author

நீவிய பாதை

This entry is part 23 of 53 in the series 6 நவம்பர் 2011

பிறர் நிர்ப்பந்தித்த பாதையில் பலவீனமாய் பாதம் பதிக்கையில் முளைத்தது முதல் கோணல். அதிலிருந்து நீட்டிக்கப்பட்ட நேர்கோடும் தொடர்கின்றன மலை பாதை வளைவுகளாக… முற்றும் கோணலாகும் துற்சம்பவம் தடுக்க பட்டது, அக அகழ்வாராய்ச்சியினால்.. பயங்கள் மக்கியிருந்தது பலவீனங்களாக. ஒவ்வொன்றாய் அப்புறப்படுத்த படுத்த நீவி நேராகிறது புதிய பாதைகள்.. -சித்ரா (k_chithra@yahoo.com)

நெடுஞ்சாலை அழகு..

This entry is part 13 of 44 in the series 30 அக்டோபர் 2011

=============== பாலேடு சுருக்கங்களாய் மடிந்து மடிந்து – குளத்து நீரின் சிறு அலைகள். நீரேட்டின் மத்தியை பிடித்திழுத்து மேலே தூக்கி விசிற விரிந்தது போலொரு நீல வானம்- அதில் புரண்டோடும் மேக கூட்டம். இக்கொள்ளை அழகுக்கு இடையே கொணரிப் பட்டையில் அடுக்கபட்ட சந்தை பொருட்களாக நகர்கிறோம் அலுவலகம் நோக்கி நெடுஞ்சாலையில். -சித்ரா (k_chithra@yahoo.com)

சுடர் மறந்த அகல்

This entry is part 14 of 37 in the series 23 அக்டோபர் 2011

மாரியாத்தா…. சந்திகால வேளையில், ஓடி சென்று நெய்வேத்யத்தை கொரித்துக் கொண்டே சிவனிடம் அன்று நடந்தவைகளை பகிர தோன்றியது இல்லையோ ? மகிசாசுரன்களை வதம் செய்கையில், அசதியாக சாய சிவன் தோளை காணாது துவண்டது இல்லையோ ? பக்தர்கள் வரம் நிறைவேறி ஆனந்திக்கையில் நெகிழந்து ,அழுத்தி பிடிக்க சிவன் கரம் தேடாதோ? ஆர்த்தியின் பின்னொளியில் கண்டோம், உன்னை அம்மை தடுப்பவளாய் மட்டும் தனித்து இயங்கும் திடமான உன் ஆளுமையை பிரசாதமாக ,ஒரு துளியை சுவைத்திருந்தாலும் இந்த கதி வந்திருக்குமா […]

முத்து டிராகன் – சீன நாடோடிக் கதை

This entry is part 13 of 37 in the series 23 அக்டோபர் 2011

சியாவ் செங் என்ற சிறுவன், சீனாவின் ஒரு நகரில் தன் தாயுடன் வாழ்ந்து வந்தான். தாய்க்கு உதவியாக, தினமும் வீட்டிற்கு அக்கம்பக்கம் இருக்கும் காட்டுப் புற்களை வெட்டித் தருவான். அதைத் தாய், சந்தையில் விற்று, கிடைக்கும் பணத்தில் உண்ணத் தேவையான அரிசி, டம்பிளிங் என்னும் கொழுக்கட்டை செய்யும் மாவையும், குடிக்கத் தேவையான தேநீர் இலைகளையும் வாங்கி வருவார். ஒரு கோடை காலத்தில், எங்கும் வறட்சி ஏற்பட்டது. எல்லா பக்கங்களிலும் புற்கள் வாடிச் சாய்ந்திருந்தன. ஒரு நாள், தாய், […]

முடிவுகளின் முன்பான நொடிகளில்…

This entry is part 26 of 44 in the series 16 அக்டோபர் 2011

வெற்றியின் நொடிகளை கொண்டாடலாம் தோல்வியின் நொடிகளை தேற்றலாம் முடிவுகள் அறிவிக்கும் முன்புள்ள, மனதை கவ்வி முறுக்கும் நொடிகளை என்ன செய்வது? ஜெயிக்க வைக்க சொல்லி ஜபிப்பதா? ஆசீர்வதிப்பாரோ , மாட்டாரோ என்ற நிழல் தடுக்கி இடறுகையில் – கண்களை இடுக்கி வேகம் கூட்டி ஜபித்தாலும் மனக்கரைசல் திப்பிகளாய் தங்குவது நிற்பதில்லை சரித்திர நாயகர்களின் சாதனைகளின் நினைவுகளை துணைக்கு அழைத்தாலும் இறுகி விடுகிற நொடிகளில் ,உள்இறங்காமல் ஒழுகி ஓடி நழுவுகிறது நம்பிக்கைகள்.. மண்டை ஓட்டை அடைகாத்து என்னவாக போகிறது […]

