படம் முழுக்க ஒரு வித பாச உணர்வையும், சொந்த ஊர்(தஞ்சாவூர்), சொந்த வீடு போன்ற, வாழ்வோடு பின்னிய சிக்கல் நிறைந்த மனிதர்களின்
மன உணர்வுகளை வைத்து, இரண்டு நபர்களின் மேல், கதையின் பாரத்தைப்போட்டு, வண்டியை இழுத்துச்செல்கின்றார் டைரக்டர்.
திஜாவின் கதைகளில் வரும் மண்வாசனை இதிலும் தெரிகின்றன.
வீடு என்பது, வெறும் கல்லும் மண்ணம் கட்டிய வஸ்து அல்ல.
அதற்கும் உயிர் உண்டு.
அதுவும் அம்மா அப்பாவோடு பேசும்.
அக்கா தங்கை தம்பியோடு உறவாடும். வளர்க்கும் நாய் பூனையோடு உறவுக்கொள்ளும்.
மாடுகளோடு பந்தம் வைத்து, அவைகளையும் காப்பாற்றும்.
அதன் மூச்சில், மொத்த குடும்பமும், நகர்ந்துக்கொண்டே செல்லும்.
இந்த மாய வித்தைகள், இந்த படத்தில் காணலாம்.
இதற்கு கொஞ்சம் ஊர் வாசனை தேவை.
நகரில் இந்த வீட்டு வாசனை அடிக்காது. பாச மலர் மலராது.
இங்க எல்லாமே, காசை மையப் படுத்தி கட்டிய, கட்டட மரங்களாக, அடுக்கடுக்காக புறாக்கூண்டுகளாக,
யாரும் யாருக்கும் தெரியாமல் வாழுகின்ற வாழ்க்கை.
இங்கு மண் வாசனை, சொந்த பந்தங்களைப்பற்றி பேசினால்,
நம்மை ஏதோ புராதன பொருளாக பார்ப்பர்.
அரவிந்த சாமியின் கண்ணீரில் கரையும் சோகம் இதுவரை யாரும் பார்க்காத ஒன்று.
கார்த்திக் தஞ்சை மண்வாசனை கலந்த, மொழி நடையும் ஒருவித
வாழ்வோடு கலந்த வாழ்க்கையை கண் முன்னே நிறுத்துகின்றது.
கடைசி வரை, கார்த்திக்கை, யாரென்ற தெரியாமல், ஒரு வித நட்போடு கலந்த அத்தான் பாஷையில், அரவிந்த சாமி கரைந்துவிடுகின்றார்.
சமீப காலமாக, யதார்த்தங்ஙளுக்கு அப்பாற்பட்ட ரவுடியிஸம், வெட்டுக்குத்து, கொலை கொள்ளை, வரம்புமீறிய உறைய வைக்கும் கர்ப்பழிப்பு, குழந்தைகளை காம ஆட்டத்தில் சிக்க வைத்து வதைப்பது
போன்ற, இயற்கையோடு ஒட்ட முடியாத படங்களே வந்து, கமர்ஷியலாக வெற்றிகரமாக ஓடியது.
இவைகளை மீறி, மனித மனங்களின் உறவு ரேகைகளில்
படம் எடுத்து வெற்றிப்பெற்றுள்ளார் டைரக்டர்.
தமிழ் சினிமாவும், ஒரு ஆரோக்கியமான பாதையில் செல்ல,
நவீன இலக்கிய ரசனைக்கொண்ட,
இளைய தலைமுறை எழுந்து வந்துள்ளனர்.
நாம் இவர்களை வரவேற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
ஜெயானந்தன்
- ஞாலத்தைவிடப் பெரியது எது?
- சொல்வனம் 329 ஆம் இதழ் வெளியீடு
- மெய்யழகன்- தமிழின் யதார்த்த வாத படம்
- பண்பலை
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா-2024
- பைரவ தோஷம்