author

வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்

This entry is part 30 of 31 in the series 20 அக்டோபர் 2013

  பெண்கள் கண்ணியமான முறையில் உடை உடுக்க வேண்டும் எனும் அண்மைக்காலக் கூக்குரலைப் பெண்ணுரிமைவாதிகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான தலையீடு என்பதாய்ப் பதில் கூக்குரல் எழுப்பி வருகிறார்கள். உடுக்கும் உடையும், பாணியும் அவரவர் தனிப்பட்ட உரிமைதான். ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி.  ஆனால், இங்கு மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் பெண்கள் அணியும் உடைகள் பற்றி மட்டுமே கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.  இதனை ஓரவஞ்சனை என்று பெண்ணுரிமையாளர்கள் கருதுகிறார்கள். ஆனால், அதற்கான காரணங்களைப் ஒருதலைப்பட்சமற்று ஆராய்ந்தால், பெண்கள் […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 32 (இறுதிப்பகுதி)

This entry is part 20 of 31 in the series 20 அக்டோபர் 2013

ஜோதிர்லதா கிரிஜா நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தன. தயாவும் சாந்தியும் சிந்தியாவின் உழைக்கும் மகளிர் விடுதியில் சேர்ந்து ஒரு மாதம் போல் ஆகிவிட்டது. தன் வீட்டாருடன் தங்குவதால் ரமணியால் தனக்குத் தொல்லை ஏற்படலாம் என்னும் அச்சத்தில் தயாவும் அவ்விடுதியில் இருக்க முடிவு செய்தாள். சங்கரனின் தங்கை பவானியின் திருமணமும் ஒரு வழியாக எல்லாருடைய உதவியுடனும் நடந்தேறியது. ஒரு நாள் ரமா தற்செயலாகப் பேருந்து நிறுத்தத்தில் சங்கரனின் அப்பா தரணிபதியைப் பார்த்தாள். அங்கே வேறு யாரும் இல்லாத துணிச்சலில் அவரோடு சங்கரன் […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 31

This entry is part 29 of 31 in the series 13 அக்டோபர் 2013

31          இரவெல்லாம் சரியாகத் தூங்காமல், விழிப்பதும் உறங்குவதுமாய் மாறி மாறிக் கழித்துக்கொண்டிருந்த ராதிகாவுக்கு மிகவும் அதிகாலையில் விழிப்பு வந்துவிட்டது.   ஒன்பது மணிக்கு அவள் பாங்க் ஆஃப் இண்டியா அலுவலகத்தை அடைந்தபோது, சிந்தியா அவளுக்காக அங்கு வந்து ஏற்கெனவே காத்துக்கொண்டிருந்தாள்.   “வாம்மா, ராதிகா!” என்று அழைத்தபடி, அவள் கையைப் பற்றிய சிந்தியா அவளை வங்கியினுள் கூட்டிச் சென்றாள். வழியில் ராதிகா மெல்ல மெல்லத் தன் கையை அவளது பிடியினின்று தளர்த்தி விடுவித்துக்கொண்டாள்.   […]

நீங்காத நினைவுகள் – 19

This entry is part 1 of 31 in the series 13 அக்டோபர் 2013

தொட்டதும் சுட்டதும் தொட்டது கொஞ்ச நாள்களுக்கு முன்னால், ஒரு வார இதழில் “இந்துத்துவம் என்பது…’ எனும் தலைப்பில் எனது சிறுகதை ஒன்று வெளிவந்தது. அது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கதையாகும்.  ஆனால், அவ்வார இதழின் ஆசிரியர் நான் எழுதாத ஒரு வாக்கியத்தை ஒரு கதாபாத்திரம் சொல்லுவது போல் இடைச் செருகல் செய்து விட்டிருந்தார். “இந்துக்கள் மட்டுமே இந்தியர்கள்!” என்கிற அந்த இடைச்செருகல் மற்றவர்கள் இந்தியர் அல்லர் என்னும் கருத்தை உள்ளடக்கியதாக இருந்தது. அது எனது கருத்துப் போன்றும் […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 30

This entry is part 26 of 33 in the series 6 அக்டோபர் 2013

ராதிகா தன் விழிகளை அகற்றிக்கொள்ளாது தீனதயாளனை முறைத்துப் பார்த்தபடி இருந்தாள்.  “அம்மா கிட்ட என்ன குறையை அப்பா கண்டீங்க – இன்னொரு பொம்பளையைத் தேடி ஓடுற அளவுக்கு? ஒரு பொண்ணு தன்னைப் பெத்த தகப்பன் கிட்ட இது மாதிரி ஒரு கேள்வியைக் கேக்குறது ரொம்ப நெருடலான விஷயந்தான்.  ஆனா, கேக்காம இருக்க முடியல்லேப்பா.  ஏம்ப்பா? அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்தா அவங்க மனசு என்ன பாடு படும்னு ஒரு நிமிஷமாச்சும் நினைச்சுப் பாத்திருப்பீங்களாப்பா?” தீனதயாளனின் தலை […]