கையாளுமை

This entry is part 41 of 45 in the series 9 அக்டோபர் 2011

காட்சி ஒன்று .. மறுத்து பேசும் பிள்ளைகளிடம் மன்றாடி மனு போட்டு, மாறுவேடம் தரித்து பயமுறுத்தி, கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொண்டு காட்சி இரண்டு .. உம்மென்றால் உம்மனாமூஞ்சிகளாகி, ஏனென்றால் எரிமலையாய் எழும் வயதான வீட்டு பெரியவர்கள் மனம் கோணாமலிருக்க கோணாங்கியாகி .. காட்சி மூன்று ..நான்கிலும் ஏதோவொரு உத்தியை கையாண்டதில் மான,ரோஷம்,வெட்கம் சூடு, சொரனை யாவும் இப்போது அஞ்சறை பெட்டியில்.. தாளிதத்திற்கு மட்டும் – சித்ரா (k_chithra@yahoo.com)

கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்

This entry is part 20 of 41 in the series 25 செப்டம்பர் 2011

”முன் ஜென்ம” கணக்கு காட்டி எனக்கு மறுக்கபட்டிருந்த அன்பை நான் மற்றவர்க்கு கொடுத்து விட்டால், தண்டனையென எனக்கு விதித்ததை எப்படி வசூளித்து கொள்வாய்? உன் செயல்களை அறிய முயன்று நான் தோற்கிற வரை நீ பரம்பொருள் தான்.. நிகழ்வுகளின் மூல கூறுகளை அறிய முற்படுவதையே விட்டுவிட்டால் உனக்கு என்ன பெயர் வைத்துகொள்வாய்? எதிர்காலத்தை கையில் கொண்டு வித்தை காட்டி மகிழ்கிறாய் எதுவாயினும் இருக்கட்டும் என நான் விட்டு விட்டால் உப்புசப்பற்று ஆகிவிடுமோ உனக்கு ? இப்படி ,நீ […]

காரணமில்லா கடிவாளங்கள்

This entry is part 23 of 37 in the series 18 செப்டம்பர் 2011

பெரு வட்டம் அதனுள் சிறுவட்டம் மீண்டும் உள்வட்டம் கருவட்டம் மையபுள்ளியாய் குறிபலகை ஒன்று.. மைதானத்தில் எவனோ நட்டுவிட்டான் வருவோர் போவோர் எல்லாம் மையத்தை நோக்கி எய்த ஆரம்பித்து விட்டனர் அம்பை.. பலகை வரை கூட செல்லாத , பெருவட்ட வளைவில் செருகிய , வட்டத்தை தொட்டு கவிழ்ந்த .- என சிதறியது பலதரப்பட்ட அம்புகள் தோல்வியென சுருங்கியது மனங்கள் குறிபலகை இருக்கிறது என்பதற்காக குறி எய்த வேண்டுமென எவர் சொன்னது ? கல்யாணம், குழந்தை, குட்டி சம்பாத்யம்,பணம்,காசு […]

இலைகள் இல்லா தரை

This entry is part 24 of 33 in the series 11 செப்டம்பர் 2011

உதிர்ந்த இலைகள் ஓர் நவீன ஓவியம் …. ‘உயிரின் உறக்கம்’ – என்ற தலைப்பில் இலைகள் அள்ளபட்ட தரை – சுவற்றில் ஓரம் சாய்க்க பட்ட வெற்று ஓவிய பலகை மற்றொமொரு நவீன ஓவியம் உதிரும் வரை – சித்ரா (k_chithra@yahoo.com)

நிலா மற்றும்..

This entry is part 43 of 54 in the series 4 செப்டம்பர் 2011

___________ மழை சேமிப்பு திட்டம்.. மொட்டை மாடியில் பொழிந்த மழைக்கென.. நிலா சேமிப்பு உண்டா ? மொட்டை மாடியில் பொழிந்த நிலவுக்கென .. அவசரகதி தட்டுபடாத பிறிதோரு நேரங்களில் ஒன்று கூடி நாங்கள் நிலா சோறு உண்ண.. மின்-விளக்கு காய்ச்சலில் கழிகிறது எங்கள் முன்இரவுகளும் பகல்களும் அவரவர் அறைகளில்.. சேமிக்க தெரியவில்லை நிலா மற்றும் இன்ன பிற .. – சித்ரா (k_chithra@yahoo.com)