author

ஜெயமோகனின் இந்தியா : ராஜன் குறையின் “தர்க்க” ரீதியான மறுப்பும் பூச்சாண்டி வேடக் கலைப்பும்

This entry is part 32 of 32 in the series 1 ஜூலை 2012

நண்பர் ராஜன் வழக்கம்போல அவர் பாணியில் நக்கலும் நையாண்டியுமாக ஜெயமோகனுக்கு பதிலெழுதியிருக்கிறார். http://mdmuthukumaraswamy.blogspot.com/அதனை இங்கே காணலாம். அந்த கட்டுரையிலிருந்து சில முக்கியமான பகுதிகளை இந்த கட்டுரையிலேயே மேற்கோள் காட்டுகிறேன். ராஜனின் கட்டுரை முழுவதும் விரக்தி நெடி அடிக்கிறது. தமிழ் “அறிவுஜீவி எழுத்துக்களின் என்னத்த கன்னையா” என்ற பெயரில் அவருக்கு அழியாத இடம் கிடைத்துவிடும் என்று கருதும் அளவுக்கு புலம்பி வைத்திருக்கிறார். இருந்தாலும், அவற்றை அவர் “தர்க்கரீதியான மறுப்பு” என்ற அடைப்பு வேறு கொடுத்துவிட்டதால், பேசிவிடுவோம் என்று நானும் […]

தமிழகத்தின் ஹம்ஸா கஷ்காரியும் சவுதி அரேபியாவின் மனுஷ்யபுத்திரனும்

This entry is part 30 of 31 in the series 19 பிப்ரவரி 2012

// இந்தியாவில் கருத்துச் சுதந்திரம் சம்பந்தமான பிரச்சினைகளில் எடுக்கப்படும் நிலைப்பாடுகள் பல சமயங்களில் பெரிதும் சுயசார்புகளை மையமாகக்கொண்டிருக்கின்றன. இவை ஒருபிரச்சினையின் ஆதாரமான கேள்விகளை பலவீனமடையச் செய்துவிடுகின்றன. பாதிக்கப்படும் நபர்களின் பின்புலங்கள் முரண்பாடுகளைக் காட்டிலும் முக்கியமானவை ஒரு சமூகத்தில் அரசு எந்திரத்தின் அதிகாரத்திற்கும் சிவில் உரிமைளுக்கும் இடையிலான பிரச்சினைகள். இந்த உரிமைகளை நாம் ஒருமுறை பாதுகாக்கத் தவறினால் அவற்றை மீண்டும் அடைவது கடினம். இங்கு பத்திரிகையாளர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் பல சயங்களில் இரட்டை நிலைப்பாடுகளே இருக்கின்றன. ஒடுக்குமுறை சார்ந்த பிரச்சினைகளில் […]

திமுக அவலத்தின் உச்சம்

This entry is part 32 of 32 in the series 24 ஜூலை 2011

திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன், அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும் என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். முதலமைச்சராக இருந்தால் என்னவேண்டுமானாலும் பேசலாம். ஒரு கும்பல் கைதட்டும் என்பதற்கு இந்த வரிகளே உதாரணம். சங்கரமடத்தில் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் மகன் அல்ல ஜெயேந்திரர். ஜெயேந்திரரின் மகன் அல்ல விஜயேந்திரர். எந்த சங்கரமடத்திலும் மகன் பதவி ஏற்பதில்லை. திருமணம் […]

ஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்

This entry is part 42 of 46 in the series 26 ஜூன் 2011

                            1975 ஆம் வருடம் ஜூன் 25 ஆம் தேதி எமர்ஜன்ஸி என்ற நெருக்கடி நிலை இந்திரா காந்தியால் அமல் செய்யப்பட்டது.  அதன் பொருட்டு வந்த சில அபு அப்ரஹாம் கார்ட்டூன்களையும் கார்ட்டூன் போன்ற  இங்கே பகிர்ந்துகொள்கிறேன்                               […]

