1.காலம் ஒரு கணந்தான்…! part 1 மெழுகுவர்த்தியாய் உருகி வெளிச்சங்கொடு… “சோனாமாரி”யிலும் அணையாதே! மேக கணங்களாய் உழை… மழைத்துளிகளாக சேவை செய்… பூமியைப்போல பொறுத்திடு… அகழ்வாரை அன்போடு நோக்கு… மின்னலிடம் வெளிச்சங் கேள்… இடியைத் தாங்கும் இதயம் பெறு… காற்றிலே கீதம் அமை… கைப்பிடிக்குள் உலகம் எடு… கால வெள்ளத்தோடு கல்லாக உருளாதே, பாறையாய் நில்லு., சந்தோஷச் சிறகில் பறவையாய்ப் பற… பனித்துளியாய் வாழ இலையிடம் இடங்கேள்… சூரியன் சுட்டாலும் அழியாமல் வாழ்… தேனீயாய் சுற்று… எறும்பாய் […]
யாம் சொல்லும் சொல்லெல்லாம் எங்கே செல்லும்…? காற்றலையில் கரைவதனால் வார்த்தைகள் காணாமல் போயிடுமா.. கண்டபடி சிதறித்தான் ஏழு கண்டங்களும் உலவிடுமா..? உலகின் காந்தமது ஈர்க்கும் வடபுலந்தான் விரைந்திடுமோ… ஊசாட்டம் இல்லாத இடமொன்று எங்கே அங்கு சென்றொழிந்திடுமோ… வார்த்தை பேசிடும் உதட்டளவில் உறைந்திடுமோ இல்லை கேட்டிடும் இதயமெல்லாம் சென்று குடியிருந்திடுமோ… ஆறு குளம் மலைகளைத் தான் அடைந்திடுமா அண்டவெளி தாண்டி வார்த்தை சென்றிடுமா… இந்த வளி மண்டலத்தை நிரப்பிடுமா… இதுகாறும் காணாதவொரு பொருளாய் ஆகிடுமா..? இருதயத்தில் என்றென்றும் இருந்திடுமா… […]
1.சொல்லும் சொல்லு செல்வதெங்கே…? யாம் சொல்லும் சொல்லெல்லாம் எங்கே செல்லும்…? காற்றலையில் கரைவதனால் வார்த்தைகள் காணாமல் போயிடுமா.. கண்டபடி சிதறித்தான் ஏழு கண்டங்களும் உலவிடுமா..? உலகின் காந்தமது ஈர்க்கும் வடபுலந்தான் விரைந்திடுமோ… ஊசாட்டம் இல்லாத இடமொன்று எங்கே அங்கு சென்றொழிந்திடுமோ… வார்த்தை பேசிடும் உதட்டளவில் உறைந்திடுமோ இல்லை கேட்டிடும் இதயமெல்லாம் சென்று குடியிருந்திடுமோ… ஆறு குளம் மலைகளைத் தான் அடைந்திடுமா அண்டவெளி தாண்டி வார்த்தை சென்றிடுமா… இந்த வளி மண்டலத்தை நிரப்பிடுமா… இதுகாறும் காணாதவொரு பொருளாய் ஆகிடுமா..? […]
“கி.பி.2012 .05.01” – நேரம் நான்கு மணி – அழகான பொன்வெயில் நேரம் – புறப்படுகிறாள் அவள் கால இயந்திரத்தில் ஏறி… “கி.பி.1512.05.01” காலையில் வந்து சேர்கிறாள் திரும்பி…!! வீடதன் பக்கம் செல்கிறாள்… வீடெங்கே தேடுகிறாள்… தாய்தந்தை எங்கேயெங்கே… ஆளரவம் எதுவுமில்லை… ஆலமரம் மட்டும் சின்னதாய் சிரித்துக் கொண்டு…! அயல் வீடுகளும் காணவில்லை… பக்கத்து தெருவையும் காணவில்லை… அவள் வளர்த்த கிளிகளையும் காணவில்லை கூண்டுடனே…! அவள் வீட்டு முற்றத்திலே நாட்டி வைத்த ரோஜா எங்கே ஆவலுடன் தேடுகிறாள் […]
வளி கொண்ட உலகமெலாம் நடந்து “வழி”யற்ற உள்ளங்களைப் பார்த்தேன் – வலித்தது… வலியிலாத உள்ளங்கள் வாழும் உலகமெங்கே தேடிப்பார்த்தேன் – “வெளி”களில் கண்டேன்….! அண்டமெல்லாம் மின்னும் நட்சத்திரங்கள் அருகிலே ஓருலகாவது இருக்கலாம்… அங்கே – மனிதன் போன்றோ வேறோ பல்லுயிரினங்கள் உலவலாம்… நெருங்கி வரும் நதிகளில் தேன் பாயலாம்.. நெருங்காமல் வெப்பமெல்லாம் தணிந்திடலாம்.. எட்டும் திசையெல்லாம் களி கொள்ளலாம்.. ஒளிக்குக் கிட்டும் கதிகளில் நாம் செல்லலாம்.. தொலைவு வெளி காலமெல்லாம் சுருங்கிடலாம்… தொல்லை கொள்ளை களவில்லாமல் […]
