Articles Posted by the Author:

 • உங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்!

  உங்கள் மகிழ்ச்சி, என் பாக்கியம்!

  “இது ஒரு புது யுகத்தின் தொடக்கம். வேலியே பயிரை மேய்ந்த காலம் கரைந்து விட்டது. உங்கள் பயிரை நீங்களே அறுவடை செய்யும் யுகம் தொடங்கிவிட்டது! திருமணம், குலம், குடும்பம், என்று பல்வேறு பிணைப்புகளால் கட்டுண்டு கிடந்த உங்கள் வாழ்க்கை, இன்று முதல் அன்பிற்கும் கட்டுப் படட்டும். சமுதாயம், ஒழுக்கம் இவற்றிற்கு பயந்து சிறை பட்டிருந்த அன்பு, இன்று முதல் உங்களுக்கு நெருக்கமானவரிடம் அடிமையாகட்டும். அடக்குமுறைக்கும், சுதந்திரத்திற்குமான போரில் வெற்றி பெற்று, உங்களுக்கெல்லாம் புதிய வாழ்க்கை அளித்த என்னை […]


 • புதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது

  புதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது

  சமச்சீர் கல்விக்கு அடுத்தபடியாக புகைந்து கொண்டிருக்கும் பிரச்சனை, ஓமந்தூரார் அரசு எஸ்டேட்டில் கட்டப்பட்டுள்ள 1200 கோடி கட்டிடம் என்ன ஆகும் என்ற கேள்வி. இந்த விவகாரம் முதலில் தொடங்கியது தற்போதைய முதல்வரிடமிருந்து தான். ஏழு வருடங்களுக்கு முன்னால், 96 ஆண்டுகால பழமை வாய்ந்த குவீன் மேரிஸ் கல்லூரி இருந்த இடத்தில், புதிய தலைமை செயலகம் கட்ட ஜெயலலிதா முயன்ற பொது, பாரம்பரியம் மிக்க ஒரு கட்டிடத்தை இடிக்கக் கூடாது என்ற பொதுவான கருத்தால் அந்த முயற்சி தடைபட்டது. […]


 • ஐ-போன் வியாதி

  ஐ-போன் வியாதி

  “உள்ள வாங்க”, கண்ணாடி அணிந்து, மூன்று முறை குளித்து, ‘கம கம’வென வந்து உட்கார்ந்த மருத்துவர், தன் முதல் நோயாளியை உள்ளே அழைத்தார். ‘தாய்-சேய்’ என்று அழைக்கும்படியான இருவர் உள்ளே நுழைந்தனர். அந்தப் பெண், தயங்கித் தயங்கி நடக்க, உடன் வந்திருந்த வாலிபன் மட்டும் பயமே இல்லாமல் நுழைந்தான். “என்ன பிரச்சனை?” சிரித்த முகத்துடன் மருத்துவர் கேட்டார். “இவனுக்கு தான் பாக்கணும் டாக்டர்”, என்றார் அந்த பெண். “அவரு ஜாலியா வராரு. நீங்க ஏன் இவ்ளோ டென்ஷனா […]


 • லோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளை

  லோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளை

  நேற்று மன்மோகன் சிங்க் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்களும், அதன் முதுகெலும்பில்லா தன்மையும் வருமாறு: அம்சங்கள்: ௧. பிரதமர், நீதித் துறையில் உயர் பொறுப்பில் உள்ளவர்கள், லோக் பால் மசோதா வரம்பிற்குள் வாரமாட்டார்கள். ௨. பார்லிமென்ட்-க்குள் எம்.பிக்களின் நடத்தையும் மசோதா வரம்பிற்குள் வராது. ௩. பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின், அவருக்கு எதிரான ஊழல் புகார் குறித்து விசாரிக்க, லோக்பால் அமைப்புக்கு அதிகாரம் உள்ளது. […]


 • வாரக் கடைசி.

  வாரக் கடைசி.

  “சாப்பாடு எடுத்துக்கிட்டியா மா?” புளிச்சை மறைக்கும் பார்வையுடன் தூக்கத்திலிருந்து எழுந்த லலிதா. காலை 7 : 15 மணிக்கு வண்டி ஏற வேண்டிய காயத்திரி, குளித்து முடித்து வருவதற்குள் சிற்றுண்டியைத் தயார் செய்துவிட்டு, கணவன் எழும் வரை ஒரு ‘குட்டி’ தூக்கம் போடலாம் என்று படுத்தார் லலிதா. மகள் கதவை திறக்கும் சத்தம் கேட்டதும் ‘தாய்மை’ விழித்துக் கொண்டது. “எடுத்துகிட்டேன்”, ரயிலில் பயணிக்கும் போது தான் சிற்றுண்டியை உண்பாள் காயத்திரி. அதுவும் சென்ட்ரலில் இறங்கி, பறக்கும் ரயிலில் […]


