Posted in

(பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘தி காங்க்வெஸ்ட் ஆஃப் ஹாப்பிநெஸ்’ நூலின் அத்தியாயம் – 5

This entry is part 6 of 7 in the series 9 பிப்ரவரி 2025

THE CONQUEST OF HAPPINESS

By BERTRAND RUSSEL

தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்

அத்தியாயம் 5:

சோர்வு

சோர்வு பலவகையானது. அவற்றில் சில மற்றவற்றைக்  காட்டிலும் அதிகமான அளவு மகிழ்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. முழுவதும் உடல்ரீதியான சோர்வு அது மட்டுமீறிப்போகாமலிருந்தால், மகிழ்ச்சிக்கான காரணமாகக்கூட அமைய முனையும் என்று சொல்லலாம். அத்தகைய உடல்சோர்வு நல்ல தூக்கத்திற்கும், நல்ல பசிக்கும் நம்மை இட்டுச்செல்லும். விடுமுறை நாட்களில் சாத்தியமாகின்ற ஆனந்தக்களிப்புகளுக்கு அவை உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. ஆனால், அது மிகவும் அதிகமாக, , மட்டுமீறியதாகிவிடும்போது, அது அதிதீவிரமான தீமையாக மாறிவிடுகிறது.

மிகவும் முன்னேறிய சமூகங்களைத் தவிர மற்ற எல்லாவிடங்களிலும் குடியானவப் பெண்கள் மிகவும் அதிகப்படியான உழைப்பால் முப்பது வயதிலேயே வயதானவர் களாகிவிடுகிறார்கள்; உடல் நலிவடைந்துவிடுகிறார்கள். தொழில்மயமாதலின் ஆரம்ப நாட்களில் பிறந்த குழந்தைகளின் உடல்ரீதியான வளர்ச்சி முடங்கி அதிக நேரங்களில் அவர்கள் அதீத வேலைப்பளுவால் சீக்கிரமே இறந்துபோக நேர்ந்தது. இந்த விளைவுகள் இன்றளவும் சீனாவிலும், ஜப்பானிலும்  – தொழில்மயமாதல் புதிய ஒன்றாக இருக்கும் நிலங்களில் – நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஓரளவிற்கு அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களிலும். இந்த எதிர்மறை விளைவுகளைக் காணமுடிகிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு அப்பால் நீட்டிக்கப்படும்  உடல் உழைப்பு அராஜகமான சித்திரவதையாக உயிர்வாழ்தலை தாங்கமுடியாத வேதனையாக மாற்றும் அளவுக்கு வெகுவாக நீட்டிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும், நவீன உலகின் முன்னேறிய நிலங்கள் பெரும்பாலானவற்றில், தொழில்துறை சார் சூழ்நிலைமைகளை மேம்படுத்துவதன் மூலம் உடல் சோர்வு நிறையவே குறைக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் முன்னேறிய சமூகங்களில் நிலவும்  மிக ஆபத்தான சோர்வு நரம்புரீதியான சோர்வு ஆகும். விசித்திரமான அளவில், இந்தவகை சோர்வு வசதி படைத்தவர்கள் மத்தியில்தன் மிகவும் கணிசமான அளவு நிலவுகிறது. தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் மற்றும் மூளை சார் உழைப்பாளர்கள் மத்தியில் நரம்புச் சோர்வு காணப்படுவதைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே அது வேலை செய்து சம்பளம் ஈட்டுபவர்கள் மத்தியில் காணப்படுகிறது. இது விந்தையாக, இந்த வகை, வசதி படைத்தவர்களிடையே அதிகமாகக் காணப்படுகிறது, மேலும் கூலி சம்பாதிப்பவர்களிடையே இது வணிகர்கள் மற்றும் மூளைத் தொழிலாளர்களை விட மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