ஆழ் கடல் நீருக்குள் பொழுதெல்லாம் முக்குளித்து ஒரேயொரு துளிநீரை தேடி எடுத்து வந்தேன்.. தரைக்கு வந்த பின்தான் புரிந்தது அது கண்ணீரென்று… ஆகாய வெளியெல்லாம் தாண்டிச் சென்று ஒரேயொரு மின்மினி(ப் பூச்சி) பிடித்து வந்தேன்…, கைசுட்ட பின்தான் புரிந்தது நட்சத்திரம் என்று… காலமற்ற கால வெளிகளைக் கடந்து சென்றேன்… “அகாலமாய்”ப் போன நேர ஆயிடைகளைக் குறித்து வைக்கிறேன்… வாழ்வில் வருடமாய்த்தோன்றிய நாட்கள் கூறட்டும் சோகமான வரலாறுகளை என்றாவது ஒருநாள் – அப்பொழுது புதிதாய் ஒரு சரித்திரம் படைக்கலாம் […]
காற்றில் இடைவெளிகள் தேடி அங்கே ஓரிடம் கண்டுபிடிப்போம் அணுக்களாய் நாமும் மாறி அங்கு சென்று வாழ்ந்திடுவோம்… ஆறு குளங்களும் வேண்டாம் ஆறு சுவைகளும் வேண்டாம் ஆறாம் விரலொன்றே போதும் ஆறாக் காயங்கள் ஆறும்… ஆறு நதிகளும் மற்றும் ஓடை வயல்களும் வற்றும் ஆறுதலாய் நாமிருக்க ஆறாம் அறிவொன்றே போதும்… ஆண்டுகள் நூறு செல்லும் தூரத்தை அடைவோம் நொடி ஒன்றில் சென்று.. ஆரும் காணாத தேசத்தை ஆள்வோம் ஒன்றாக இணைந்து… “காலவெளிகளை”க் கடந்து செல்லுவோம் யுகங்கள் பலவற்றைக் கண்டு […]
இயற்கை மூடி வைத்த மொட்டுக்கள் ஒவ்வொன்றும் சிறுசத்தம்போட்டு உலகை எட்டிப் பார்க்கின்றன பூக்களாக… பூவுலகின் சிறுதூண்டலால் அழகழகாய் மலர்கின்றன எழில் பூக்கள் – தம் புறவிதழால் புதுக் காற்றை பிடிபிடித்தும் பார்க்கின்றன… வளிபோன போக்கில் அசைந்தாடவும் வாயின்றி சில வார்த்தை இசை போடவும் வான் போடும் மழை நீரில் விளையாடவும் வையத்தில் தேன் பூக்கள் பூக்கின்றன. ஒரு மொட்டு மலரும் போது… மெல்லப் பேசுகின்றது… பேசும் விழிகளால் புன்னகை பூக்கின்றது… பூமிக்கு வளையோசை கேளாமல் காற்றிலே நடனம் […]
வித்தொன்றை சிதைத்துப் பார்த்தேன் எதுவும் இல்லாமல் போனது… இன்னொன்றை மண்ணுள் புதைத்துப் பார்த்தேன் மரமாக வந்து கதை பேசியது… இலைகளையும் பூக்களையும் உனக்குள் எப்படித்தான் சுமந்தாயோ என்றேன்.. மண்ணைப் போட்டு மூடினாலும் உன்னை மீறி வரும் சக்தி எங்கே என்றேன்… மறுபடியும் வித்தொன்றை சிதைத்தொருக்கால் பார்த்தேன்… மாய வரம் ஏதேனும் அங்குள்ளதுவா தேடினேன் – “வித்திலைகள்” மட்டும் தான் எனைப் பார்த்து முறைத்தன…., மற்றதெல்லாம் எனை விட்டு என் கண்ணை மறைத்தன… பூவின் நிறமேதும் அங்கு இல்லை.., […]
அந்திவரை வெயில் அழகும்.. பிந்திவரும் இருள் அழகும்.. வானுடுத்த உடுவழகும்.. பானுவிடும் கணையழகும்.. மண்ணுலகில் இல்லையெனில் – மாந்தர் நிலை என்னவாகும்..? “காற்று” வீச மறந்தால்.. ப+மி சுற்றமறுத்தால்.. மேகம் அசையாது போனால்.. தேகமும் உள்ளமும் என்னவாகும்! புவி ஆகர்சம் இல்லையென்றால்.. “ஆக்சஸின்” வாயு அழிந்துபோனால்;; நீர் வட்டங்கள் குழம்பி விட்டால்.. “வாழ்க்கை வட்டங்கள்” நிலையென்ன..?, “கண்ணீர் வட்டங்கள்”தான் மீதமாகும்! ஜுமானா ஜுனைட், இலங்கை.