சிறுகதை ஒன்றை வாசித்தேன்!

சிறுகதை ஒன்றை வாசித்தேன்!

கலைவாணன் கணேசன் ஓர் இலக்கிய விமர்சகரிடம் ஒருவர் கேட்டார்: “இக்கவிதையில் அது  சரியில்லை! இது சரியில்லை! என்று சொல்கிறாயே, உன்னால் ஒரு கவிதை எழுத முடியுமா ?” அவர் சொன்னார்: “ஒரு நாற்காலி செய்ய ஆர்டர் கொடுத்தேன். தச்சர் செய்து கொண்டு…
யாவிற்குமான பொழிதல்.

யாவிற்குமான பொழிதல்.

ரவி அல்லது.  சூழும் கருமேகம்  விரைந்தோட வைத்தது யாவையும் அதனதன் காரணங்களுக்கு அச்சம் மேலிட.  பொழிந்து விடும் கன மழைக்கான குளிர் காற்றை வெளியிலிருப்பவர்கள் ரசிப்பதாக இல்லை குளிர்மை கூடியிருந்தாலும். வீழ்ந்து கிடக்கும் விவசாயிகள் சாலையோரம் தானியங்களை கூட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள்…
அதிபர் பொ. கனகசபாபதி கனடாவில் நினைவுகூரப்பட்டார்.

அதிபர் பொ. கனகசபாபதி கனடாவில் நினைவுகூரப்பட்டார்.

குரு அரவிந்தன் மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 4-9- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால்…
மேவிய அன்பில் திளைக்கும் கருணை

மேவிய அன்பில் திளைக்கும் கருணை

ரவி அல்லது கைகளசைத்தஇடப்பக்கம் நின்றுருந்தஇரு சிறுவர்களின்கையிலிருந்ததுஇனிப்பாக இருக்குமெனநினைத்தேன்.வேகமாகவாகனத்தில்வந்தபொழுதுஅவதானிக்க தவறியதால். கூப்பிடு தூரத்தைகடந்துவிட்ட போதும்திரும்ப நினைத்ததுபிறந்த நாளுக்குஇனிப்பு கொடுக்கநினைத்திருக்கும்.அவர்களின் அறச் சிந்தனையைஉதாசீனம் செய்யலாகாது.ஆட்களைப் பார்த்துவருவது இல்லைஅறமென்பதனால். முன்பொரு முறைசுட்டெரிக்கும் வெயிலின்மதியப்பொழுதில்கல்லூரி மாணவர்கள்கரும்பு பானம்வாங்கிக் கொடுத்தார்கள்தாகத்தணிதலாககடந்து செல்கிறவர்களுக்கு.பிறந்த நாளுக்கென்றுசொன்னாலும்கைபேசியின்விருப்பு எண்ணிக்கை கூடலின்ஆசையென்பதைமறுக்கவியலாதுநற்பயனாகவந்தவர்களின்உள்ளம் குளிர்ந்தாலும். திரும்பிச்…
மன்னிப்பு

மன்னிப்பு

பென்னேசன்            இதுவரை ஐந்து முறை   வாட்ஸாப் அழைப்பை நிகராகரித்து விட்டான் ருக்மாங்கதன். இப்போது ஆறாவது முறையாக மீண்டும் அழைப்பு. ஒலிப்பானை அமைதிப்படுத்தியிருந்தாலும் தொலைபேசித் திரை மீண்டும் மீண்டும் ஒளிர்ந்து அமைதியானது. நிச்சயம் மெசேஜ் அனுப்பியிருப்பான் மாங்கேலால்.  இடது பக்கத்து இருக்கைக்காரன்…
கோமா

கோமா

ஜீயெஸ் வானத்தின் இருளை இரண்டாகக் கிழித்துக் கொண்டு,  பல கிகாவாட் சக்தியோடு அந்த ஹாஸ்பிடல் வளாகத்தை  தாக்கியது அந்த மின்னல். தொடர்ந்து, காதை பிளக்கும் ஓசையுடன் பாறாங்கற்களை உருட்டி விட்டாற்போல இடியும் இறங்கியது. அந்த உக்கிரசக்தியை தாங்க முடியாமல் அந்த ஹாஸ்பிடலில்…

நீதி வழுவா நெறி முறையில்.

