This entry is part 5 of 7 in the series 9 பிப்ரவரி 2025

ரவி அல்லது

முக்கோணத்தில்
முளைத்திருக்கும்
கொம்பான வளைவுகளையும்.
சதுரத்தில்
நெளிந்திருக்கும்
பின்னல்
கோலங்களையும் பார்க்கும்பொழுதெல்லாம்
அம்மாவின்
நினைவு வரும்.
அவரைப் போன்ற
ஒருவர்
இங்கிருப்பது
சற்றே
ஆறுதலாகத்தான்
இருக்கும்.
கடக்கும் கணம்
நேசத்தில்
ஏக்கமாக மனம் எட்டிப்பார்க்கும்.
கவனம் பெறாத
மாக்கோலத்தைப்போல
கண்டுக்கொள்ளப்படாமல்
இங்கு

இவர்கள்
இருப்பார்களோ என்ற
கவலையோடு
கடப்பது
ஒவ்வொரு முறையும்
நடந்தேறும்
இல்லாமையின்
இன்னலின்
நெருடலாக
எங்கேயும்
எப்பொழுதும்.


-ரவி அல்லது.
ravialladhu@gmail.com

Series Navigationசாம்பல்(பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் ‘தி காங்க்வெஸ்ட் ஆஃப் ஹாப்பிநெஸ்’ நூலின் அத்தியாயம் – 5