author

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20

This entry is part 19 of 30 in the series 28 ஜூலை 2013

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 20 ஜோதிர்லதா கிரிஜா கல்லூரியில் தங்களால் இயன்ற அளவுக்கு டிக்கெட்டுகளை விற்ற பிறகு, எஞ்சியவற்றை வெளியே சென்று விற்க ராதிகாவும் பத்மஜாவும் முடிவு செய்தார்கள். அவை பெரும்பாலும் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் டிக்கெட்டுகள். அடையாற்றில், ஒரு பெரிய பங்களாவின் சுற்றுச் சுவர் வாசலருகே அவர்கள் சென்ற நேரத்தில் அதிலிருந்து யமஹா பைக்கில் ஓர் இளைஞன் வெளிப்பட்டான். அவர்களைப் பார்த்ததும் வண்டியை நிறுத்திய அவன், “யெஸ்?” என்றான். இருவரையும் நோக்கிப் பொதுவாய் இவ்வாறு வினவிய […]

நீங்காத நினைவுகள் 12

This entry is part 4 of 30 in the series 28 ஜூலை 2013

ஜோதிர்லதா கிரிஜா புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாயிபாபா அவர்களைப் பற்றி நான் சொல்லப் போவதை உங்களில் எத்தனை பேர் நம்புவீர்களோ, அல்லது நான் பொய்களைப் புனைந்துரைப்பதாய் நினைத்து என் மீது ஐயுறுவீர்களோ, தெரியாது! எனினும், யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, இந்தக் கட்டுரையில் உள்ளவை யாவும் உண்மைகளே என்று என் எழுதுகோலின் மீது ஆணையிட்டுச் சொல்லுகிறேன். இதற்குப் பிறகும் சந்தேகப் படுபவர்களைப் பற்றிக் கவலைப் படப் போவதில்லை! மிகச் சிறிய வயதில் சத்திய சாயி பாபா […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 19

This entry is part 19 of 20 in the series 21 ஜூலை 2013

தாங்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகிறவர்கள் உடனே தண்ணீர் குடித்தால் தேவலை போன்ற நாவரட்சிக்கு உள்ளாவார்கள் என்பதை அறிந்திருந்த ராதிகா தீனதயாளன் மடக் மடக்கென்று தண்ணீர் குடித்தது கண்டு வியப்படையவில்லை. தட்டுகளில் பஜ்ஜிகளைச் சட்டினியுடன் எடுத்து வந்து வைத்த தனலட்சுமி, “அய்யே! டிஃபன் சாப்பிடுறதுக்கு முந்தி ஏன் இப்படித் தண்ணி குடிக்கிறீங்க? அப்பால, ரெண்டே ரெண்டு பஜ்ஜி மட்டும் போதும்னு சொல்லிட்டு எந்திரிச்சுப் போறதுக்கா?” என்றாள். “நீ எத்தினி பஜ்ஜி திங்கச் சொல்றியோ, அத்தினி பஜ்ஜி தின்னுடறேன். […]

நீங்காத நினைவுகள் – 11

This entry is part 7 of 20 in the series 21 ஜூலை 2013

காமராஜ்! ‘காலா காந்தி’ – கறுப்பு காந்தி –  என்று அழைக்கப்பட்டவர். காந்திக்கு இணையானவர் என்கிற மதிப்பையும் மரியாதையையும் பெற்றவர். அதனாலேயே இந்த ஆகுபெயர். இவ்வாறு அழைக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமானவர். தகுதியுள்ளவர். இன்னும் சரியாகச் சொல்ல வேனண்டுமானால் காமராஜ் காந்தியை விடவும் உயர்ந்தவர் என்று கூடச் சொல்லிவிடலாம் என்று தோன்றுகிறது. காந்திஜியாவது தம் இள வயதில் ‘அப்படி, இப்படி’ இருந்தவர். தம் தப்புகள், தவறுகள், சறுக்கல்கள் ஆகியவற்றை யெல்லாம் தமது தன்வரலாற்றில் மக்களுக்குத் தெரிவித்தவர். ஆனால் காமராஜ் […]

நீங்காத நினைவுகள் – 10

This entry is part 10 of 18 in the series 14 ஜூலை 2013

கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள் ஜூன் மாதம் 24 ஆம் நாளில் கடந்து சென்று விட்டது. எனினும் சில நாள்களே அதன் பின் சென்றிருப்பதால், அவரைப் பற்றிய ஞாபகங்களைப் பகிர்ந்து கொள்ளுவதில் ரொம்பவும் கால தாமதம் நிகழ்ந்து விடவில்லை என்று தோன்றுகிறது. 1960 களில் என் தோழியும் சமூக சேவகியுமான அனசூயா தேவிதான் சந்திப்புக்கு நாள், நேரம் பெற்றபின், அவரைச் சந்திக்கப் போனபோது வழக்கம் போல் என்னை உடனழைத்துச் சென்று அறிமுகப் படுத்தினார். அவரது இல்லத்துள் நாங்கள் […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 18

