author

கனடா எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

This entry is part 1 of 5 in the series 26 நவம்பர் 2023

குரு அரவிந்தன் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடா எழுத்தாளர் வ. ந. கிரிதரன் அவர்களின் மூன்று நூல்கள் கனடா, ரெறன்ரோவில் மிகவும் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பெற்றன. ரொறன்ரோ கிங்ஸ்டன் வீதியில் உள்ள ஸ்காபரோ விலேஜ் கொம்யூனிட்டி மண்டபத்தில் மாலை 5 மணியளவில் ஆரம்பமாகி, அகவணக்ம், முதற்குடிமக்களுக்கு நன்றி சொல்லல் போன்ற நிகழ்வுகள் முதலில் இடம் பெற்றன. கனடா தேடகம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு திரு. பா.அ. ஜயகரன் […]

கனடா ‘கிராமத்து வதனம்’ முன்னெடுத்த நவராத்திரி விழா

This entry is part 2 of 3 in the series 12 நவம்பர் 2023

னடா ‘கிராமத்து வதனம்’ முன்னெடுத்த நவராத்திரி விழா குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை 5-11-2023 கனடா எத்தோபிக்கோ நகரத்தில் இயங்கும் ‘கிராமத்துவதனம் ஒன்ராறியோ தமிழ் பெண்கள் பண்பாட்டு மையம்’ என்ற தமிழ் குடும்ப அமைப்பினரால் அல்பியன் வீதியில் உள்ள திஸ்ரில் நகர மண்டபத்தில் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்து இப்பகுதியில் வசிக்கும் தமிழ் பெற்றோர்களும், கனடாவில் பிறந்து வளர்ந்த அவர்களின் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் ஒன்று சேர்ந்து இந்த விழாவில் […]

தமிழக எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒரு சந்திப்பு

This entry is part 3 of 5 in the series 29 அக்டோபர் 2023

குரு அரவிந்தன். கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் அழைப்பின் பெயரில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து ரொறன்ரோவிற்குச் சென்ற வாரம் வருகை தந்திருந்தார். சென்ற சனிக்கிழமை 21-10-2023 கனடா இலக்கியத் தோட்டத்தின் ஏற்பாட்டில், மார்க்கம் நகரசபை மண்டபத்தில் ‘தமிழ் இலக்கியத்தில் அறம்’ என்ற தலைப்பில் அவர் இலக்கிய ஆர்வலர்களுக்கு உரையாற்றினார். கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் எல்லாவற்றையும் ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, உரையைக் கேட்கும் ஆர்வத்தில் இலக்கிய ஆர்வலர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். […]

கனடா கலைமன்றத்தின் ‘நிருத்த நிறைஞர்’ பட்டமளிப்பு விழா

This entry is part 3 of 4 in the series 15 அக்டோபர் 2023

குரு அரவிந்தன் கனடாவில் இயங்கிவரும் கலைமன்றத்தின் 19 வது பட்டமளிப்பு விழா அக்ரோபர் மாதம் 1 ஆம் திகதி 2023 ஆண்டு காலை 10 மணியளவில் ஆரம்பித்து ரொறன்ரோவில் உள்ள யோர்க்வூட் நூலகக் கலையரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது. கோவிட் பெரும்தொற்றுக் காரணமாகக் கலைமன்றத்தின் பட்டமளிப்பு நிகழ்வு கடந்த சில வருடங்கள் நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத் தக்கது. மீண்டும்  இம்மாதம் நடந்த இந்த நிகழ்வுக்குக் கனடா தமிழர் தகவல் இதழ் முதன்மை ஆசிரியர் திரு எஸ். திருச்செல்வம் அவர்கள் […]

கனடா தொல்காப்பிய மன்ற ஆண்டுவிழா – 2023

This entry is part 3 of 5 in the series 8 அக்டோபர் 2023

குரு அரவிந்தன் – சென்ற சனிக்கிழமை 23-9-2023 அன்று கனடா, ரொறன்ரோவில் உள்ள தொல்காப்பிய மன்றத்தினர் நடத்திய 8வது தொல்காப்பிய ஆண்டுவிழா – 2023 தமிழிசைக் கலாமன்றத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மங்கள விளக்கேற்றல், கனடிய தேசியப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, தொல்காப்பிய மன்றப்பாடல் ஆகியவற்றைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து கனடா பழங்குடி மக்களின் அங்கீகாரம் வாசிக்கப்பட்டது. அடுத்து தொல்காப்பிய மன்றத் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமை உரை இடம் […]

கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா – 2023

This entry is part 4 of 5 in the series 8 அக்டோபர் 2023

கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா – 2023 குரு அரவிந்தன் 35 வது வருட நிறைவைக் கொண்டாடும் கனடா மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா சென்ற ஞாயிற்றுக் கிழமை 24-9-2023 ரொறன்ரோ சீனக்கலாச்சார மண்டபத்தில் குறிப்பிட்ட நேரப்படி மாலை 5:05 மணிக்கு ஆரம்பமாகிச் சிறப்பாக நடந்தேறியது. திரு. பஞ்சன் பழனிநாதனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றும் நிகழ்வு இடம் பெற்றது. சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக இலங்கையில் இருந்து வருகை […]

துயர் பகிர்வோம்:  ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன்

This entry is part 7 of 8 in the series 6 ஆகஸ்ட் 2023

குரு அரவிந்தன் கலைஞரும், ஒலிபரப்பாளருமான இலங்கைத் தமிழரான விமல் சொக்கநாதன் லண்டன் நகருக்குப் புலம் பெயர்ந்திருந்தார். கொக்குவில் நகரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் அங்கே நடந்த மின்சாரத் தொடர்வண்டி விபத்தொன்றில் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி லண்டனில் காலமாகிவிட்டார். இலங்கை வானொலியிலும் அதன்பின் பிபிசி தமிழோசை வானொலியிலும் அறிவிப்பாளராககக் கடமையாற்றியவர், அதன்பின் ஐபிசி வானொலியிலும் பணியாற்றினார். நண்பர் விமல் சொக்கநாதனும் அவரது மனைவியும் இலங்கையில் சட்டக்கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு அறிமுகமாகியிருந்தனர். நான் பட்டயக்கணக்காளருக்குப் படிக்கும் போது […]

ஓவியர் மாருதி என்ற இரங்கநாதன் மறைந்தார்

This entry is part 6 of 6 in the series 30 ஜூலை 2023

குரு அரவிந்தன் மாருதி என்ற புனைப்பெயரைக் கொண்ட புகழ்பெற்ற ஓவியர் இரங்கநாதன் சென்ற 27 ஆம் திகதி யூலை மாதம் தனது 85 வது வயதில் புணே நகரில் இதய நோயால் பாதிக்கப்பட்டு எம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். 1938 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் இவர் பிறந்தார். இவரது பெற்றோர்கள் மராத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தஞ்சாவூரைச் சேர்ந்த விமலா என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். தீவிர இலக்கிய ஆர்வலர்கள் எப்படி ஒரு […]

கனடா – சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்றுகூடல்

This entry is part 4 of 7 in the series 16 ஜூலை 2023

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை 10-7-2023 சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தின் ஒன்று கூடல் ஸ்காபரோவில் உள்ள மோணிங்சைட் பூங்காவில் நடைபெற்றது. சண்டிலிப்பாய் மக்களின் நலன் கருதி 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐக்கிய மன்றம் 21 வருடங்களை நிறைவு செய்திருக்கின்றது. தாயகத்திலும், கனடாவிலும் உள்ள சண்டிலிப்பாய் மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு, அதற்கேற்ற அட்டவணைப்படி சேவை நலன் கொண்டு இயங்குகின்றது. கனடாவில் வசிக்கும் சண்டிலிப்பாய் மக்கள் பிள்ளைகளுடன் குடும்பமாக வந்து ஒன்று கூடியிருந்தனர். பொதுவாக […]

ஐஸ்லாந்தின் நிலவதிர்வால் எரிமலை வெடிக்குமா?

This entry is part 4 of 6 in the series 9 ஜூலை 2023

குரு அரவிந்தன் அத்திலாண்டிக் சமுத்திரத்தில், வடதுருவ எல்லையில் இந்தத்தீவான ஐஸ்லாந்து இருக்கின்றது. திமிங்கிலங்களை அருகே சென்று பார்க்கக்கூடிய இத்தீவில், சாமத்திலும் சூரியனைப் பார்க்க முடியும். சென்ற கிழமை 24 மணி நேரத்தில் இங்கு ஏற்பட்ட 2200 நிலவதிர்வுகள் காரணமாக மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள். எந்த நேரமும் எரிமலை வெடிக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தச் சிறிய தீவில் சுமார் 30 மேற்பட்ட எரிமலைகள் இருக்கின்றன. பூமிக்கடியில் உள்ள தட்டுக்கள் முட்டிக் கொள்வதால், இந்த நிலநடுக்கம் ஏற்படுகின்றது. இங்கே […]