நவீன வாழ்க்கையில் இவ்வகையான நரம்புரீதியான சோர்விலிருந்து தப்பிப்பது மிகவும் கடினமான விஷயமாக இருக்கிறது. முதலில், வேலை பார்க்கும் நேரமெல்லாம், அதைவிட அதிகமாக வேலைக்கும் வீட்டுக்கும் இடையே கழிக்கும் செலவிடப்படும் நேரமெல்லாம் நகர்ப்புற ஊழியர் சபலவிதமான இரைச்சல்களுக்கு மத்தியில் இருக்கவேண்டிய நிலை, அவற்றில் பல சப்தங்களை அவர்கவனமின்றித் தான் கேட்டுக்கொண்டிருக்கிறார். என்றாலும், அந்த சப்தங்கள் அவரை சோர்ந்துபோக வைக்கின்றன. அதுவும், அந்த சப்தங்களைக் கேட்காமலிருக்க அவரையுமறியாமல் அவரால் மேற்கொள்ளப்படும் ஆழ்மனப் பிரயத்தனங்களால் அவருடைய சோர்வு இன்னும் அதிகமாக அவரை வாட்டுகிறது.

நாம் அறியாதவாறு நம்மை மிகுந்த சோர்வுக்காளாக்கும் இன்னொரு விஷயம், எப்பொழுதுமே அந்நியர்கள் மத்தியில், அவர்களைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டிய நிலை. மனிதனின் இயல்பான உள்ளுணர்வு, மற்ற எல்லா மிருகங்க ளையும் போலவே, தனது இனத்தைச் சேர்ந்த ஒவ்வொரு அந்நியரையும் பற்றிய துப்பாய்வை, விசாரணையை மேற்கொண்டு அவரோடு நாம் நட்பாகப் பழகவேண்டுமா அல்லது அவரை எதிரியாக பாவிக்கவேண்டுமா என்று தீர்மானித்துக்கொள்வதற்காக மேற்கொள்ளவேண்டியது. நெரிசல் நேரத்தில் சுரங்கப்பாதைகளில் பயணம் மேற்கொள்வோர் கைக்கொள்வதான இந்த உள்ளுணர்வின் காரணமாக தாங்கள் இவ்விதமாய் தினசரி வாழ்வின் நிர்பந்தங்களால் தாம் சந்திக்கவேண்டியிருக்கும்,, சேர்ந்திருக்கவேண்டியிருக்கும் கலந்துறவாட வேண்டியிருக்கும், மேலும், காலை நேர ரயிலைப் பிடிக்க விரையவேண்டும் அதன் விளைவாக செரிமானக் கோளாறுக்காளாகி, அலுவலகம் சென்றடைந்ததுமே வேலை ஆரம்பமாகிவிடுகிறது. கருப்பு கோட் அணிந்திருக்கும் ஊழியருக்கு ஏற்கெனவே நரம்புத்தளர்ச்சி, மன அழுத்தம் ஏற்பட்டு, மனித இனத்தையே ஒரு தொந்தரவாகப் பார்க்கத் தலைப்படும் ஒரு மனப்போக்கு அவருக்கு ஏற்பட்டுவிடுகிறது..

