ரவி அல்லது
முளைத்துக்கிடந்த
அறிவுச் செடிகள்
வறண்ட நிலமென கொள்ள வைத்தது
கொஞ்சம்
காகிதக் குப்பைகளை கையில்
திணித்து.
பிரபஞ்சம்
யாவருக்கும்
பொதுவென
பொருள் கொண்ட
பொழுதும்
பெரு மதிப்புக்
கருணையைக்
காணவே இல்லை
உதிர்ந்த சொற்களைத்தவிர.
மரபணுவில்
பொதிந்த
மாறிடாத
அன்பை
இழந்த தருணமொன்றில்
சிலையெனத்தான்
வாய்த்தது
மலர்தலின்
உதிர்தலென.
நகலென
நாற்புறமோடிய
பிள்ளையின்
குறும்பினை
பேருவகையாக
ரசித்தபொழுது
நோவினையொன்றிக்காக
வழிந்தோடும்
கண்ணீர்
கடந்த வாழ்வில்
புதிதினும்
புதிதுதாம்.
யாவினும்
வியத்தலாக
நோவினையை
எப்புறம்
காண்கிலும்
கரைதலாக
உருகும்
உள்ளம் மாறியதெப்படி
என்ற
கேள்விக்கு
விடையற்றே
கடத்துகிறது
காலம்
என்
மனிதத்தை
எனக்குள்
மீட்டுக் கொடுத்து.
ரவி அல்லது.