காங்கிரஸ் ஊடகங்களின் நடுநிலைமை

This entry is part 43 of 46 in the series 19 ஜூன் 2011

வெகுகாலத்துக்கு முன்பு ஆனந்தவிகடனில் ஒரு நகைச்சுவை துணுக்கு வந்தது. – ஒருவர் இன்னொருவரிடம் கேட்கிறார். என்ன டப்பா மேல ராஜீவ்காந்தி படத்தை ஒட்டி ஹால்ல வச்சிருக்கீங்க? அவர் சொல்கிறார் டிவியில எப்பவும் இப்படித்தானே வருது? அதனால சீப்பா முடிச்சிட்டேன்.-   தூர்தர்ஷன் என்ற இந்திய அரசின் தொலைகாட்சி வந்த புதிதில் ராஜீவின் முகமே தினந்தோறும் எல்லா நேரமும் பார்த்து அலுத்த மக்கள் தொலைக்காட்சியையே வெறுக்கும் அளவுக்கு இந்திய அரசின் தொலைக்காட்சி இருந்தது. எப்போதும் இந்தி நிகழ்ச்சிகள். எப்போதாவது […]

இந்த வாரம் அப்படி: அல்லது ராமதேவின் போராட்டமும் காங்கிரஸின் சர்க்கசும்

This entry is part 1 of 33 in the series 12 ஜூன் 2011

முதுகுக்குப் பின்னே கத்தி திமுக என்ற கட்சியையே குழிதோண்டி புதைக்கும் வேலையில் காங்கிரஸ் ஈடுபட்டிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. முதலில் ராஜா, பிறகு கனிமொழி, இப்போது மாறன் சகோதரர்கள். அடுத்து என்ன முக அழகிரியா ஸ்டாலினா என்றுதான் கேட்க வேண்டும். ஆனால், திமுகவினர் ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் அல்ல. அவர்கள் கடந்த 7 வருடங்களாக காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசில் பங்கு வகித்துவருகிறார்கள். அதற்கு முன்னால் பாஜக ஆட்சியிலும் பங்கு வகித்திருக்கிறார்கள். 1999இலிருந்து 2011 வரைக்கும் சுமார் 12 […]

இந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,

This entry is part 37 of 42 in the series 22 மே 2011

ராஜீவ் விளம்பரங்கள் நேற்றைக்கு ராஜீவ் கொலையுண்ட நாளை நினைவு படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசின் அனைத்து துறைகளும் விளம்பரங்கள் வெளியிட்டிருக்கின்றன. சுற்றுலாத்துறையிலிருந்து மாசு கட்டுப்பாடு துறை வரைக்கும். அது மட்டுமல்ல, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இதே போல அனைத்து துறைகளும் ராஜீவ் காந்தி நினைவு நாளை நினைவு படுத்தி விளம்பரங்கள் வெளியிட்டிருக்கின்றன. இது இந்தியாவின் அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சிகளிலும் செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு இதற்காக செலவழித்த தொகை மட்டுமே சுமார் 65 கோடி ரூபாய் என்று […]

இந்த வாரம் அப்படி. ஒசாமா கொலை, ஜெயா மம்தா வெற்றி, பாஜக நிலை

This entry is part 6 of 48 in the series 15 மே 2011

ஒசாமா கொலை. காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் இந்தியாவின் இதர பகுதிகளில் நடந்த/ நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் ஒசாமாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏனெனில் ஒசாமாவின் அல்குவேதாவுக்கு இந்தியா ஒரு பொருட்டே இல்லை. அவரது குறியெல்லாம் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள்தான். அமெரிக்கா அரேபிய புனித பூமியில் கால் வைத்தததால் கோபம் கொண்டு அழிக்க கிளம்பியவர் அவர். ஒசாமா இரட்டை கோபுரங்களை தாக்கி அழித்தது வரை இந்தியாவில் நடந்துகொண்டிருந்த பயங்கரவாத செயல்கள் பயங்கரவாத செயல்களாக அமெரிக்காவாலும் ஐரோப்பாவாலும் பார்க்கப்பட்டதே […]