author

குற்றமுள்ள குக்கீகள் (cookies)

This entry is part 5 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

உனது செல்பேசியைக் கொந்த முயன்றதில் எனது சில நழுவிய அழைப்புகளும் கூந்தல் பராமரிப்பிற்கான குறுஞ்செய்திகளும் மட்டுமே கிடைத்தன உனது மின்னஞ்சலை புகுந்து படித்ததில் சில எரிதமும், எண்ணவே இயலாத அளவு பணப்பரிசு அஞ்சல்களும் மட்டுமே கிடைத்தன உனது இணைய அரட்டைகளை இடைமறித்து வாசித்துப்பார்த்ததில் கட்டுப்பட்டித்தன யுவதியின் சொல்லாடல்கள் மட்டுமே கிடைத்தன உனது சமூக வலைத்தளங்களின் பகிர்வுகளில் எந்த சுவாரசியமுமற்ற பொதுவான விஷயங்கள் மட்டுமே கிடைத்தன எனக்குள் அழிக்க இயலாத குற்றமுள்ள குக்கீகளாய் (cookies) இவையனைத்தும் மண்டிக்கிடக்கின்றன எப்போதும். […]

சொல்வலை வேட்டுவன்

This entry is part 18 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

தொடங்கத்தயங்கி நின்ற எனது காற்புள்ளிகள் உனது மேற்கோள்கள் தொடத்தயங்கும் உனது பதங்கள் எனது வரிகள் தர்க்கங்களைக்கடந்து நிற்கும் உனது விவாதங்கள் எனது வாக்கியங்கள் பொருளை வெளிச்சொல்ல தாமே நாணி நின்ற உந்தன் சொற்கள் எனக்கு இடைவெளிகள் நீ விட்ட இடத்திலிருந்து நான் துவங்கினால் அது கவிதை நீ துவங்கினால் ? – சின்னப்பயல் ( chinnappayal@gmail.com)

நூலிழை

This entry is part 15 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

கவிதைக்கும்,பொய்க்கும் உள்ள தூரம் கனவுக்கும்,நனவுக்கும் உள்ள தூரம் நிழலுக்கும்,நிஜத்திற்கும் உள்ள தூரம் ஒப்பனைக்கும்,இயல்பிற்கும் உள்ள தூரம் அடங்கலுக்கும்,மீறலுக்கும் உள்ள தூரம் மனதிற்கும்,நினைவிற்கும் உள்ள தூரம் சொல்லுக்கும்,பொருளுக்கும் உள்ள தூரம் விழிப்பிற்கும்,உறங்கற்கும் உள்ள தூரம் உனக்கும் எனக்கும் இடையே உள்ள தூரம்…. சின்னப்பயல் – chinnappayal@gmail.com

அட்ஜஸ்ட்

This entry is part 9 of 47 in the series 31 ஜூலை 2011

காதலியோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா அவளுக்கே கணவனா ஆகியிருக்கலாம், வாத்தியாரோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா இந்நேரம் டிகிரி முடிச்சிருக்கலாம், கூட்டாளிகளோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா பிஸினஸ்ல இன்னும் நல்ல ப்ராஃபிட் பாத்திருக்கலாம், பங்காளிகளோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா சொத்தில கொஞ்சமாவது அனுபவிச்சிருக்கலாம், ஊர்க்காரனுங்களோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா கண்ட ஊருக்கும் போயி வேலைக்கி அலையாம இருந்துருக்கலாம், பேங்க் மேனேஜரோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா தலயில துண்டப்போடாம கெளரவமா திரிஞ்சிருக்கலாம், […]

காதல் பரிசு

This entry is part 18 of 32 in the series 24 ஜூலை 2011

ப்ரிட்னி ஸ்பியர்ஸ் பாடிக்கொண்டிருந்தாள் எம்.டீவியில் “Bombastic love , So Fantastic ” என்று சத்தம் போட்டுக்கொண்டு., “அந்த வால்யூமத்தான் கொஞ்சம் கொறக்கிறது , உனக்கு என்ன காது செவிடா ? டீவி முன்னாலதான ஒக்காந்துருக்க? ” உள்ளேயிருந்து ஸ்வேதா இரைந்த சத்தம் அவனுக்கு கேட்கவேயில்லை. “Where I’m Completely yours and you are mine ” விறுவிறு வென வந்தவள் கையிலிருந்த ரிமோட்டை பிடுங்கி வால்யூமைக்குறைத்தாள். ” ஏன் நல்லாத்தான பாட்றா ?, கேக்கவிட்டா […]

