author

யுவன்-ன் “ஆரவாரக் கானகம்”

This entry is part 8 of 51 in the series 3 ஜூலை 2011

திரைப்படத்தின் பின்னணி இசையெனும் இளையராஜாவின் கோட்டையில் தானும் ஜெயித்துக்கொடி நாட்டியிருக்கிறார் யுவன் ” ஆரண்ய காண்டத்தில்”, யுவனின் பின்னணி இசைக்கெனவே படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தோணுமளவுக்கு. சண்டைக்காட்சிகள் , மற்றும் ஆக்ஷ்ன் த்ரில்லர் வரிசையில் இளையராஜாவுக்கு ஒரு “உதயம்” படத்தில் ரகுவரன் தோன்றும் காட்சிகளில் வந்த பின்னணி இசை என்றும் மறக்க இயலாதது ,மற்றும் பழஸிராஜாவில் மம்மூட்டி கைகளில் இரும்புப்பட்டா’வைச்சுற்றிக்கொண்டு சண்டை போடும் காட்சியில் சுழலும்போது மட்டும் காற்றை கிழிக்கும் இடம், பின் அந்த அடியை/வெட்டை […]

விளிம்பு நிலை மனிதர்களும் விடலைப்பையன்களும் (அவன் இவன்)- திரைவிமர்சனம்

This entry is part 27 of 46 in the series 26 ஜூன் 2011

ஆர்ப்பாட்டமான இசையுடன் தொடங்குகிறது திரைப்படம்.’எவளாவது இந்த மீசை விஷயத்த வெளிய சொன்னீங்க அப்பறம் இருக்கு சேதி’ என்று ஜமீன் கூறுவதுடன்.ஒட்டு மீசையை மறைப்பது போல் அவருக்குள் மறைந்து கிடக்கும் பல விஷயங்களுடன் நகர்கிறது அவன்-இவன் திரைப்படம். விஷால் வாழ்ந்திருக்கிறார் படத்தில் ஜி.எம்.குமாருடன்.விளையாட்டு பையனாக, முறுக்கேறி சண்டை பிடிக்கும் இளம் வாலிபனாகப்பார்த்த விஷால் இந்த படத்தில் ஒரு விஷுவல் ட்ரீட்.கொஞ்சம் பெண் தன்மை தன்னிடத்தில் கூடியவராக அபினயித்திருக்கிறார்.ஒவ்வொரு அசைவிலும் அந்த பாத்திரத்தை செதுக்கி அதை வெளிக்கொணரச்செய்திருப்பவர் பாலா என்பதில் […]

சின்னப்பயல் கவிதைகள்

This entry is part 24 of 46 in the series 26 ஜூன் 2011

ஆள்காட்டி மழை ஜன்னல் கம்பிகளில் தொற்றிக்கொண்டிருந்த மழை நீரை ஆள்காட்டி விரல் கொண்டு ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை அழுத்தி வடித்து விட்டேன். மறு நாள் மழை வரவில்லை. ஆள்காட்டி விரல் காரணமாயிருக்குமோ ? அஞ்சறைப்பெட்டி அஞ்சறைப்பெட்டியில் அம்மா போட்டு வைத்த மீதக்காசில் சீரகத்தின் மணமும் கடுகின் வாசமும் வெந்தயத்தின் நெடியும் மஞ்சள்பொடியின் கமறலும் மிளகின் காரமுமாக அடித்த வாசம் இன்னும் என் மனதினுள் வட்டமடிக்கிறது அந்தக்காசில் வாங்கித்தின்ற மிட்டாயின் மணம் ஏனோ நினைவில் இல்லை. சின்னப்பயல் […]

கட்டங்கள் சொற்கள் கோடுகள்

This entry is part 15 of 46 in the series 19 ஜூன் 2011

கட்டங்கள் வரைந்து சொற்களை உள்ளே இட்டேன் அவற்றுக்குள் தொடர்பு ஏற்படுத்த கோடுகள் இழுத்தேன் கட்டங்கள் ஒன்றோடொன்று இணைந்தன சொற்கள் அடைபட்டுப்போய் பேச மறுத்தன கட்டங்களை நீக்கி விட்டு சொற்களையும் கோடுகளையும் இணைத்து விடலாம் என எண்ணினேன் கட்டி வைத்த சொற்களும், இணைக்க இழுத்த கோடுகளும், ஒட்ட மறுத்தன மீண்டும் கட்டங்களை வரைந்தபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. கட்டங்களும், இணைப்புக்கோடுகளும் ஒரு சேரக்காணாமல் போயின எஞ்சிய சொற்கள் என்னைக்கேலி செய்து கொண்டிருந்தன.   – சின்னப்பயல் ( chinnappayal@gmail.com […]