அதே மனநிலையில் வரும் லுவலகம் வந்துசேரும் அவருடைய முதலாளி, தன் ஊழியரின் அந்த மனப்போக்கைஅவரது முதலாளி, ஊழியரிடம் இருக்கும் அந்த எண்ணத்தை/ மனோபாவத்தை தகர்த்து அகற்றுவதற்கு எதுவுமே செய்வதில்லை. வேலையை விட்டு எடுத்துவிடுவார்களோ என்ற பயம் முதலாளியிடன் மரியாதையாக நடந்து கொள்ளச் செய்கிறது. ஆனால், இந்த இயல்பு மீறிய நடத்தை ஊழியரின் நரம்புத்தளர்ச்சியை, மன அழுத்தத்தை அதிகரிக்கவே செய்கிறது. வாரத்திற்கு ஒரு முறை முதலாளியின் மூக்கைத் திருகியோ அல்லது வேறு விதமாகவோ அவரைப் பற்றித் தாம் என்ன நினைக்கிறோம் என்பதைத் தெரிவிக்க வாய்ப்பளித்தால் ஊழியர்களின் மன அழுத்தம் குறையலாம் அல்லது காணாமல் போகலாம், ஆனால், அந்த முதலாளியைப் பொறுத்தவரை, அவருக்கும் பிரச்சனைகள் இருக்கின்றன என்பதால், ஊழியரின் இந்த நடத்தையால் விஷயம் சரியாகிவிடப்போவதில்லை.சில முதலாளிகள் இத்தகைய பயங்களைக் கடந்த வலுவான நிலையில் இருப்பவர்கள் என்பது உண்மைதான். ஆனால் பொதுவாக அவர்களும் இந்தவகையான ஓர் உயரிடத்தை எட்டிப்பிடிக்க வருடக்கணக்காக அயராமல் கடுமையாகப் பிரயத்தனப்படவேண்டியிருகிறது. இந்த சமயத்தில் அவர்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் நடந்துகொண்டிருக்கும் முக்கிய நிகழ்வுகளை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கவேண்டியுள்ளது; அவற்றைப் பற்றிய தகவல்களை முனைப்பாக அறிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. தங்களுடைய போட்டியாளர்கள் தமக்கு எதிராகத் தீட்டும் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிக்கவேண்டியுள்ளது. இவையெல்லாவற்றின் விளைவு, மிக உறுதியான, பெரிய வெற்றி அந்த முதலாளிக்குக் கிட்டும்போது அவர் ஏற்கெனவே அத்க மன அழுத்தத்திற்காளானவராக, நரம்புத்தளர்ச்சியுடையவராக மாறியிருக்கிறார்.  கவலை என்பதும் மன அழுத்தம் என்பதும் அவருடைய இரண்டாம் இயல்பாகிவிட்ட நிலை. அவற்றிற்கான தேவையில்லாமல் போய்விட்டபோதும் அவரால் அவற்றைத் தன்னிடமிருந்து உதறிவிட முடிவதில்லை. சில செல்வந்தர்களின் மகன்கள்  இருக்கிறார்கள். பணக்காரர்களாகவே பிறந்திருந்த போதிலும் அவர்கள் பணகாரர்களாகப் பிறக்காதவர்கள் அனுபவிக்கும் அத்தனை மன அழுத்தங்களையும், நரம்புத்தளர்ச்சிகளையும் அனுபவிக்குமளவு புதிது புதிதாகத் தங்களுக்குக் கவலைகளையும் பரிதவிப்புகளையும் உண்டாக்கிக்கொள்வதில் வெற்றி பெறுகிறார்கள். சூதாட்டம், பந்தயம் கட்டுவது போன்ற செயல்பாடுகளால் அவர்கள் தமது தந்தையரின் அதிருப்திக்கு ஆளாகிறார்கள்.; தங்கள் கேளிக்கைகளுக்காக தூக்கத்தைக் குறைத்துக்கொள்கிறர்கள். அதனால் அவர்களுடைய உடல்நலன் வலுவிழக்கிறது; சீர்குலைகிறது.  ஒருவழியாக அவர்கள் வாழ்க்கையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும்போது அவர்கள் தமது தந்தையர்கள் இருந்ததைப் போலவே வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியாதவர்களாகிவிடுகிறார்கள். தாமாக மனமுவந்தோ, அல்லது தம்மையும் மீறிய நிலையிலோ, தங்கள் விருப்பத்தேர்வாகவோ அல்லது அவசியத்தேவையினாலோ பெரும்பாலான நவீன மனிதர்கள் நரம்புத்தளர்ச்சியை உண்டுபண்ணுவதான, மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடியதான பதற்றமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றுகிறார்கள். தொடர்ந்த ரீதியாக மிகவும் களைத்துச் சோர்வின் பிடியில் இருக்கும் அவர்களால் மதுவின் உதவியின்றி மகிழ்ச்சியை உணரமுடிவதில்லை.

