Articles Posted by the Author:

 • அழகியல் தொலைத்த நகரங்கள்

  அழகியல் தொலைத்த நகரங்கள்

  ____________________ தென்னைமர உச்சி கிளைகள், அடர்த்தியான வெண் மேகம் நீல வான பின்னணியில் .. இயற்கை ஓவியத்தின் கீழ் குறுக்கில் கிறுக்கல் கோடுகள் – கோணல் மாணலாய் தொங்கும் கேபிள் டிவி கம்பிவடங்கள்.. சாலை அமைக்கவே ஒரு துறையும் கொத்தி குதறவே மற்ற துறைகளும் வீட்டு ஜன்னலிருந்து கைநீட்டினால் சாலை தரை தட்டும் – மேன்மேலும் உயர்ந்து விட்ட சாலை-சீரமைப்புகளும்!! அவரவர்களுக்கு உண்டான காரணங்களோடு .. காற்றிலும் , அதிராத அளவான ஒயிலாக கிளையிலை அசைக்கிற அழகியல் […]


 • கூடியிருந்து குளிர்ந்தேலோ …

  கூடியிருந்து குளிர்ந்தேலோ …

  ______________________ சூழ்ந்திருந்த மாமரமும் சிறகடிக்கும் பட்டாம்பூச்சியும் ரீங்காரமிடும் தட்டான்பூச்சியும் மத்தியிலிருந்த நானும் – ஆளுக்கொரு கை உண்டு குளிர்ந்தோம் இடை-வெளியிலிருந்த நிச்சலனத்தை… – சித்ரா (k_chithra@yahoo.com)


 • பிரசவ அறை

  பிரசவ அறை

  நீ பிறந்து விட்டாய் கேட்டதும் சில்லென்ற உணர்வு.. உன் அம்மாவுக்கும் எனக்கும் இடையே அரை அங்குல புன்சிரிப்பு மட்டும் கடைதெருக்களில் தென்படுகிற வேளைகளில் – எனினும் பிறப்பே, பிறப்பை பார்க்க வருவதே பரவசமாய்.. எப்போது என தெரியாமல் வெடிக்கின்றன குண்டுகள்.. முதுகில் பாய்கின்றன பாதுகாவல்கள்… உறவுகள் தருவதற்கு மறுதலிக்கிறது – தலையனை தரும் ஆறுதலை கூட சிற் சமயங்களில் .. என்ற போதும் ஏதோ ஒர் மூலையில் மிக அகண்டு,மிக அகண்டு – வாழ்க்கையின் மீதுள்ள நம்பிக்கை […]


 • நேய சுவடுகள்

  நேய சுவடுகள்

  நேயத்திற்கு மொழி உண்டா, எழுத்து வடிவத்துடன் !! சகதியில் சிக்கிய பசுவின் அலறலும், காப்பாற்றுகிற கைகளினால் சகதி துமிகளின் ‘தப்…திப்பு’ களின் பரிபாஷனையும் உருகொடுத்தது நேயமொழியாக.. கை கொடுக்காத அச்சச்சோக்களும் அய்யையோக்களும் ஓலங்களாயின ,மொழிகளாய் அல்ல.. காகிதத்தில் கை சகதியை துடைத்தபடி சென்ற இயல்பான வழிபோக்கனின் கால்சுவடும்.. அதை ஒட்டியபடி நெடுக தொடர்ந்த பசுவின் கால்சுவடும்.. நேய மொழிக்கான எழுத்து வரிசை வடிவமாய் அரங்கேறியது சகதி படிமத்தில்.. – சித்ரா (k_chithra@yahoo.com)


 • காண்டிப தேடல்

  காண்டிப தேடல்

  வஞ்சிக்க பட்டவரும் வஞ்சித்தவரும் வேடிக்கை மட்டும் பார்த்தவரும் நெருங்கியவர்களே ! சமபந்தி உணவு இவர்களோடு மற்றொமொரு நெருங்கியவரின் திருமணத்தில். ரௌத்திரத்தை இலைக்கடியில் ஒளித்துவிட்டு இலையில் பறிமாற பட்ட “சுமூக உறவு” இலைக்கு இலை எச்சிலாக்க பட்டு கைமாறியது அடுத்த ,அதற்கடுத்த இலையென.. போலி நாகரிகத்தை கிழித்தெரிய சந்தர்ப்பமில்லா துவண்ட என்னிடம் “காண்டிபத்தை” தேடி எடுக்க சொல்ல தேவை எனக்குமொரு பரமாத்மா. – சித்ரா (k_chithra@yahoo.com) http://chithranewblog.blogspot.com/