நீங்காத நினைவுகள் – 18

This entry is part 8 of 33 in the series 6 அக்டோபர் 2013

   கொஞ்ச நாள்களுக்கு முன்னர், நேரில் அறிமுகம் ஆகாத, ஆனால் தொலைப் பேசியில் மட்டும் பேசும் வழக்கமுள்ள, ஓர் அன்பர் என்னிடம் இவ்வாறு கூறினார்:  ‘அம்மா! என் அண்ணனுக்கு ஒரு பேரக் குழந்தை சென்ற வாரம் பிறந்தது. ஆனால், பிறந்த இரண்டே நாள்களுள் அது இறந்துவிட்டது.  முதல் பேரக்குழந்தை என்பதால் எங்கள் வீட்டில் எல்லாரும் ஒரே சோகத்தில் இருக்கிறோம்.’     ’அய்யோ. குழந்தையுடைய அம்மாவுக்குத்தான் எல்லாரைக் காட்டிலும் அதிக வேதனையாக இருக்கும்,’ என்றேன். ‘ஆமாம். எங்கள் அண்ணனுக்கு ரொம்பவே […]

நீங்காத நினைவுகள் – 17

This entry is part 16 of 27 in the series 29 செப்டம்பர் 2013

    செப்டம்பர் மாதத்தில் நிறைய எண்ணிக்கையில் பல பெரிய மனிதர்களும் புகழ் பெற்றோரும் பிறந்துள்ளனர். ‘அதென்ன, பெரிய மனிதர்கள், புகழ் பெற்றோர் என்று இரண்டு வகைகள்?’ என்கிறீர்களா? அது அப்படித்தான்! ‘புகழ் பெற்றோர் எல்லாருமே உண்மையில் பெரியமனிர்கள் அல்லர்; பெரியமனிதர் யாவருமே புகழ் பெற்றோர் அல்லர்’ – ‘All the popular men are not really great and all the great men do not become popular’ எனும் பொன்மொழியைப் படித்ததன் […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 29

This entry is part 13 of 27 in the series 29 செப்டம்பர் 2013

சினத்தை அடக்க முடிந்தாலும், ராதிகாவால் அழுகையை அடக்க முடியவில்லை. தனது மதிப்பில் மிகவும் தாழ்ந்திருந்த சிந்தியாவுக்கு முன்னால் மனம் உடைந்து அழ நேர்ந்த்து அவளது அழுகைக்குச் சுருதி கூட்டியது. சிந்தியா அவசரமாய் எழுந்து அவளருகே வந்து உட்கார்ந்துகொண்டாள். ஒரு தாய்க்குரிய ஆதரவுடன் ராதிகாவின் தோளை யணைத்துக்கொண்டாள். ராதிகா கூச்சத்துடன் அவள் கையை விலக்கினாள். “ராகேஷ்கிட்ட நான் சொன்னதையெலாம் பத்திக் கேக்கப்போறேதானே?” கண்களைத் துடைத்துக்கொண்ட ராதிகா, “பின்னே? அதைப் பத்தி எதுவும் கேக்காம அவர் கிட்டேர்ந்து விலகிக்க முடியுமா? […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 28

This entry is part 16 of 26 in the series 22 செப்டம்பர் 2013

..  ..  ..    ரமணி அன்று இரவு பதினொரு மணிக்கு வீடு திரும்பினான். நேரே தன்னறைக்குப் போனான். தயா கொண்டுவந்து கொடுத்த காப்பியைக் குடித்தான். எந்த நேரமானாலும் வீடு திரும்பியதும் அவனுக்குக் காப்பி குடித்தாகவேண்டும். காப்பியைக் குடித்துக்கொண்டே அவன் தன் அலமாரியைப் பார்த்தான். அதன் சாவி அதிலேயே செருகி யிருந்ததைக் கவனித்தான். அவன் பார்வை போன திக்கைக் கண்டதும் தயாவுக்குத் திக்கென்றது. கவனமாக அலமாரிப் பக்கம் பார்க்காமல் அவள் காலித் தம்ப்ளரைத் திருப்பி எடுத்துச் செல்லுவதற்காகக் காத்திருந்தாள். […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 27

This entry is part 10 of 22 in the series 15 செப்டம்பர் 2013

“வாம்மா, ராதிகா.  வா.” ராதிகாவை எதிர்பார்த்து, வாசற்கதவைத் திறந்து வைத்துக்கொன்டு சிந்தியா அவளுக்காக்க் காத்திருந்தாள். அவள் தன் காலணிகளை உதறிய பின், அன்பு தோன்றச் சிரித்து, அவள் கைபற்றி வீட்டினுள் சிந்தியா அவளை இட்டுச் சென்றாள். அவளது அந்தத் தொடுகை ராதிகாவைச் சிலிர்க்க வைத்தது. “நீ எங்க வராம இருநதுடுவியோன்னு எனக்குக் கொஞ்சம் அவநம்பிக்கையாத்தான்  இருந்திச்சு. நல்ல வேளை. வந்துட்டே.  என்ன சாப்பிட்றே?… முதல்ல உக்காரு.” ராதிகா உட்கார்ந்தாள்: “எனக்கு எதுவும் வேணாங்க. எங்க காலேஜ் காண்டீன்ல […]