குமரி எஸ். நீலகண்டன்
பூட்டிக் கொண்டும்
திறந்து கொண்டும்
கைப் பைக்குள்
புதைந்து கொண்டும்
காதுகளைக் குடைந்து
கொண்டும்தான் இருந்தது
அதன் ஒற்றைக்கால்.
கிழிந்த பையிலிருந்து எங்கோ
கீழே விழுந்து தொலைந்த போது
அதன் ஒற்றைக்கால்
ஒடியவில்லை.
பூட்டை உடைத்தபோது
ஒடியாத ஒற்றைக்கால்
செயலிழந்தது.
Cell no – 9444628536
punarthan@gmail.com