அப்பட்டமான முட்டாள்களாக இருக்கும் பணக்காரர்களை ஒருபுறம் விலக்கிவைப்போம், வாழ்வதற்காக அயராது உடலுழைப்பை நல்கவேண்டியிருக்கும் சாதாரண மனிதரைப் பற்றிப் பார்ப்போம். இத்தகைய மனிதர்களின் விஷயத்தில் சோர்வு என்பது பெருமளவு கவலையால் ஏற்படுகிறது. இந்தக் கவலையை வாழ்வு குறித்த இன்னும் மேலானதொரு தத்துவத்தாலும், சற்று அதிகமான மன ஒழுக்கத்தினாலும் தவிர்க்கலாம். பெரும்பாலான ஆண்களும் பெண்களும் தங்கள் எண்ணங்களை எந்தவிதத்திலும் கட்டுக்குள் வைத்திருக்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். கவலையளிக்கக் கூடிய விஷயங்களையே அவர்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவை குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வழியில்லை என்ற நிலையிலும் அவற்றைப் பற்றியே எண்ணிக்கொண்டிருக் கிறார்கள். மீண்டும் மீண்டும் தங்களுடைய பிரச்சனைகள், கவலைகளையே மண்டைக்குள் ஒடவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். மறுநாள் அவற்றை திருத்தமாக எதிர்கொண்டு சமாளிக்கும் அளவில் அவற்றைப் பற்றி யோசிக்காமல், தூங்கவிலாமலிருப்பவர்களின் இயல்பான நடவடிக்கையாக அமைகின்ற கவலை யிலாழ்ந்த சிந்தித்தலாக, பாதி – சித்தங்கலங்கிய நிலையிலான நினைவோட்டமாக அவர்கள் சிந்திக்கிறார்கள். அந்த நள்ளிரவு சித்தங்கலங்கிய நிலையின் ஒரு பகுதி காலையிலும் அவர்களிடமே தங்கிவிடுகிறது. அவர்களுடைய தெளிவான சிந்தனையை மங்கலாக்கி அவர்கள் சரியானபடி சிந்திப்பதை, மதிப்பிடுவதை மழுங்கடித்துவிடுகிறது.  அவர்களுடைய அமைதியைக் குலைத்து அவர்களுக்குக் கோபமும் எரிச்சலும் ஏற்படுத்துகிறது, எதிர்ப்படும் எந்தத் தடங்கலும் ஒரேயடியாக அவர்களுடைய சமன்நிலையைக் குலைக்கும்படி செய்கிறது. மனப்பக்குவமுள்ள மனிதன் தனது பிரச்சனைகளைப் பற்றி சிந்திப்பதற்கென ஏதாவது குறிப்பான நோக்கம் அல்லது இலக்கு இருக்கும்போது மட்டுமே அவற்றை எண்ணத் தலைப்படுகிறான். மற்ற நேரங்களில் அவன் வேறு விஷயங்களைப் பற்ரி நினைக்கிறான், அல்லது, அது இரவு நேரமாயிருந்தால் அவன் எதைப்பற்றியுமே சிந்திப்பதில்லை. இப்படி நான் சொல்வதால், ஒரு மிக அவசரமான காலகட்டத்தில், மிக நெருக்கடியான நேரத்தில், உதாரணத்திற்கு, ஒருவருடைய உயிருக்கே ஆபத்து என்கிற நிலையில் தனது மனைவி தனக்கு துரோகம் செய்கிறாள் என்று ஒரு மனிதர் தகுந்த காரணங்களின் அடிப்படையில் சந்தேகப்படுகிறார் என்கிற நிலையில், வெகு சில மிக உயரிய மனக்கட்டுப்பாடு உடைய வெகு சிலரைத் தவிர, மற்றவர்கள் அது குறித்து எதுவுமே சிந்திக்காமல், தங்களால் அது குறித்து எதுவும் செய்யவியலாது என்ற புரிதலில் வாளாவிருந்துவிட முடியும் என்று நான் சொல்வதாக அர்த்தமல்ல. ஆனால், வழக்கமான நாட்களின் வழக்கமான பிரச்சனைகளை, அவற்றை எந்தவகையிலாவது கையாண்டாகவேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டாலொழிய சிந்திக்காமலிருந்துவிடுவது சாத்தியமே. ஒரு பிரச்சனையை உரிய நேரத்தில் உரிய அளவாக எண்ணிப்பார்ப்பதை வழக்கமாகக் கொண்ட, அவசியமில்லாதபோதும் எல்லாப் பிரச்சனைகளையும் எண்னிக்கொண்டேயிருக்காத ஒருவித ஒழுங்கமைவு கொண்ட கட்டுப்பாடுடைய சிந்தனைப்போக்கை வளர்த்துக்கொண்டால் நம்முடைய மகிழ்ச்சியும், செயல்திறனாற்றலும் பன்மடங்கு பெருகும் என்பது மலைக்கவைக்கும் உண்மை. கவலையளிக்கும் அல்லது கடினமான முடிவு அல்லது தீர்வை எட்டியே ஆகவேண்டும் என்ற கட்டாயமிருப்பின், தேவையான தரவுகள் எல்லாம் கிடைத்தவுடன் கையிலுள்ள பிரச்சனைக்கு உங்களுடைய ஆகச்சிறந்த கூரிய, தெளிந்த சிந்தனையை அளித்து அதன் அடிப்படையில் ஒரு தீர்வை எட்டவும். அப்படியொரு முடிவை எடுத்துவிட்ட பிறகு, பிரச்சனை குறித்த புதிய உண்மை ஏதாவது தெரியவரும் வரை உங்கள் முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தாதிர்கள். முடிவெடுக்க முடியாத நிலையை விட மிகவும் மனச்சோர்வளிக்கும் விஷயம் ஏதுமில்லை. முடிவெடுக்கவியலாததை விட மோசமான அளவு அர்த்தமற்ற, பயனற்ற வீண்விரய விஷயம் வேறெதுவும் இல்லை. 