அறிகுறி

This entry is part 10 of 33 in the series 12 ஜூன் 2011

  தனக்குத்தானே உருகிக்கொள்வது, பின் தேற்றிக்கொள்வது, நடந்தவற்றை மறுகோணம் கொண்டு பார்ப்பது, இப்படி நடந்திருந்தால் நான் எப்படியோ இருந்திருப்பேன் என்று நினைத்துக்கொள்வது, ஏற்கனவே நடந்தவற்றில் தனக்கு பிடித்த வகையில் முடிவுகளை மாற்றி வைத்துக்கொண்டு மனதிற்குள்ளேயே மகிழ்ச்சி கொள்வது, பின் அதைப்பற்றி பலரிடம் பெருமையாகப்பேசுவது போல நினைத்துக்கொள்வது, கடைசியில் மாய்ந்து மாய்ந்து அதைப்பற்றியே கவலை கொள்வது,   – இவை எல்லாம் எதற்கான அறிகுறிகள்?!  

சிற்சில

This entry is part 20 of 46 in the series 5 ஜூன் 2011

சில நிபந்தனைகளுடன் சிலரை ஏற்றுக்கொள்ள முடிகிறது.   சில புரிதல்களுடன் சிலருடன் ஒத்துப்போக முடிகிறது   சில வேறுபாடுகளுடன் சிலருடன் வாழ்ந்து விட முடிகிறது   சில சகிப்புகளுடன் சிலருடன் பயணிக்க முடிகிறது.   சில துருத்தி நிற்கும் உண்மைகளுடன் சிலரைக் கடந்து செல்ல முடிகிறது.   சில ம்றைத்து வைக்கப்பட்ட பொய்களுடன் சிலருடன் தொடர்ந்து இருக்க முடிகிறது.   சில உறுத்தல்களுடன் இது போன்ற சில கவிதைகளை வாசிக்கவும் முடிகிறது.    

ராக்கெட் கூரியர்

This entry is part 15 of 43 in the series 29 மே 2011

அன்றைக்கும் கையில் பேப்பர்களோடு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார் சுப்ரமணியன்.எஸ்.டி.டி.பூத்தைத் தேடிக்கண்டுபிடித்துப் பேசிவிட்டு எரிச்சலோடு”இதே பொழப்பாப் போச்சு” எத்தன தடவ தான் போன் பண்றது, சலித்துக்கொண்டே வந்தவர் செருப்பைக்கழட்டிப்போட்டு விட்டு , வீட்டுக்குள் வந்ததும் “சிவகாமி” என  மனைவியை அழைத்தவாறே அருகில் கிடந்த சேரில் அமர்ந்தார்.பின்னர் காலரைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு “ஸ்..அப்பாடா..என்னா வெய்யில்..” என்றவரை “ என்ன இன்னிக்காவது அந்தக் கூரியர்காரன் ஏதாவது சொன்னானா? “எனக்கேட்டவாறு தண்ணீர் டம்ப்ளருடன் வந்தவளிடம் “ கிழிச்சானுங்க, திரும்ப திரும்ப கிளிப்பிள்ள சொல்ற […]

வானம் – மனிதம் (திரைப்பட விமர்சனம்)

This entry is part 42 of 48 in the series 15 மே 2011

  தனது தம்பியைத் தேடி அலையும் ஒரு நடுத்தர வயது முஸ்லீம்,ராணுவத்தில் சேர மறுத்து பாடகனாக விரும்பும் ஒருவன்,தனது ஆடையை எப்போதும் தானே நெய்ய இயலாத ஒரு நெசவாளி,அடுத்த மாசம் சேர்த்து தாரேன் என்று சொன்னாலும் இணைப்பைத் துண்டித்து செல்லும் ஒரு சாதாரண கேபிள் டிவி’க்காரன், தனது துணை திருநங்கை உயிருக்கென எத்தனை முறை வேணாலும் உங்ககூடப்படுக்கிறேன்னு , சுகத்த விக்கிற பொண்ணுக்கும் மனசிருக்கிது பாரய்யான்னு சொல்ற ஒரு பரத்தை, இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு யுவனின் பலமான பின்னணி […]