Articles Posted by the Author:

 • விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்றி ரெண்டு

  விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்றி ரெண்டு

    1939 ஃபெப்ருவரி 6 வெகுதான்ய தை 24  திங்கள்கிழமை   துர்க்கா, மூட்டையக் கட்டு. பிரயாணம் போற வேளை.   வேதையன் துர்க்கா பட்டனிடம் சொல்லும்போதே மெய் தளர்ந்து தாங்க முடியாத அசதி. குத்திருமல் வேறே. என்ன ஔஷதம் கழிச்சும், தயிரை விட்டொழித்து எடத்வா கேசவன் மூஸ் வைத்தியர் கொடுத்த ஆயுர்வேதப் பொடியை தேனில் குழைச்சு தினசரி நாலு வேளை விழுங்கியும் ஒழிஞ்சு போகாமல் கூடவே வந்து உசிரெடுக்கிறது. இருமித் துப்பினதில் ரத்தம் இருந்ததாக மனது […]


 • விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்று ஒன்று

  விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்று ஒன்று

    1939 ஜனவரி 31 வெகுதான்ய தை 18 செவ்வாய்க்கிழமை   கோஷி வக்கீலை விட ரொட்டிக்கடைக் காரன் கோஷி சுறுசுறுப்பான மனுஷர். கடைக்காரன் கொஞ்சமும் கேரள வாசனை இல்லாத, எருமைப் பால் காப்பி சாப்பிடுகிற, தமிழ் டாக்கி நட்சத்திரங்களை அதுவும் வடிவான ராஜகுமாரியையும், லக்ஸ் பத்மாவையும் மாராப்பு பற்றி கவலைப்படாமல் பக்கவாட்டில் நிற்கச் சொல்லிப் பிடித்த படங்களை ரொட்டிக்கடை சுவரில் மாட்டி, தீப தூபம் காட்டாத குறையாக கும்பிட்டு குழைந்து சந்தோஷப்படுகிறவன். லக்ஸ் பத்மா வந்தால் […]


 • விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூறு

  விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூறு

  1939 ஜனவரி 29 வெகுதான்ய தை 16 ஞாயிற்றுக்கிழமை ஆலப்புழை ரயிலடியே அதிசயித்து நிற்க நடேசன் ரயிலேறினார். யாராக்கும் புள்ளிக்காரன், ராஷ்ட்ரியக் காரனோ, மதராஸியிலே வல்ல சம்மேளனம் ஏதும் ஒத்து சேரும் பரிபாடியோ? அம்பலப்புழ நீலன் வக்கீலோட குமஸ்தன். வக்கீல் குமஸ்தன்மாரே, வரூ, நமக்கும் உக்ரனாயிட்டு ஒரு ஹர்த்தால் நடத்தலாம் என்று அஜெண்டா குறிச்சு ஆளனுப்பி வரவழைத்திருப்பார்கள். பாண்டிப் பிரதேச ஜனங்களுக்கு இதெல்லாம் சுபாவத்தில் இல்லாத விஷயம். இங்கே இருந்து அங்கே ஒண்ணும் ரெண்டுமாகப் போய்ச் சேர்ந்த […]


 • விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது

  இரா.முருகன்   1939 ஜனவரி 27 வெகுதான்ய தை 14 வெள்ளிக்கிழமை   அண்ணா இது தான் அரசூர்னு ஒரு ஓர்மை. கிச்சிலிப் பழ வர்ணத்துலே அந்தக் குட்டை இருக்கே, போன விசை வந்தபோது பார்த்து மனசில் பதிஞ்சு இருக்கு.   துர்க்கா பட்டன் பரபரப்பாக வேதையனை எழுப்பினான்.   அழுத்தமான மஞ்சள் கலரில் ஜிலேபி பிழிந்து தலையில் கொம்பால் அடித்து நீட்டி வைத்த மாதிரி எழுத்துகளில் வரப் போகும் ஸ்டேஷன் பெயர் எழுதியிருக்கிறது. இது வழக்கமான […]


 • விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது

  விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஒன்பது

      1939 ஜனவரி 27 வெகுதான்ய தை 14 வெள்ளிக்கிழமை   அண்ணா இது தான் அரசூர்னு ஒரு ஓர்மை. கிச்சிலிப் பழ வர்ணத்துலே அந்தக் குட்டை இருக்கே, போன விசை வந்தபோது பார்த்து மனசில் பதிஞ்சு இருக்கு.   துர்க்கா பட்டன் பரபரப்பாக வேதையனை எழுப்பினான்.   அழுத்தமான மஞ்சள் கலரில் ஜிலேபி பிழிந்து தலையில் கொம்பால் அடித்து நீட்டி வைத்த மாதிரி எழுத்துகளில் வரப் போகும் ஸ்டேஷன் பெயர் எழுதியிருக்கிறது. இது வழக்கமான […]


 • விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று எட்டு

  இரா.முருகன் 1938 டிசம்பர் 28 வெகுதான்ய மார்கழி 13 புதன்கிழமை இன்னொரு வாரணாசிக் காலை. பனியும் பழகி விட்டது. பகவதி நடந்து கொண்டு இருக்கிறாள். இருட்டு தான் எங்கேயும். அது விலகி சூரியோதயம் ஆகிறதுக்கு ரொம்ப நேரம் செல்லும். வெளிச்சத்துக்காக சத்திரத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தால் வேலை நடக்காது. போயே ஆக வேண்டும். போய்க் கொண்டிருக்கிறாள். பகவதிப் பொண்ணே, வேண்டாம்டி, சொன்னாக் கேளு. திரும்பிடலாம் வா. ஆம்பிளைகள் இல்லாம இப்படி புலர்ச்சை வேளையில் தனியா எங்கேயும் போகண்டா, […]


 • விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஏழு

  விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஏழு

  1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை அம்மா, போகலாமா? சாமா கேட்டான். மேல் சட்டையில்லாத உடம்பில் குற்றாலம் துண்டைப் போர்த்தி, கையில் சின்ன மூட்டையைத் தூக்கிப் பிடித்திருந்தான். இடுப்பில் வார் பெல்ட்டில் பத்திரமாக ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டு, பர்ஸை மருதையனிடம் கொடுத்தான். குடிக்க கொஞ்சம் தண்ணி எடுத்துக்கலாமய்யா. அண்டா குண்டாவிலே வச்சு கங்கா ஜலம்னு சகலமானதுக்கும் எடுத்து நீட்டறான். மத்ததெல்லாம் சரிதான். குடிக்கவும் அதானான்னு எதுக்களிச்சுட்டு வருது. மருதையன் சொல்வதும் உண்மைதான். பத்து அடி […]


 • விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்று ஆறு

  1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை   விசாலம் மன்னி அதற்கு அப்புறம் பகவதி கூடவே தான் இருக்கிறாள்.   சூனிய மாசம்னாலும் அமிர்தமான மாசம். நேரம். நல்ல நாளும் பெரிய நாளுமா அத்தை வந்திருக்கா. வந்தேளா, குளிச்சேளா சாப்பிட்டேளான்னு பக்ஷமா நாலு வார்த்தை பேசாமா, ஏழுகிணறு நாயுடு கொண்டு வந்து கொடுத்த சொம்பைக் கட்டித் தூக்கிண்டு அலைஞ்சாறது.   பகவதி அத்தை வீட்டுக்கு வந்த சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டே வீட்டுக்காரனைப் பற்றிக் குறைப்பட்டுக் […]


 • விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து

  விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றைந்து

  1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை   குளிரக் குளிர வாரணாசியில் பொழுது விடிந்து கொண்டிருந்தது. அடை அடையாக அப்பிய பனி மூட்டம் இப்போதைக்குக் கலைகிற உத்தேசம் இல்லை என்கிறது போல் ஸ்நானக் கட்டங்களை மூடி மறைத்தது.   ஓடியும் தேங்கியும் ஒடுங்கியும் விரிந்தும் கடந்த கங்கா நதிப் பிரவாகத்தை அது கீழிறங்கித் தொட்டு,  கவிந்த படிக்கே விடியும் பொழுது.   பஞ்ச பஞ்ச உஷத் காலத்தில் பூவாடையும் பிணவாடையும் மக்கிய இலையும் சோற்றுப் […]


 • விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுநாலு

  விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுநாலு

  1938 டிசம்பர் 18 வெகுதான்ய மார்கழி 3 ஞாயிற்றுக்கிழமை நீலகண்டன் கண் முழித்தபோதே அசதியாக இருந்தது. எழுந்து குளித்து சாப்பிட்டுவிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓட வேண்டும். கொஞ்ச நேரம் அங்கே இருந்து டாக்டர் வார்டு வார்டாக வரும்போது அவரை எதிர்கொள்ள வேண்டும். நாயுடுவின் படுக்கைக்குப் பக்கத்தில் இருந்தாலே அது சாத்தியம். வெள்ளைக்கார டாக்டர் என்பதால் அவர் கேட்பதற்கு எல்லாம் இங்கிலீஷில் பதில் சொல்லி, அவரிடமிருந்து நாயுடு தேக நிலை பற்றி புதுசாகத் தகவலும், மருந்து மாத்திரை சம்பந்தமான விஷயங்களும் […]