Articles Posted by the Author:

 • ஒருவர் வேலை செய்யாமலிருக்க காங்கிரஸ் தரும் 72000 ரூபாயின் விளைவுகள்

  தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று நான் கருத ஒரே காரணம் இந்த 72000 ரூபாய். சமீபத்தில் அகில உலகமும் அண்ணாந்து பார்த்து அதிசயித்த இந்த அறிவிப்பு, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியால் பிரம்மாதமாக வெளியிடப்பட்டது. சீன தேசிய நாளிதழ் “தி இந்துவின்” செய்தியின் படியே, இந்தியாவில் உள்ள சுமார் 20 சதவீதம் ஏழைகளுக்கு வருடம் தோறும் 72000 ரூபாய் தரப்போவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். இந்த திட்டத்துக்கு ”நியாய்” என்று பெயர் […]


 • தி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.

  தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் ஊடகங்கள் உருவாக்கும் செய்திகள் நான் வெகுகாலமாகவே தமிழ் மற்றும் ஆங்கில செய்தி ஊடகங்களின் விமர்சகனாக இருந்திருக்கிறேன். அவ்வப்போது என் விமர்சனத்தை பதிவு செய்தும் வந்திருக்கிறேன். ஆனால் சமீபத்தில் ஊடகங்களின் அடிப்படையே மாற்றப்பட்டு இன்று அவை கட்சிகளின் நீட்சிகளாக ஆகியிருப்பது மிகுந்த அவலமானது. இதில் வெகுகாலமாக பத்திரிக்கை அறத்தை போற்றிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி போன்றவைகளும் இணைந்துகொண்டு வெகு கேவலமாக ஆகியிருப்பது மிகவும் வருத்தத்தை தருகிறது. கம்யூனிஸ்டு கட்சியின் நீட்சியாக ஏற்கெனவே ஆகிவிட்ட தி […]


 • தமிழக நாடாளுமன்ற தேர்தல்களில் யாருக்கு வெற்றி முகம்?

  தமிழகத்தில் தேர்தல்கள் பொதுவாகவே திமுகவை சுற்றி சுழன்றிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அவ்வாறு சொல்வதற்கு காரணம் திமுகவுக்கு தமிழ்நாட்டில் சுமார் 25 சதவீதமே வாக்குக்கள் உண்டு என்பதால்தான். தமிழ்நாட்டில் யார் ஜெயிப்பார்கள் என்பது திமுகவுக்கு எதிர் வாக்குகள் சேர்ந்து நிற்கிறதா அல்லது சிதறியிருக்கிறதா என்பதை வைத்தே முடிவு செய்யலாம். திமுகவுக்கு எதிரான வாக்குக்களையும் அது எப்போது கூட்டணியில் சேர்த்துகொள்கிறதோ அப்போது திமுகவுக்கு வெற்றியும் கிடைக்கும். உதாரணமாக பாமகவின் வாக்குகள் அனைத்தும் ஒரு காலத்தில் திமுகவின் வாக்குக்களாக இருந்தவை. […]


 • சபரிமலை – தொடரும் போராட்டங்களும் வாதங்களும்

  சபரிமலை கோவில் பழக்கங்களை பல்வேறு விதங்களில் வரையும் அரசியல் மூன்று நிலைகளில் மையம் கொண்டுள்ளது. 1. இது பெண்களை அன்னியப்படுத்துகிறது. பெண்களின் உரிமையை நிலைநாட்டவேண்டும் 2. இது மாதவிடாயை தீட்டு என்று அசிங்கப்படுத்துகிறது. 3. இது இந்து மதத்தை பார்ப்பனர்கள் ஆக்கிரமித்ததால் இப்படிப்பட்ட பெண்ணுக்கு எதிரான நிலைப்பாடுகளை கோவில்கள் கொண்டிருக்கின்றன. இதே போலத்தான் தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் நுழைவதை பார்ப்பனர் எதிர்த்தனர். இன்று பெண்கள் நுழைவதை எதிர்க்கின்றனர். இந்த மூன்று அரசியல் வாதங்களுமே தவறானவை. மேலும் பிரச்னையை மேற்கத்திய […]


 • பழங்குடி அமெரிக்கர்களின் மீது கலாச்சார வன்முறையை நடத்திய கிறிஸ்துவப் பள்ளிகள் – மறுவிசாரணை தேவை

  அன்னா ஹால்   அமெரிக்க பெரும்பான்மை கலாச்சாரத்தில் பழங்குடி அமெரிக்கர்கள் பற்றிய உரையாடலே இல்லாமல் இருக்கிறது. பள்ளிக்கூட பாடங்களில் பழங்குடி அமெரிக்கர்களின் கலாச்சாரம் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. அமெரிக்க அரசியலிலோ அது பேசப்படுவதே இல்லை. சமீபத்தில் நான் அறிய நேர்ந்த ஒரு விஷயம், எவ்வாறு கிறிஸ்துவ நிறுவன பள்ளிகள் பழங்குடி அமெரிக்கர்களின் கலாச்சாரங்களின் மீது ஒரு அழிவை திட்டமிட்டு உருவாக்கின என்பதை பற்றியது. ஒரு காலத்தில் ஐரோப்பிய கலாச்சார விழுமியங்களே உயர்ந்தவை என்றும், எல்லோரும் ஒரே மாதிரி இருப்பது […]