நமக்குக் கவலையையும் பதற்றத்தையும் உண்டாக்கும் விஷயத்தின் முக்கியத்துவ மின்மையைப் உணர்ந்துகொள்வதன் மூலம் பெருமளவு கவலைகளையும் அலைக் கழிப்புகளையும் இல்லாமலாக்கிவிட முடியும். எனது வாழ்நாளில் நான் நிறைய உரைகள் ஆற்றியிருக்கிறேன். ஆரம்பத்தில் பார்வையாளர்களைப் பார்த்து மிகவும் பயந்தேன். அந்த பயமும் பதற்றமும் என் உரைகளைப் பெரிதும் பாதித்தன. சொற்பொழிவாற்றுவது என்பது எனக்கு அத்தனை அச்சமூட்டியதால் நான் பேசப்போவதற்கு முன்பு என் கால் உடைந்துவிட்டால் நன்றாக இருக்குமே என்ற எதிர்பார்ப்பு எனக்குள் எப்போதுமே இருந்தது. சொற்பொழிவாற்றி முடித்தவுடன் அதில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் நான் மிகவும் சோர்ந்துபோவேன்.சிறிது சிறிதாக , நான் நன்றாகப் பேசுகிறேனோ, மோசமாகப் பேசுகிறேனோ – அஹ்டனால் உலகுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. இந்தப் பிரபஞ்சம் எப்போதும் இருப்பதைப்போலவே தான் இருக்கும் என்று நினைக்கும்படி என்னை நானே பழக்கப்படுத்திக்கொண்டேன். நான் நன்றாகப் பேசினேனா அல்லது மோசமாகப் பேசினேனா என்பதை பற்றி நான் கவலைப்படாமல் இருந்தால், என் பேச்சு மோசமாகிவிடுவதில்லை என்பதை கண்டுகொண்டேன். என் மன அழுத்தம் படிப்படியாக மறைந்து ஏறத்தாழ இல்லாமலாகிவிட்டது. நம்முடைய மன அழுத்தத்தின் பெரும்பகுதியை இவ்விதமாகக் கையாளமுடியும். நாம் செய்வதெல்லாம் மிக முக்கியமானவை, முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நாம் அனுமானித்துக்கொள்கிறோம். ஆனால், உண்மையில் அப்படியொன்றுமில்லை. நம்முடைய வெற்றிகளும், தோல்விகளும் அப்படியொன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவையல்ல.

