”சிவராசனுக்கு கறன்ற் அடிச்சு பெரியாஸ்பத்திரியிலை இருக்கின்றாராம். நாங்கள் எல்லாரும் பாக்கப் போறம். கெதியிலை வெளிக்கிடு. அப்பா சந்தியிலை கார் பிடிக்கப் போயிட்டார்” அம்மா சொன்னார். நாங்கள் குடும்பமாக போவது என்றால் தான் அப்பா கார் பிடிப்பார். முன்னர் ஒரு தடவை ‘அன்னையும் பிதாவும்’ படம் பார்க்க அப்படிப் போயிருந்தோம். அமரசிங்கம் அண்ணையின் கார் வந்துவிட்டது. அப்பா சைக்கிளை காரின் மேல் போட்டுக் கொண்டுவந்தார். நான் காரின் ஜன்னலோரமாக அமர்ந்திருந்தேன். அப்பா முன் […]
கே.எஸ்.சுதாகர் ரமணன் அவுஸ்திரேலியாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. அவுஸ்திரேலியாவில் வேலை எடுப்பதென்பது முயற்கொம்பு போல் ஆகிவிட்டது. அம்மா மகேஸ்வரி கடிதம் எழுதிக் கொண்டதன்படி, நடராஜா மாமா வீட்டிற்கு ஒரு தடவை போய்ப் பார்த்தால் என்ன என்று ரமணனுக்கு தோன்றியது. நடராஜா மாமாவின் மகன் ரகுவின் திருமணத்தின் போது மாப்பிள்ளைத் தோழனாக தான் நின்றதை ரமணன் நினைத்துப் பார்த்தான். பதினைந்து பதினாறு வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் நடந்த தடல்புடலான கலியாணம் அது. மாப்பிள்ளை, […]
கே.எஸ்.சுதாகர் இரவின் பனியில் நனைந்த ‘அக்பர்’ பாலத்தின்மீது, நான்கு பெண்கள் நடுங்கியபடி பொறியியல்பீடம் நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். மகாவலி நதிக்குக் குறுக்காக இரண்டு தூண்களின் உதவியுடன் கம்பீரமாக நிற்கும் அந்தப் பாலம் இடிந்து விழக்கூடும் என்ற நடுக்கம் அல்ல அது. எதிராக வந்து கொண்டிருக்கும் ஐந்து ராக்கிங் பூதங்களைக் கண்டுவிட்ட பயப்பீதி அது. ”பெயர்களை ஒவ்வொருத்தராகச் சொல்லுங்கள்!” “பரமேஸ்வரி, கெளசி, பல்லவி, தாரினி” இந்த விளையாட்டு கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகின்றது. “பல்லவி மாத்திரம் இதிலை […]
கே.எஸ்.சுதாகர் பென்டிக்கோ (விக்டோரியா, அவுஸ்திரேலியா) நோக்கிய ஒரு பயணம் – கட்டுரை சமீப காலங்களாக எனது சீனநண்பர் ஒருவரை சிலர் ‘பென்டிக்கொ பென்டிக்கோ’ என்று பரிகாசம் செய்வதைக் கண்டிருக்கின்றேன். அவரை அணுகி விபரத்தைக் கேட்டறிந்தேன். “எனது மகள் primary school இல் இருந்து secondary school இற்கு படிக்கப் போக இருக்கின்றார். மெல்பேர்ண் நகரத்தில் உள்ள பிரபலமான பெண்கள் கல்லூரியான Mac.Robertson Girls’ High School இற்குப் போவதற்காக அவர் முயற்சி எடுத்து வருகின்றார். BENDIGO இல் […]
கே.எஸ்.சுதாகர் வட துருவ நாடான பின்லாந்தின் – பசுமை நினைவுகள் என்ற புத்தகம், தென் துருவ நாட்டில் வசிக்கும் எனக்குக் கடந்த மாதம் கிடைத்தது. ஒருகாலத்தில் வீரகேசரிப் பிரசுரம் பல நல்ல நாவல்களைத் தந்தது. என் இளமைக்காலத்தில் பல வீரகேசரிப்பிரசுர நாவல்களைப் படித்திருக்கின்றேன். நாவல்களின் சாரம் என் நினைவில் இல்லாவிடினும், நாவல்களின் பெயர்கள் என் நினைவில் நிழலாடுகின்றன. அந்த நாவல்களில் ‘அந்தரங்க கீதம்’, ‘பொன்னான மலரல்லவோ’ என்ற நாவல்களை எழுதிய உதயணன் என்பவர் இந்த […]