ரவி அல்லது பேச்சற்ற பின்னிரவு நேரத்தில்விழுங்கியஉணவு கவலத்திற்குஅம்மாவின் கேவல்தெரியாது. சிருங்காரித்துசேர்ந்தமர்ந்துசெல்லும்வாகனத்தின்டமா டமாவின்கரும்புகையோடானமல்லிகை வாசனைவியக்க வைப்பவர்களுக்குஅம்மாவின்விசும்பல்தெரியாது. பிறிதொரு சமயம்மூன்றாம் வகுப்பில்சாயலொத்த ஒருவன்இருக்கிறானென்றவியப்பில்சொன்னதற்குஅம்மாஅழுததுஅப்பொழுதுஅதன் காரணம்எனக்குத் தெரியாது. ஆள் காட்டி விரலுக்குஅசைந்தாடும்கூட்டத்திற்குஅறக்கூற்றானஅப்பாநீதியாகஎனக்குள்நின்றிருந்ததைபொட்டழிக்காமல்புறப்பட்ட அம்மாபொசுக்கிவிட்டுபோனது அவருக்கே தெரியாது. நடு நிசிகனவெனநான்நினைத்தஒரு கேவல்…ஒரு அறை…ஒரு கெஞ்சலின்…பொருட்டாகசிறாரில் தொடங்கிவிடுதி மாறிவிடுதியாகவேலையெனவெகு…
போகாதே நில்.

போகாதே நில்.

மீனாட்சி சுந்தரமூர்த்தி. 'இராகவா நாளைக்கு அரைநாள் லீவு போட்டுட்டு வந்துடு''எதுக்குமா,இந்த வாரம் முழுக்க லீவே போட முடியாது''ஏற்கெனவே மூணுபேர் லீவுல இருக்காங்க மா''ஏண்டா உன்ன அரை நாளுதானே போடச் சொல்றேன்''அதான் எதுக்கு னுதான் சொல்லேன்''நாளைக்கி வேலூர்ல ஒரு பொண்ண பார்க்கப் போறோம்''சரி…
ஆய்ச்சியர் குரவை – பாகம் ஒன்று

ஆய்ச்சியர் குரவை – பாகம் ஒன்று

நா. வெங்கடேசன்  [ஶ்ரீம.பா.10.29.1]ஶ்ரீ ஶுகர் கூறுகிறார்:குதிர் கால இரவில் பூத்துக் குலுங்கும் மல்லிகைச் சரங்களைமுகில்வண்ணர் கண்ணுற்று காதல் வயப்பட்டு,திருவிளையாடல் புரிய திருவுளம் கொண்டார்தன் யோகமாயையினாலே![ஶ்ரீம.பா.10.29.2]அச்சமயம், கீழ்வானம் ஶிவக்கஅழகுற்ற தணொளிக்கரங்கள்தனைப் பரப்பிவெய்யக் கதிரோன் வெயிலில் வாடியவிரஜ மக்கள் தாபம் தீர திங்களுதித்தனன்.அஃது, நீண்டு…
நின்றாடும் சிதிலங்கள்.

நின்றாடும் சிதிலங்கள்.

ரவி அல்லது திரும்பி படுத்தபொழுதில்அழுத்தியபாயின் கோரைக்குநன்றிவிழித்துக் கிடக்கும்இச்சோம்பலில். நினைவகழ்ந்து நெஞ்சுக்குள் புகுந்தஅய்யா வியாபிக்கிறார்போர்வைக்குள் தலையணை நனைய. வாய்ப்பு வசதிகளற்ற நாளில்செக்கிலாட்டிய எண்ணையைசில்வர் பானைகளில்காய வைத்து காப்பதுஅன்றைய நாட்களில்கிராமிய வழக்கம். விளையாடிய வேளையில் யாவையும்எத்தி விழுந்து தட்டிவிட்டதன் கரைகள்பூமியில்பல மழைகள் பார்த்தும்அப்படியேதான் இருந்ததுநோகலின்…