மிகப்பெரிய துயரங்களைக்கூடக் கடந்துவாழ முடியும்; நமது வாழ்க்கையில் இனி மகிழ்ச்சியே இல்லாமல் செய்துவிடும் என்று தோன்றும் பிரச்சனைகள் கூட காலப்போக்கில் மங்கி மறைந்துவிடும். ஒரு கட்டத்தில்  அவற்றின் தீவிரத்தை நினைவுபடுத்திப்பார்ப்பதுகூட நம்மால் முடியாத காரியமாகிவிடும். ஆனால், இத்தகைய சுயஞ்சார் அக்கறைகளைக் காட்டிலும் பெரிது, ஒருவருடைய ‘ஈகோ’ உலகத்தின் பெரிய பகுதியெல்லாம் கிடையாது என்ற உண்மை. ஒரு மனிதர் சுயத்தைக் கடந்துசெல்லும் ஒன்றிடம் தனது எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் ஒருமுகப்படுத்தியிருப்பாரேயானால் அவனால் வாழ்வின் சாதாரணமான பிரச்சனைகளில் ஒருவித அமைதியை கண்டறிய முடியும். அப்பட்டமான தன்முனைப்புவாதிக்கு அது முடியாத காரியம்.

நம் நரம்புகளுக்கு மிகவும் சுகாதாரமானது என்று அழைக்கப்படக்கூடியவற்றைப் பற்றி ஆய்வலசல்களே இல்லையெனலாம். தொழிற்துறை சார் உளவியல் இந்த உடல்நோர்வு, உளச்சோர்வு குறித்து அகல்விரிவான விசாரணைகளை மேற்கொண் டுள்ளது என்பது உண்மைதான். அந்த ஆய்வலசல்கள் மூலம், நாம் ஒன்றை நீண்ட நேரம், நீண்ட காலம் செய்துகொண்டே யிருந்தால் இறுதியில் நாம் மிகுந்த சோர்வுக்காளாவோம் என்பதை கவனமாய்த் திரட்டிய புள்ளிவிவரங்களிலிருந்து நிரூபித்திருக்கிறது – இந்த விளைவை, அறிவியலின் ஆடம்பரமான அணிவகுப்பில் லாமலே அனுமானிக்க முடியும்.  உளவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட சோர்வு குறித்த ஆய்வுகள், கணிசமான அளவு பள்ளிக்கூடக் குழந்தைகளிடம் காணப்படும் சோர்வு குறித்த ஆய்வலசல்களும் இருந்த போதிலும்,   முக்கியமாக தசைசார் சோர்வையே கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பவை. ஆனால் இவற்றில் எதுவுமே முக்கியமான பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொள்ளவில்லை.