This entry is part 16 of 18 in the series 14 ஜூலை 2013

வரவேற்பறையை அடைந்த தயா அங்கே ஒரு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்த ஆளைப் பார்த்ததும் அதிர்ந்து போனாள். ரமணி !  இரண்டு நாள்களுக்கு முன்னால் அவளைப் பெண்பார்க்க வந்தவன்! அவள் திரும்பிப் போய்விட எண்ணிய கணத்தில் அவன் தலை உயர்த்திப் பார்த்துவிட்டான். அவளைப் பார்த்துச் சிரிக்கவும் செய்தான். அவளால் பதிலுக்கு ஒரு புன்சிரிப்பைக் கூடக் காட்ட முடியவில்லை. அவளைத் தேடிவந்த ஆள் என்பதை யறிந்த வரவேற்பு மங்கைக்கு முன்னால் அவளால் திரும்பிச் சென்றுவிடும் எண்ணத்தைச் […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 17

This entry is part 18 of 25 in the series 7 ஜூலை 2013

“என்ன, ராதிகா, அப்படிப் பாக்கறே? இதுக்கு முன்னாடி மிஸஸ் சிந்தியா தீனதயாளனை எங்கேயாச்சும் பாத்திருக்கியா?”  என்று முதல்வர் தெரெஸ்ஸா வினவியதும், ஒரு திடுக்கீட்டுடன் அவள் தன் பார்வையை நீக்கிக்கொண்டதோடு, தன் முகத்தில் ஒரு புன்சிரிப்பையும் தவழவிட்டுக்கொண்டாள். “இல்லே, மேடம்,. பாத்ததில்லே.” “சரி…. இப்ப நீங்க ரெண்டு பேரும் என்ன செய்யணும்னா, இந்தக் காலேஜுக்குள்ளாறவே இவங்க குடுத்திருக்கிற டிக்கெட்ஸை வித்துத் தரணும். அதுக்குப் பெறகு, வெளியிடங்கள்லேயும் – பல பணக்காரப் பெரிய மனுசங்க வீடுகளுக்குப் போய் – முடிஞ்ச […]

நீங்காத நினைவுகள் – 9

This entry is part 5 of 25 in the series 7 ஜூலை 2013

தாழ்த்தப்பட்ட இந்துக்கள் ஏன் மதம் மாறுகிறார்கள் என்பதை மட்டுமல்லாது, ஆசைகாட்டியோ கட்டாயப்படுத்தியோ பிறரை மதமாற்றம் செய்யும் பிறமதத்தினர் மீதுள்ள தவற்றைச் சுட்டிக்காட்டியும்  “குற்றவாளிகள் யார்?” எனும் தலைப்பில், எனது கட்டுரை யொன்று “திண்ணை”யில் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது.  அக்கட்டுரையில், மதமாற்றம் என்பது – தானாக விரும்பியே ஒருவர் பிற மதத்துக்கு மாறினாலும் – தேவையே அற்ற ஒன்று என்பதை விளக்கி ‘மகா பெரியவர்’ என்று கொண்டாடப்பட்ட அமரர் காஞ்சி சங்கராசாரியர் அருள்மிகு சந்திரசேகர சரஸ்வதி […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 16

This entry is part 27 of 27 in the series 30 ஜூன் 2013

மகளின் அறையை முற்றாக அலசிப் பார்த்த பிறகும் அவளது விந்தையான நடத்தைக்கான எந்தத் தடயமும் கிடைக்காததால், பத்மஜாவையே சந்தித்து என்ன விஷயம், என்ன பிரச்சினை என்பதை யெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டால்  என்ன என்று அவருக்குத் தோன்றிற்று.  எனினும் அப்படிச் செய்வது அநாகரிகச் செயலாக இருக்கும் என்பதால் மட்டுமல்லாது, தம் மகளைத் தாமே வேவு பார்ப்பதை அவள் தோழிக்கு அது காட்டிக்கொடுத்துவிடும் என்பதாலும்,  அந்த எண்ணம் தோன்றிய கணத்திலேயே அதை அவர் ஒதுக்கினார். கல்லூரி விட்டதும் நேராக […]

நீங்காத நினைவுகள் – 8

This entry is part 8 of 27 in the series 30 ஜூன் 2013

தபால்-தந்தி இலாகா என்று வழங்கி வந்த இலாகாவைப் பிரித்துத் தபால் இலாகா, தொலைத் தொடர்பு இலாகா என்று சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு துறைகளாய்ப் பிரித்தார்கள் என்பது நமக்குத் தெரியும். தந்தித் துறை என்பதையே இந்தியாவில் ஒழித்துவிடப் போகிறார்களாம். இதற்கு வரவேற்பு, எதிர்ப்பு இரண்டுமே இருக்கின்றன. மின்னஞ்சல், தொலைக்குறுஞ்செய்திகள் என்று முன்னேறிய பிறகு தந்தியின் இன்றியமையாமை குறைந்து விட்டது உண்மைதான். இருப்பினும் அதை அடியோடு நீக்குவதைப் பலர் ஏற்கவில்லை. சில நாடுகள் தந்தியை ஒழித்துவிட்ட போதிலும், வேறு […]