இரா முருகன்

விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தெட்டு

This entry is part 42 of 45 in the series 26 பிப்ரவரி 2012

1916 ஜனவரி 30 ராட்சச வருஷம் தை 17 ஞாயிற்றுக்கிழமை வைத்தாஸே, ரெண்டு வாரம் இடைவெளி விட்டு இதை உனக்கு எழுதறேன். எழுதாட்ட என்ன? சதா உன் நினைப்பு தான். பிள்ளைகள் எல்லாம் வளர்ந்து, நல்ல நல்ல கலாசாலைகளிலே படிச்சு புத்தியோடு சர்க்கார் உத்யோகத்தில் உட்காரணும். அதுகள் கல்யாணமும் கழிந்து குடும்பத்தோடு கூடி இருக்கணும். எல்லாத்தையும் பார்த்து அனுபவிச்சபடி, வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அப்பன்காரன் ஹாலாஸ்ய மகாத்மியத்தைப் படிச்சு ஒப்பேத்திண்டு கிடக்கணும். அந்த வயசாயிடுத்து எனக்கு. ஆனா, […]

இதுவும் அதுவும் உதுவும் – 5

This entry is part 15 of 38 in the series 20 நவம்பர் 2011

மைக்கேல் ஓ’லியரியை விமானப் போக்குவரத்துத் துறையின் துக்ளக் என்று தாராளமாகச் சொல்லலாம். ஐரிஷ்காரர். ஐரிஷ்காரர்களுக்கே உரிய குண நலங்களுக்குச் சொந்தமானவர். இதில் முக்கியமனது, பிரிட்டீஷ்காரர்கள் புனிதமானது என்று மதிக்கிற எல்லாவற்றையும் தூக்கிக் கடாசுகிற துடிதுடிப்பு. இங்கிலீஷ்காரர்கள் உயிரினும் மேலாக மதிக்கிற (மதிக்கிறதாகச் சொல்கிற) மரியாதையாகப் புழங்குவதை காலால் மிதித்து விட்டுச் சிரிக்கிற ஐரிஷ் குணம் அது. கடைந்தெடுத்த கருமித்தனம், நாலு காசு சம்பாதிப்பதில் நாட்டம் என்று ஆரம்பித்து பேங்க் பேலன்ஸை அதிகரித்துக் கொண்டே போகிற குணமும் அதில் […]

இதுவும் அதுவும் உதுவும் – 4

This entry is part 37 of 41 in the series 13 நவம்பர் 2011

இரா.முருகன் சென்னையின் வேனல் கால முகம் யாது? தெரு ஓரத்தில் ஆலைக் கரும்பைப் பிழிந்து அழுக்குப் பனிக் கட்டிச் சீவலும், எலுமிச்சை சாறும் சேர்த்து நுரைக்க நுரைக்க கிளாஸ் டம்ளரில் நீட்டும் வண்டி. அதன் பக்கம் வியர்த்து விறுவிறுத்து, கையில் பிடித்த சூட்கேஸோடு காத்திருந்து, வாங்கிக் குடித்த பிறகு சிகரெட் பற்ற வைக்கும் மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவாக அந்த முகம் எனக்குத் தென்படும். டிசம்பர் பதினைந்திலிருந்து ஜனவரி பதினைந்து வரை குறுகி வரும் குளிர் காலத்தில் பாதி நகரம் […]

இதுவும் அதுவும் உதுவும் -3

This entry is part 37 of 53 in the series 6 நவம்பர் 2011

வாழ்க்கை வரலாறுகள் படிக்க சுவாரசியமானவை – அவற்றில் மெயின் கதாபாத்திரமாக வருகிறவர்களுக்கு. சுயசரிதம் இன்னும் விசேஷமானது. உயிரோடு இருக்கும்போதே கடியாரத்தின் முள்ளைப் பின்னால் நகர்த்தி, பழைய காலண்டரை சுவரில் ஆணியடித்து மாட்டி, ஏற்கனவே நடந்ததை எல்லாம், இப்படி நடந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைக்கிற படி மாற்றி அமைப்பது. இங்கே ஒரு காந்தி, அங்கே ஒரு லூயி பாஸ்டர் இப்படி விரல் விட்டு எண்ணக் கூடியவர்களின் நேர்மையான சுயவரலாறுகளின் எண்ணிக்கை, வாழ்க்கை வரலாற்று புத்தகங்களை ஒட்டுமொத்தமாகக் […]

