author

நாடகக்கலைஞர் நா. சாந்திநாதன்

This entry is part 6 of 9 in the series 18 ஜூன் 2023

துயர் பகிர்வோம்: நாடகக்கலைஞர் நா. சாந்திநாதன். இனிய நண்பர், நாடகநெறியாளர்; கலைஞர் நாகமுத்து சாந்திநாதன் அவர்கள் 10-6-2023 சனிக்கிழமை அன்று எங்களைவிட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தியை நம்பமுடியாமல் இப்பொழுதும் இருக்கின்றது. பழகுவதற்கு மிகவும் அன்பான, பாசமான ஒரு நண்பரை இழந்து விட்டோமே என்ற கவலைதான் இப்போது எங்களிடம் மிஞ்சி நிற்கின்றது. கலை உலகிற்கு நன்கு அறிமுகமான, இலங்கையில் மல்லாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சாந்திநாதன்,  மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவராவார். சிறந்த நடிகராக, சிறந்த நெறியாளராக அவர்தன்னை […]

கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருது விழா

This entry is part 9 of 11 in the series 11 ஜூன் 2023

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக்கிழமை 4 ஆம் திகதி கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா ரொறன்ரோவில் இடம் பெற்றிருந்தது. ஆரம்பகால உறுப்பினரும், தற்போதைய செயலாளருமான எழுத்தாளர்; அ. முத்துலிங்கம் அவர்கள் நேரடியாக இந்த நிகழ்வுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அமைப்புத் தொடங்கிய காலத்தில் இருந்து இந்த நிகழ்வுக்காக எனக்கு அவர் வருடாவருடம் அழைப்பிதழ் அனுப்பிவிட்டுத் தொலைபேசியிலும் அழைத்துச் சொல்லுவார். இம்முறை அவர் அழைத்த போது நான் குறோசியாவில் இருந்தேன், […]

குழந்தைகளை மகிழ்விக்கும் டைனஸோக்களின் உலகம்

This entry is part 6 of 11 in the series 11 ஜூன் 2023

குரு அரவிந்தன் டைனஸோக்கள் இப்போது உயிரோடு இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். ஆனால் வரலாறு தெரிந்தவர்கள் அந்த டைனஸோக்கள் உயிர் பெற்று வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையாவது செய்து பார்த்திருப்பார்கள். அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் நவீன தொழில் நுட்ப உதவியுடன் அப்படி ஒரு உலகத்தை இப்போது உருவாக்கியிருக்கிறார்கள். சென்ற வாரம் டைனஸோ பற்றிக் கனடாவில் நடந்ததொரு காட்சிக்குச் சென்று பார்த்ததை இப்பொழுது உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். டைனஸோக்கள் எப்படி இருந்திருக்கும் என்று பார்க்க விரும்பினால் […]

கனடாவில் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடல்

This entry is part 1 of 13 in the series 2 ஏப்ரல் 2023

குரு அரவிந்தன் சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 25 ஆம் திகதி 2023 ஆம் ஆண்டு கனடாவில் இயங்கிவரும் சண்டிலிப்பாய் ஐக்கிய மன்றத்தினரின் ஒன்றுகூடலும், இரவு விருந்துபசாரமும் இடம் பெற்றன. ரொறன்ரோ எக்லிங்டன் வீதியில் உள்ள ஈஸ்ட்ரவுன் விருந்தினர் மண்டபத்தில் மாலை 6:30 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. மன்றத்தின் தலைவர் திரு அஜந்தன் மகேந்திரனும் அவரின் துணைவியாரும் மங்கள விளக்கேற்றி விழாவை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து கனடா தேசிய கீதமும், தமிழ்தாய் வாழ்த்தும் இடம் பெற்றன. அதன்பின் […]