
வீழ்ந்தாளோ அவளும் இவ்வஞ்சகரின் சூழ்ச்சிப் பேச்சில்? வஶீகரிக்கும் ஸாஹஸ வலையில்? அந்தோ பரிதாபம்!
[ஶ்ரீம.பா. 10.47.14]
ஆறுகால் வண்டே! அன்னவர்க்கே ஆளானோம்! வீடுவாசல் இழந்து வனவாஸிகளானோம்!
எம்மெதிரே ஏன் பாடுகிறாய் வீணாக யாதவ மன்னரின் பழங்கதைகளை?
அர்ஜுனரின் ஆப்தநண்பர் வாழ் அரண்மனைப் பெண்டிரிடம்
ஆடிப்பாடுவாய் அவரின் காதல் லீலைகளை!
ஆறும் அப்பெண்டிரின் எழில் நகில் இணை வலியும்!
தேறும் ஏதேனும் நீ யாசித்துப் பெற!
[ஶ்ரீம.பா. 10.47.15]
வெஞ்சிலை ஒத்த குனித்த புருவமும்,
காண்பவர் உள்ளமதைக் கொள்ளை கொள்ளும்
கொவ்வைச் செவ்வாய் கள்ளக் குமிண்சிரிப்பும்
கண்டு மயங்காப் பெண்களுண்டோ இவ்வீரேழு புவனங்களில்?
அவரால் அடையமுடியா அணங்கும் உண்டோ அவணி தனில்?
பேதைகளாகிய நாங்கள் எம்மாத்திரம்?
அலைமகளும் அடிபணிகின்றாளே அப்பாததூளியை!
சொல்லத்தான் வேண்டுமோ எங்கள் நிலையை?
எனினும், கருமியை தருமி எனல் தகுமா?
ஏழைகளாம் எம்மிடமும் ஏற்றத்தாழ்விலா அன்புடையவரே
“உலகம் போற்றும் உத்தமர்” என்று அழைக்கத் தகும்.
[ஶ்ரீம.பா. 10.47.16]
எடு எம் பாதத்திலிருந்து உன் தலையை!
எங்கிருந்து வந்தாய் தூதனாய் இங்கு?
இன்சொற்கள் பேசி முகுந்தனிடம் இணையுங்களென ஸமாதானம்
செய்யும் உன்னை நன்கறிவோம் யாம்.
துறந்து வந்தோம் அவருக்காக எம் மக்கள் மணாளர் மற்ற சுற்றமனைத்தும்.
மறந்தார் நன்றி, முறை பிறழ்ந்து போனார் சிறிதும் எம்மை சிந்தியாமல்.
உறவு கொளல் எதற்கு இனியும் நம்பி அவரை நாங்கள்?
சொல் நீ தேனீ!
[ஶ்ரீம.பா. 10.47.17]
வதம் செய்தார் வாலியை ஊனுண்ண மானைக் கொல்கிற வேடனைப் போல் மறைந்து நின்று;
ஸீதையிடம் காம வஶப்பட்டு, அலங்கோலமாக்கினார் அடிமையாய்
தன்னை அண்டி மோஹித்து வந்த ஶூர்ப்பநகையை;
தனக்கு உணவிட்டவனைச் சுற்றி வரும் காகம் போல் கொடைகளைப் பெற்றபின்பும் கட்டினார் பலிச் சக்ரவர்த்தியை வருணபாஶத்தால்;
போதுமப்பா இக்கறுப்பரின் உறவு நமக்கு!
மனம் பறிகொடுத்தோம் அவர்தம் திருவிளையாடல்கள் கேட்டு, ஆதலால்
பேசாமலிருக்க முடியவில்லை அவரின் பிரதாபங்களை!
[ஶ்ரீம.பா. 10.47.18]
அச்சுதனின் திருவிளையாடல்கள் தம்மை செவிகுளிரக் கேட்டு
ஒரேயொருமுறை பருகிய அவ்வமுதத் தேன்துளியால்,
ஸுகம்-துக்கம் முதலிய இருமைகள் அழிந்து,
தன்னையே இழந்து, தன்சார் வறிய வீடுவாசல் குடும்பம் துறந்து,
தாமும் வறியவராய், நாடோடியாய் நிலைகொள்ளாது,
புட்களைப் போல் பெயர்ந்து திரிந்து,
கரதல பிச்சையேற்று துறவிகளாய் வாழ்கின்றார்
அக்காந்தனின் லீலைகளை மறக்க முடியாமல்!
[ஶ்ரீம.பா. 10.47.19]
வஞ்சக வேடனின் கீதத்தை இரலையின் அழைப்பென நம்பி
அம்பால் அடிபட்டு மாளும் கலைமான்களைப் போல் மோசம்போனோம்
அம்மாயவரின் கபட சொற்கள் கேட்டு.
அன்னவரின் கூர்நகம் தீண்டி மூண்ட காமத்தீயால்
அல்லலுற்றோம் அனுதினமும்.
அம்மன்னவரின் ஆலோசகத் தூதரே, அவரைப் பற்றி இனி பேசாமல்
ஆற்றுங்கள் வேறு உரை ஏதாயினும்.
[ஶ்ரீம.பா. 10.47.20]
அகலகில்லேன் ஒருநொடியும் என்றலர்மேல் மங்கையுறை மார்பன்
அனுப்பினாரா மறுபடியும் உம்மைத் தூதாக?!
அதுவும் அவரிடம் எம்மை அழைத்துப்போக?!
எமது பேரன்பிற்குரியவரின் தோழர் தாங்கள்
எங்கள் பெருமதிப்பிற்குரியவர், என்ன வரம் வேண்டும்? யாதாயினும் தயங்காமல் கேளுங்கள்.
இனிமையானவரே! தனது இல்லாளை ஒருகணமும் பிரிந்தறியாப் பேரின்பரிடம் எப்படித்தான் அழைத்துச் செல்வீரோ எங்களை?
[ஶ்ரீம.பா. 10.47.21]
நந்தகோப திருக்குமாரர் இப்போதிருப்பது மதுராபுரியில்தானே?
எப்போதாவது நினைக்கின்றாரா தம் அன்பிற்குரிய பெற்றோரையும், உற்றார் உறவினராம் கோபர்களையும்?
எப்போதாவது பேசுவதுண்டா அடிமைகளாம் எம்மைப் பற்றி?
எப்போது வைப்பாராம் எங்கள் தலைமீது
அவரின் அகில் மணங்கமழ் திருக்கரத்தை? நன்மனம் படைத்த வண்டே! அது சரி!
வண்டின் இனிய கீதம்

அவரின் அகில் மணங்கமழ் திருக்கரத்தை? நன்மனம் படைத்த வண்டே! அது சரி! சொல்.
- என் தாய் நீ
- மோகமுள்
- கவிதைகள்
- வண்டின் இனிய கீதம்
- படித்தோம் சொல்கின்றோம் :
- என்ன வாழ்க்கைடா இது?!