நவீன வாழ்க்கையில் முக்கியமான வகை சோர்வு என்பது எப்போதுமே உணர்வுரீதியான, மனரீதியான சோர்வாகவே இருக்கிறது; முற்ற முழுக்க அறிவுத்திறன் சார் சோர்வு, முற்ற முழுக்க தசை சார்ந்த சோர்வைப்போலவே, அதனுடையதேயான நிவாரணத்தைத் தூக்கத்தில் உற்பத்திசெய்கிறது. அறிவுத்திறன் சார்ந்த கடின உழைப்பை, உணர்ச்சிகளுக்கு வேலையற்ற உழைப்பை, மேற்கொள்ளவேண்டிய நிலையிலிருக்கும் எந்த நபரும் – எடுத்துக்காட்டாக, அகல்விரிவான எண்கணிதக் கணக்கீடுகளைச் செய்யவேண்டியிருப்பதுபோல் – அந்த நாள் வரவாக்கிய சோர்வை ஒவ்வொரு நாளின் முடிவிலும் தூங்கிச் சரியாக்கிக்கொள்வார். ஏற்பட்ட சோர்வு என்னும் பாதிப்பு அதிகமாக வேலை செய்ததன் காரணமாக உண்டாவதாகச் சொல்லப்பட்டாலும். அது அரிதாகவே நிகழ்கிறது. ஆனால், ஏதோ கவலை அல்லது பதற்றம் காரணமாகவே அந்த சோர்வு உண்டாகிறது. உணர்வுரீதியான சோர்வின் பிரச்சனை அது ஓய்வில் குறுக்கிடுகிறது. ஒரு மனிதர் எத்தனைக்கெத்தனை சோர்ந்துபோகிறாரோ அத்தனைக்கத்தனை அவரால் வேலை செய்வதை நிறுத்த முடியாமல் போய்விடுகிறது. நரம்புத்தளர்ச்சியின் / உச்சமான nervous breakdown (மன அழுத்தம், மனமுறிவு)ஐ ஒருவர் நெருங்கிக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகளில் ஒன்று, அவருடைய வேலை அதிமுக்கியமானது என்ற நினைப்பும், வேலையிலிருந்து சவிடுமுறை எடுத்துக்கொண்டால் பேரழிவுக்கு அது வழிவகுக்கும் என்ற நம்பிக்கையாகும்

நான் ஒரு மருத்துவம் சார்ந்த நபராக இருப்பின், தனது வேலை மிக மிக முக்கியம் என்று நம்பும், பாவிக்கும் எல்லா நோயாளிகளுக்கும் விடுமுறை தேவை என்று பரிந்துரைப்பேன். அதிக வேலைப்பளுவினால் ஏற்பட்டிருப்பதாகத் ஹ்டோன்றும் மன அழுத்தம் என்பது, எனக்குத் தனிப்பட்ட அள்வில் மிகவும் பரிச்சயமாயிருக்கும் எல்லோர் விஷயத்திலும், வேறு ஏதோ உணர்வு சார்ந்த பிரச்சனை காரணமாகவே உருவானதாக இருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க அதீதமாக உழைக்கிறார் நோயாளி. தனது வேலையைத் தாமதப்படுத்துவதையோ, தவிர்ப்பதையோ அவர் தீர வெறுக்கிறார். காரணம், அவர் அப்படிச் செய்தால், பின் அவருடைய அந்தப் பிரச்சனையிலிருந்து, அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்,  கவனத்தைத் திருப்ப அவருக்கு வேறு எதுவுமே இல்லாமல்போய்விடும்.  அவருக்கிருக்கும் இக்கட்டு நிலை, வங்கிக்கணக்கு காலாவதியாகிவிட்டதாக, அவர் போண்டியாகி விட்டதாக இருக்கலாம். அத்தகைய விஷயங்களில் அவருடைய கவலை என்பது அவருடைய பணியோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால், அதுவும் கூட, அவரது பிரச்சனை அவரை நீண்ட நேரம் பணியாற்றச் செய்யும் சாத்தியப்பாடு உண்டு. அதன் விளைவாய்,  அவரால் விஷயத்தைத் தெளிவாக அலசிப்பார்க்க முடியாமல் போகும் நிலையும், அதன் காரணமாய், அவர் குறைவாகவே வேலை செய்திருந்தாலும்கூட சீக்கிரமே அவர் போண்டியாகியிருக்கவும் வழியுண்டு. எப்படிப்பார்த்தாலும், இத்தகையோர் ஒவ்வொருவர் விஷயத்திலும், உணர்வுரீதியான பிரச்னை தான் மன அழுத்தத்திற்கும் நரம்புத்தளர்ச்சிக்கும் வித்திடுகிறதே தவிர வேலைப்பளு அல்ல,

(இன்னுமுண்டு)

Series Navigationஆறுதலாகும் மாக்கோடுகள்மழைபுராணம் – 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *