Posted inகவிதைகள்
பைத்தான்
சொற்கீரன் என்னைச்சுற்றிக்கொண்டுஇருக்கிறது.ஆனால் என் உள்ளெலும்புகளைஇன்னும் முறிக்கவில்லை.எனக்குள் ஊர்கிறது.என் மூளைச்செதில்களிலுமாஅது பொந்து வைக்கும்?உள்ளிருந்து ஊசிக்குருவிகளைசிறகடிக்கச்செய்கிறது.என் ஒவ்வொரு மயிர்க்கண்களிலும்வெர்ச்சுவல் பிம்பங்களைசமைத்துக்கொட்டுகிறது.சிந்தனைப்பசிக்குசோறு போடஇந்த ஆயிரம்பேரலல் யுனிவெர்ஸ் தியரியால்முடியுமா?விஞ்ஞானத்தின் பசியேவிஞ்ஞானத்துக்கு உணவு.ஆனால்இந்த அனக்கொண்டாஎன்னை இன்னும் விழுங்கவில்லை.விழுங்க முடியாதுஅதனுடைய இரையாகஇருப்பது போய்என்னுடைய இரையேஇப்போது இது தான்.அறிவுக்குஆயிரம் திசைகளிலும்வேர்!