 • சபரிமலை – நவீனத்துவம் விழுங்கும் இந்திய பாரம்பரியங்கள்

  இந்து மதம் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்திய பாரம்பரியங்களை ஒற்றை பார்வையில் அடைக்க ஆர்.எஸ்.எஸ் முயல்வதாக ராஜன் குறை போன்றவர்கள் எழுதுகிறார்கள். ஆனால், அதே வீச்சில், சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, பெண்கள் சமத்துவத்தை நிலைநாட்டியதற்கு கேரள முதல்வர் விஜயன் அவர்களுக்கும் நீதிபதிகளுக்கும் பாராட்டு கடிதம் எழுதுகிறார்கள். இதில் இருக்கும் முரண்பாடு அவர்களுக்கு வழக்கம்போல புரியவில்லை என்று நான் கருதுகிறேன். தமிழ்நாட்டிலேயே ஒவ்வொரு சாதியினரும் திருமணமும் ஒரே விதமாக நடப்பதில்லை. ஒவ்வொரு […]


 • நியூட்ரினோ ஆய்வு மையம், ஸ்டெர்லைட் தொழிற்சாலை – தமிழகம் அழிவுத்திசையில் செல்கிறதா?

  சின்னக்கருப்பன் முதலில் ஸ்டெர்லைட் பற்றி மட்டும் எழுதலாம் என்று இருந்தேன். ஆனால், நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்கக்கூடாது வைகோவின் கட்சி தொண்டர் ஒருவர் தீக்குளித்த பின்னால் அது பற்றி எழுதுவதே முக்கியம் என்று கருதி அதனை முதலில் எழுதுகிறேன். பிபிஸி செய்தி இவ்வாறு கூறுகிறது. //இதற்குப் பிறகு நியூட்ரினோ எதிர்ப்புக்கூட்டம் ஒன்று மதுரை பழங்காநத்ததில் நடைபெற்றது. இதில் வைகோ மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அதற்குப் பிறகு, மற்ற தலைவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரணி இணை […]


 • ஸ்டாலினிஸம் – ரத்த வகையல்ல, தக்காளி சட்னி வகை

  சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள் சமீபத்தில் ”ஸ்டாலின் பழமொழிகள்” என்று வகை வகையாய் எழுதப்பட்டு கிண்டலடிக்கப்படுவதை பார்த்திருக்கலாம். அறிமுகமில்லாதவர்களுக்கு ஒரு அறிமுகம் சமீபத்தில் ஸ்டாலின் தமிழ் பழமொழிகளை முன்னுக்கு பின் திருப்பி போட்டு பேசி கலகலப்பை ஏற்படுத்திவருகிறார். இவர் முன்னாலும் அப்படியே பேசியிருந்திருந்தாலும் அது இப்போதுதான் சமூக வலைத்தளங்கள் காரணமாக வெளியே பேசப்படுகிறது என்று நினைக்கிறேன். ஸ்டாலின் முன்பும் இப்படித்தான் பேசி வந்திருக்கிறார் என்று ஆதாரம் காட்டும்வரைக்கும், இது தற்போதைய ஸ்டாலின் பேச்சில் வந்திருக்கிறது என்று வைத்துகொள்வோம். சமீபத்தில் […]


 • சீமானின் புலம்பல் வினோதங்கள்

  அக்னி பரிட்சை என்னும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்வில் திரு சீமான் தனக்கே உரிய கோபத்தோடும் உணர்ச்சியோடும் “தம்பி”யாக எதிரே உட்கார்ந்திருந்த பேட்டியாளரிடம் சொன்ன விஷயங்கள் உங்களுக்கு புதியதாக இருந்திருக்காது. ஏனெனில் இலுமினாட்டி என்பது பரவலாக தமிழில் புழங்கிவரும் சொல்லாக கடந்த சில வருடங்களில் ஆகியிருக்கிறது. இலுமினாட்டி என்று தமிழில் எழுதி கூகுளில் தேடினார் 32800 பதிவுகள் இருக்கின்றன என்று சொல்லுகிறது. இந்த இலுமினாட்டி என்பது அமெரிக்க புராடஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் பரப்பிய கட்டுக்கதை. முக்கியமாக உலகமயமாக்கப்படும் அமெரிக்க […]


 • ஆர்.கே நகர் இடைத்தேர்தல், இதர இடைத்தேர்தல்கள்

  ஆர்.கே நகர் இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. நான் எதிர்பார்த்தமாதிரியே டிடிவி தினகரன் ஜெயித்திருக்கிறார். திருமங்கலம் பார்முலா என்று புகழ்பெற்ற பார்முலாவை ஒரு சுயேச்சை வேட்பாளர் செய்து காட்டியிருக்கிறார். தமிழக மக்கள் மீது அளவு கடந்த நம்பிக்கையை அவர் உருவாக்கியிருக்கிறார். இப்போது காந்திஜியே தமிழ்நாட்டில் தேர்தலில் நின்றாலும் காசு கொடுக்காமல் ஜெயிக்கமுடியாது என்ற அளவுக்கு ஆகியிருக்கிறது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், (தவறாகவும் இருக்கலாம்) டிடிவி தினகரன் சுமார் 10000 ரூபாய் ஒரு ஓட்டுக்காக கொடுத்திருப்பதாக அறிகிறேன். அதிமுக 6000 […]