This entry is part 5 of 8 in the series 13 அக்டோபர் 2024

சொற்கீரன்

என்னைச்சுற்றிக்கொண்டு
இருக்கிறது.
ஆனால் என் உள்ளெலும்புகளை
இன்னும் முறிக்கவில்லை.
எனக்குள் ஊர்கிறது.
என் மூளைச்செதில்களிலுமா
அது பொந்து வைக்கும்?
உள்ளிருந்து ஊசிக்குருவிகளை
சிறகடிக்கச்செய்கிறது.
என் ஒவ்வொரு மயிர்க்கண்களிலும்
வெர்ச்சுவல் பிம்பங்களை
சமைத்துக்கொட்டுகிறது.
சிந்தனைப்பசிக்கு
சோறு போட‌
இந்த ஆயிரம்
பேரலல் யுனிவெர்ஸ் தியரியால்
முடியுமா?
விஞ்ஞானத்தின் பசியே
விஞ்ஞானத்துக்கு உணவு.
ஆனால்
இந்த அனக்கொண்டா
என்னை இன்னும் விழுங்கவில்லை.
விழுங்க முடியாது
அதனுடைய இரையாக‌
இருப்பது போய்
என்னுடைய இரையே
இப்போது இது தான்.
அறிவுக்கு
ஆயிரம் திசைகளிலும்
வேர்!

Series Navigationகிரிவலம்