ஆர்வமழை

This entry is part 5 of 32 in the series 24 ஜூலை 2011

மழையில் எந்த மழை சிறந்தது? சிறு தூறலா, இல்லை அடித்துப்பிளக்கும் மழையா? வெறுமனே போக்குக்காட்டி விட்டு போகும் மழையா? அல்லது சிறிதும் எதிர்பார்க்காத கணத்தில் கிளையிலிருந்து சட்டெனப்பறந்து போகும் பறவை போல, தூறிக்கொண்டிருந்து விட்டு சட்டெனக்கலையும் மழையா? அல்லது நேற்றுப்பெய்த மழையா ? இல்லை, அது கொஞ்சமே பெய்தது. இன்று பெய்து கொண்டிருக்கும் மழையா? அது இன்னும் பெய்து முடியவில்லையே பிறகெப்படி சொலவது ? அன்று பெய்த மழை, நேற்று பெய்த மழை இன்றும் பெய்யும் மழை […]

கிறீச்சிடும் பறவை

This entry is part 10 of 34 in the series 17 ஜூலை 2011

  நாள் தவறாமல் வந்து என் ஜன்னல் கம்பிகளில் அமர்ந்து ஒரு சிறு பறவை கிறீச்சிடுகிறது என் கவனத்தைக்கவர.   எதை ஞாபகப்படுத்த ? மறந்துபோன இயற்கையுடனான நட்பையா ? அல்லது கடந்து சென்ற காலங்களை மீள் நினைவூட்டவா ?   எனினும் நாளையும் வரும் என்ற எதிர்பார்ப்பை என்னில் ஏற்படுத்துவதைத்தவிர. அது வேறொன்றும் செய்வதில்லை.   மேலும் அது ஒரு இறகையும் உதிர்த்துச்செல்வதில்லை எனக்கென.   சின்னப்பயல் – chinnappayal@gmail.com

அபியும் அப்பாவும்

This entry is part 22 of 38 in the series 10 ஜூலை 2011

சிகரெட் பிடிப்பதில்லை மது அருந்தும் பழக்கம் இல்லை பிற கெட்ட பழக்கங்கள் இல்லை – இவன் வேண்டாம்   வெள்ளி செவ்வாய் தவறாது கோவிலுக்கு போவான் இறைவழி நடப்பதில் தான் விருப்பம் வம்புதும்புக்கு போய் பார்த்ததில்லை – இவன் வேண்டாம்   அரட்டை அடித்துக்கொண்டே இருப்பான் தன்னோடு இருப்பவரை மகிழவைப்பதில் வல்லவன் சிரித்து மயக்கும் கலையில் எம்டன் – இவன் வேண்டாம்   உம்மணாமூஞ்சியாய் இருப்பான் தேவையற்ற வார்த்தைகள் பேசமாட்டான் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பான் […]

வட்டத்துக்குள் சதுரம்

This entry is part 20 of 38 in the series 10 ஜூலை 2011

சில சதுரங்கள் கூடி தம்மைக்கொண்டு ஒரு வட்டத்தை உருவாக்க முனைந்தன சில சதுரங்கள் அதற்கு ஒத்துக்கொண்டன சில அவற்றை சற்றுத்தள்ளி நின்று வேடிக்கை பார்த்தன ஒரு சதுரம் நாம் எவ்வளவு தான் முயன்றாலும் வட்டத்தை உருவாக்க முடியாது என வாதிட்டது அதனை பல சதுரங்கள் கூடி நையப்புடைத்தன அந்தச்சதுரம் வளைந்து நெளிந்து கோணல்மாணலாகியது அதைப்புறந்தள்ளி விட்டு மற்ற சதுரங்கள் மீண்டும் தம் வேலையைத்துவங்கின எவ்வளவு முயன்றும் அவை தம்மைக்கொண்டு ஒரு வட்டத்தை உருவாக்க இயலவேயில்லை தமது தோல்வியை […]

ஆமைகள் ஏன் தற்கொலை செய்து கொள்வதில்லை?

This entry is part 9 of 51 in the series 3 ஜூலை 2011

சற்றேறக்குறைய வெறும் அறுபது ஆண்டுகளே வாழ்வதில் சலித்துப்போகிறது நமக்கு. ஆமை முன்னூறு ஆண்டுகள் எப்படி ,ஏன் வாழ்கிறது ?! வாழ்ந்து என்ன சாதிக்கிறது ?! சொய்வு,கழிவிரக்கம், திரும்பத்திரும்ப அதே செயல்களை வாழ்வில் மீண்டும் மீண்டும் செய்தல், போட்டி,போராட்டங்கள், சலிப்பு,பேருவகை, தாங்கமுடியா துயரம் என எதுவும் அதன் வாழ்வில் உண்டாவதில்லையா..? இல்லை நம்மைப்போல் எல்லாவற்றையும் ரசித்துக்கொண்டு தான் வாழ்வைக்கடத்துகிறதா ? எனக்குத்தெரிந்த வரை அவை ஆழ்துயிலில் கிடத்தல், பேரண்டம் சுற்றி வரும் , அதைக்கடக்கும் நேரத்தில் ஒரு முறை […]