கே.எஸ்.சுதாகர் ஒன்றை நினைத்து – முற்றுமுழுதாக நம்பி – அதுவே கதியென்று தஞ்சமடைந்து, பின்னர் அது கிடைக்காமல் மனம் புழுங்குகிற கொடுமை இருக்கிறதே அதைச் சொல்லி மாளாது. அந்தக் கதிதான் இப்போ நடேசனுக்கும். வேலை பறிபோய்விட்டது. எந்தவித மின்னலுமில்லாமல் இடி முழங்கிவிட்டது. ‘ஃபரடைஸ்’ ஹோட்டலில் சாப்பிடுகிற அளவுக்கு இப்ப காசுப்புழக்கம் இல்லை. வந்தாயிற்று. சாப்பிட்டாயிற்று. சர்வர் பில்லைக் கொண்டுவந்து வைத்தான். “அட முப்பது ரூபா…” ரிப்ஸ் வைக்கக் காசு காணாத கலவரம். பொக்கற்றுக்குள் துளாவியபோது ஒரு ஐம்பது […]
கே.எஸ்.சுதாகர் நான் ஒரு தடவை அய்ரோப்பாவை சுற்றிப் பார்ப்பதற்கு விரும்பினேன். அப்போது எனக்கு வயது 55 ஆகிவிட்டது. திட்டமிட்டபடி அவுஸ்திரேலியாவில் ஒரு குளிர்காலத்தில் நானும் மனைவியும் மகனுமாகப் பிரயாணத்தை ஆரம்பித்தோம். அப்போது அய்ரோப்பாவில் கோடை காலம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிரான்சில் எனது பாடசாலை நண்பன் குநேசன் இருக்கின்றான். பிரான்சை நான் முதலில் தெரிவு செய்தது, முதற்கோணல் முற்றும் கோணல் என்றாகிவிட்டது. வாழ்வில் எத்தனையோ நாட்கள் வருகின்றன, போகின்றன. ஆனால் அன்றையநாள் ஒரு மறக்கமுடியாத நாள் ஆகிவிட்டது. […]
கே.எஸ்.சுதாகர் காலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்தச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது. செய்தி இதுதான். |காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.| ● எத்தகைய […]
கே.எஸ்.சுதாகர் சிட்னியின் புறநகர்ப் பகுதியில்தான் அந்த முதியோர் பராமரிப்பு இல்லம். அதன் பின்புறமிருந்த கார்த் தரிப்பிடத்தில் காரை நிற்பாட்டினேன். நண்பன் சிவத்தின் அம்மா நேசம் அங்குதான் இருக்கின்றார். அவரை அங்கு கொண்டுவந்து விட்டுப் போனதில் எனக்குப் பெருத்த சந்தேகம். தன்னைத்தானே கவனித்துக் கொண்டு, அடுத்தவருக்கு எந்தவித தொல்லையும் கொடுக்காமல் இருந்துவந்த அவரை – திடீரென்று யாருக்கும் சொல்லாமல் ஏன் அங்கு கொண்டுவந்து விட வேண்டும்? எதுவும் எப்பவும் நடக்கலாம் தான். ஆனாலும்? அவரைப் பார்ப்பதற்காக சிவத்துடன் ஒரு […]
‘பிரபல பின்நவீனத்துவ (Postmodernism) எழுத்தாளர் சாரங்கன் அவர்கள் எதிர்வரும் மாதத்தில் (20.06.2015) நடைபெற இருக்கும் எழுத்தாளர் விழாவில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவில் இருந்து வருகை தர இருக்கின்றார். ஒரு வாரகாலம் நடைபெறும் இந்த எழுத்தாளர் விழாவின்போது அவர் என்னுடைய வீட்டில் தங்கியிருப்பார். அவருடன் கலந்துரையாடுவதற்கு வசதியாக ஒருநாள் கூட்டமொன்று ஒழுங்கு செய்யப்படுகின்றது. கலந்துகொள்ள விருப்பமானவர்கள் தொடர்பு கொள்ளவும் – பாலமுருகன்’ – என்று ஒரு விளம்பரம் பத்திரிகையில் வெளியாகியிருந்தது. பெண்கள் பற்றியும் செக்ஸ் […]