 • ஜெயலலிதா மீதான மக்களின் காழ்ப்புணர்ச்சி

  கடந்த ஆட்சி மாற்றத்தை அடுத்து எல்லா பத்திரிக்கைகளிலும், மக்கள் புரட்சி! மக்கள் விழித்துக் கொண்டனர்! மக்கள் பாடம் கர்பித்துவிட்டனர்! என்றெல்லாம் பரபரப்பு கிளப்ப பட்டது. பீகார் மக்களை போல் தமிழ் நாட்டு மக்கள் இல்லை; அவர்கள் புத்திசாலிகள் என்று கூட பேசப் பட்டது. சரி தான். ஒரு பெரிய தவறு நிகழும் போது மக்கள் விழித்துக் கொள்ளத் தான் செய்கின்றனர். ஆனால், தமிழர்கள்,அரசியலை சரியாக புரிந்து கொண்டிருக்கின்றனரா என்ற கேள்வி, இருபது ஆடுகாலமாக எல்லோரின் மனதிலும் எழத் […]


 • விசித்திர சேர்க்கை

  விசித்திர சேர்க்கை

  “அம்மா இருட்டா இருக்கு”, ரமணி தன் அன்னையின் இடுப்பை கட்டி அணைத்துக் கொண்டான். “விளக்கு ஏத்த எண்ணெய் இல்லடா ராஜா. அம்மாவை கட்டி பிடிச்சுக்கோ; பயம் போயிடும்” “உனக்கு தான் தெரியும் இல்ல? நான் சின்ன வயசிலிருந்து இப்படி தான்-ன்னு. எண்ணெய் வாங்கி வெக்க வேண்டியது தானே?” ஒரே நேரத்தில் பயமும், கோபமும்; விசித்திர சேர்க்கை தான். “இந்த வாரம் வேலை கம்மி டா. கஞ்சிக்கே சரியா போச்சு. நீ ஆம்பள புள்ள! நம்மள மாதிரி ஏழைங்களுக்கு […]


 • ‘அது’ வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னே

  ‘அது’ வரும் பின்னே, சிந்தை தெளியட்டும் முன்னே

  “ஓடு! மேல ஓடு! நிக்காதே”, நந்தினியின் தோளைப் பற்றித் தள்ளினார் வாசுதேவன். “நீங்களும் வாங்க. கிட்ட வந்திடுச்சு. வாங்க சீக்கிரம்”, படபடப்போடு அழுகையை கலந்தது ஒரு காரமான ரசத்துடன் வெளிவந்தது நந்தினியின் குரலில். தன் கணவர் கட்டளையை மீறாமல் கையில் இரு தலையணை மற்றும் ஒரு பாயுடன் மாடிக்கு ஓடினாள். இரண்டு ஆறறிவு ஜீவன்களையும், ஒரு ஐந்தறிவு ஜீவனையும் காப்பாற்றிவிட்டு அஃறினைகளை அடைகாக்க வீட்டின் உள்ளே ஓடினார். எல்லா திசையிலும் பரபரப்புடன் ஓடித் தேடியும் ஒன்றும் சிக்கவில்லை. […]


 • மூன்று கன்னங்களில், மூன்று விரல்கள்

  மூன்று கன்னங்களில், மூன்று விரல்கள்

  “என்னய்யா கேசு?”, இடுப்பில் நிக்காத காக்கி கால் சட்டையை மேலே இழுத்தபடி உள்ளே நுழைந்தார் துணை ஆய்வாளர். நாள் முழுவதும் அமைச்சரின் ‘மது, புகையிலை விலக்குப் பேரணியில்’ விறைப்பாக சல்யூட் அடித்துவிட்டு களைத்துப் போய் வந்திருந்தவருக்கு, குடுவையிலிருந்து தேநீர் கொடுத்தார் ஏட்டு. அவர் வாயின் வலுக்கட்டாயத்தால் கொஞ்சமாக உள்ளே சென்றது நீர்மம். அவர் தேநீரின் சூட்டை சுவை பார்க்க நேரம் கொடுத்துவிட்டு, “மூணு பெற மொத்து மொத்துன்னு மொத்திருக்கான் சார்”, என்றார். “குடும்பப் பகையா?” “இல்ல சார்” […]


 • தளம் மாறிய மூட நம்பிக்கை!

  தளம் மாறிய மூட நம்பிக்கை!

  “ஒரு முறை மட்டுமே உபயோகம் படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் தடை செய்யப் பட்டுள்ளது. நாங்கள் விற்பதுமில்லை! உபயோகிப்பதுமில்லை!” அருகாமையில் இருந்த கடையில் ‘பன்னீர்’ சோடா குடித்துக் கொண்டிருந்த நான், ஒட்டப் பட்ட துண்டு பிரசுரத்தை கவனித்தேன். “நல்ல விஷயமில்ல? ஹ்ம்ம். ஏதோ கொஞ்சமா நல்லதும் நடக்கத் தான் செய்யுது”, மனமூலமாக நகராட்சியின் மீது மலர்களை தூவினேன். “எவ்ளோ?” “நாலு ரூபா தம்பி”, “இந்தாங்க”, சில்லறையை கொடுத்துவிட்டு வண்டியில் ஏறினேன். வீட்டை நோக்கிப் பயணம். […]