 • சித்தி – புத்தி

  சித்தி – புத்தி

  முச்சந்தி கோபுரத்தின் முகப்பில் சித்தியும் புத்தியும்,பிள்ளையாரின் தோள்களில் சாய்ந்திருப்பது போல், ஆறுதலான தோள்கள் எங்கே ? காலங்கள் மாறியது காட்சிகள் மாறியது தோள்கள் தென்படாமலேயே .. துவண்டவிட்ட நேரத்தில் புலப்பட்டது – பிள்ளையாராக மாறிவிட்டால் என்ன ? தன்நிறைவான இருப்பில், சித்தியென்ன புத்தியென்ன எவருக்கெனும் ஆறுதலாக இருக்க முடிகிற பிள்ளையாராகி விட்டால் தேடுதல் நிற்குமே! பிள்ளையாராக இருக்கவே பிறக்கிறார்கள் சிலர் புரிகிற கணத்தில் பிறக்கிறது வாழ்க்கை  


 • எதிர் வரும் நிறம்

  எதிர் வரும் நிறம்

  ஓவிய பலகையில் பளீரென்று வரவேற்ற ஊதா, புதுப்புது நிறங்கள் ஏற்றபட ஏற்றபட பின் அடுக்குக்கு மெல்ல நகர்ந்து கொண்டே போக … முன்வாசலில் நிலைப்பாட்டை நிறுத்த சிவப்பை போல ஆக்ரோஷமாக இருந்திருக்க வேண்டுமோ ? வெள்ளை போல வெள்ளெந்தியாய் இருந்திருக்க வேண்டுமோ ? நீலம் போல ஆழமாய் இருந்திருக்க வேண்டுமோ ? எல்லாமும் கொஞ்சமாக கலந்து இருந்தது தவறோ ? என்றும் ஓவியன் கையிலெடுக்கும் நிறம் எந்நிறமாக இருக்க கூடுமோ என ஏக்கம் கொண்ட ஊதா, அனுமானங்களை […]


 • மூன்றாமவர்

  மூன்றாமவர்

  புத்தி செய்திகள் படிக்கிறது மனம் அங்கலாயிக்கிறது கேட்டபடி.. எனது வரவேற்பு அறையில். நான் இருவரையும் பார்த்தபடி, தேநீருக்கும் வழியில்லாத விருந்தாளி போல கண்கள் மூடினால் ஓய்கிறார்கள் திறந்தால் மறுபடியும் கூச்சல் ஏதொரு செய்தியுடன் ,விடாமல் !! தெரிந்தவர்களிடம் கேட்டேன்,சொன்னார்கள் – இருவரையும் கவனிக்கும் என்னையும் பார்த்து கொண்டிருப்பவரை கண்டு விட்டால், விருந்தே நடத்தி கொள்ளலாமென. வாயிற் கதவு திறந்துதானிருக்கிறது எப்போதெனும் வரகூடும் மூன்றாமவர். – சித்ரா (k_chithra@yahoo.com)


 • காலம் – பொன்

  காலம் – பொன்

  பொன்னை துரத்தும் பந்தயம் காலம்-நான்-பொன் ஒருவர் பின் ஒருவர் துரத்தியபடி . ஓடினால் அள்ள முடியாதென குதிரை மேல் சவாரி . ஏறியதும் தெரிந்தது – இது பொன் இடும் குதிரை மட்டுமல்ல பொன் தேடும் குதிரையும் கூட . தலை தெரிக்க ஓடுகிறது அது பாய்கிற பாய்ச்சலில் கழுத்திலிருந்த பிடி நழுவி சவாரி வாலை பிடித்தபடி அது போகிற இடமெல்லாம் … கழுத்தில், குதிரை சலங்கைகளுடன் ! மன்னிக்கவும் – மென்பொருள் தொழிலக அடையாள அட்டையுடன். […]


 • புள்ளி கோலங்கள்

  புள்ளி கோலங்கள்

  என்னை சுற்றி அடுக்கு அடுக்காய் வரிசை கிரமத்தில் புள்ளிகள்.     கோலம் துவங்கும் நேரத்தில் புள்ளிகள் நகர்கின்றன.. மத்திய புள்ளியாகிய நானும் அடுத்த அடுக்குக்கு,பக்க அடுக்குக்கு கீழ் அடுக்கின் கடைபுள்ளியாகி கோல பலகையிலிருந்து விழுவோமோ என்ற அச்சத்திலிருந்து மீண்டும் நேர்வாட்டில் குறுக்கு வாட்டில்,மேல் அடுக்கு என நகர்ந்து கொண்டே இருக்கிறேன் ..     நகர்கிற புள்ளிகளில் கோலமாவது ,ஒண்ணாவது? அசந்து விட்ட நேரத்தில் புரிந்தது –     புள்ளிகள் நகர்கையில் மாறி மாறி […]