Posted inகதைகள்
நதி வெள்ளத்தின் துளி!
குழல்வேந்தன் அன்றைக்கு எங்க ஹாஸ்ட்டல்ல நடந்த அந்த சம்பவத்த நெனச்சா? அடேயப்பா! இப்போ அந்த அனுபவத்த நெனச்சாலும் ஒடம்பெல்லாம் ஜில்லிட்டு போகுதுடா சாமி. நாங்க உசுரு பொழச்சது அந்த ஏசுவோட கருணையாகவோ மரியன்னையோட அருளாகவோ சூசையப்பரோட விருப்பமாகவோத்தான் நிச்சயம் இருந்திருக்கணும்…