இதுவும் அதுவும் உதுவும் – 2

This entry is part 33 of 44 in the series 30 அக்டோபர் 2011

வேற்றுமொழிப் படைப்புகளுக்கு அறிமுகமும் விமர்சனமும் எழுதுவது எளிது. யாரையும் புருவத்தை உயர்த்த வைக்காமல், ‘This rambling novel by a defrocked gay French black priest about the intimacy of a bisexual revolutionary with his wife’s lover who happens to be the mistress of the Spanish dictator and his lust for Achilles, the Greek warrior revived from the pages of an […]

இதுவும் அதுவும் உதுவும்

This entry is part 10 of 44 in the series 16 அக்டோபர் 2011

சும்மா இருக்கப்பட்ட நேரத்தில் நாலு அயல் மொழி கற்று வைத்துக் கொண்டால் ஏகத்துக்கு நல்லது என்று எல்லோரும் எக்காலத்திலும் சொன்னாலும் மெனக்கெட்டு வேற்று மொழி கற்பவர்களை ஒரு லேப் டேப் கம்ப்யூட்டர் துணையோடு எண்ணிப் பட்டியல் போட்டு விடலாம். ஆயிரம் பேர் உள்ள ஜனக் கூட்டத்தில் பத்து பேர் இந்திப் பிரசார சபாவில் ராஷ்ட்ர்ர பாஷா பரீட்சையில் ஜெயிக்க பாடப் புத்தகங்களோடு தினசரி சபைக்குப் போகிறவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் இளவயது. கன்னையாலால் கடையில் விலை கேட்டு, பர்ஸில் […]

நாயுடு மெஸ்

This entry is part 27 of 45 in the series 9 அக்டோபர் 2011

    தண்ணி யடிசசு வந்தா தடாவாமே அண்ணாச்சி பாக்கிவச்சார் ஆகாரம் மண்ணாச்சு போய்யா அதுகிடக்கு பாயா கவிச்சிதுண்ண நாயுடு மெஸ்படி ஏறு..   வாசல் எருமைங்க வால்தூக்கு தேவிலகு ஏசாதே நீமெர்சல் ஆவாதே – ராசால்லே ஓரமாய் ஆம்லெட்மேல் ஓடுதுபார் மாட்டுஈ காரம்போர்ட் காய்கணக்கா சுண்டு.   ஈமூ கறி’பா எடுத்து ருசிபாரு ஏமி முளிக்கறே ஏனத்தக் காமி தயிர்வடை ஓணும்னு தம்பிவந்து நிக்கறான் அய்ர்ர்வூட்டுப் புள்ள அனுப்பு.   (ஈமு Emu – நெருப்புக்கோழி […]

Nandu 2 அரண்மனை அழைக்குது

This entry is part 45 of 45 in the series 2 அக்டோபர் 2011

சில விஷயங்கள் ராத்திரியில் ரொம்ப அழகாக இருக்கும். ரயில்வே ஸ்டேஷன்களைச் சொல்கிறேன். சும்மா கிடக்கிறவனையும், கிடக்கிறவளையும் சங்கீதம் இசைக்கச் சொல்லியோ கவிதை எழுத வைத்தோ உசுப்பேற்றுகிற சமாசாரங்கள் காதலும் இந்த மாதிரியான அழகும் அமைதியுமான பழைய கட்டிடங்களும். இப்போது வெள்ளிக்கிழமை ராத்திரி பத்து மணி. இது எடின்பரோ வேவர்லி ஜங்ஷன். கூட்டம் குறைவாக, விஸ்தாரமான ஏழெட்டுப் பிளாட்பாரங்களாக விரிந்து நீண்டிருக்கும் இங்கே லண்டன் போகிற ரயிலை எதிர்பார்த்து மர பெஞ்சில் உட்கார்ந்திருக்கிறேன். எனக்கு இடது பக்கமாக நண்பர் […]

Nandu 1 – அல்லிக் கோட்டை

This entry is part 6 of 41 in the series 25 செப்டம்பர் 2011

இரா.முருகன் “லில்லி காஸில். அங்கே இருந்து டுர்ஹாம் எட்டு மைல். இந்த வழி முச்சூடும் ஒண்ணு இல்லே ரெண்டு இல்லே, இருபத்து மூணு மதுக்கடை” நண்பர் நண்டுமரம் உரக்கச் சொன்னார். ஸ்காட்லாந்து இளைஞர். வயது இருபத்தைந்து பிளஸ் கொசுறாக ஐம்பது. பக்கத்தில் ஸ்டியரிங்கை முரட்டுத்தனமாக வளைத்து லில்லி காஸில் பக்கம் திருப்பிய வேட்டைக்காரத் தடியன் அதிவேகமாகக் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். இவனும் ஸ்காட்டிஷ் காரன் தான். அசல் இளைஞன். வயது இருபத்தேழு. நோ கொசுறு. அசல் ஸ்காட்டீஷ் […]