இருள் கவிய சாலை சர்ப்பமாகும். சாலையில் அம்மா கையை உதறி விட்டுக் குழந்தை ஓடும். பதறிச் சாலைக்கும் முந்தி சடுதியில் ஓடிப் போய்ப் பிடிப்பாள் அம்மா. அம்மா! அதென்ன? மரம். அதக் கேட்கல. காக்கா. அதக் கேட்கல. ஆகாசம். அதக் கேட்கல. மேகம். அதக் கேட்கல. நட்சத்திரம். அதக் கேட்கல. நிலா. அதக் கேட்கல. போடி! தெரியாது. கைகள் விசிறியாய்க் குழந்தை சிரிக்கும். அம்மா குழந்தையை வாரி மழைமுத்தம் பொழிவாள். அஞ்ஞான்று உலகெலாம் சிலிர்ப்பது தெரியும். கு.அழகர்சாமி
ஊழலின் செயல்பாட்டை இரு கண்ணோட்டங்களில் புரிந்து கொள்ளலாம். ஒன்று அமைப்பு ரீதியில்; மற்றொன்று அன்றாட வாழ்வின் தளத்தில். அமைப்பு சார் ஊழல்கள்(systemic corruption) சமுதாயத்தைச் சீரழிக்கின்றன. பொருளாதாரத்தைப் பாழடிக்கின்றன. அலைக் கற்றை, நிலக்கரி, மணல், நிலம் என்று ஒன்றையும் விட்டு வைக்காமல் இயற்கைத் தாதுப் பொருட்களைச் சுரண்டி இந்தியாவில் நிகழ்த்தப்பட்டுள்ள ஊழல்கள் இதனைத் தெளிவாக்குகின்றன. அன்றாட வாழ்வில் நிகழ்த்தப்படும் ஊழல்கள் அமைப்பு சார் ஊழல்கள் போலல்லாமல் மக்களை நேரடியாய்ப் பாதிக்கின்றன. நச்சாய் நச்சரிக்கின்றன. இவை மக்கள் மேல் […]
கடலைக் கைகளில் தூக்கி வைத்துக் கொள்வேன். அடம் பிடிக்காதே என்று அறிவுறுத்துவேன். அழுது கொண்டே இருக்காதே என்று சமாதானப்படுத்துவேன். நிலாவைப் பார் என்று வேடிக்கை காட்டுவேன். அலைகளில் துள்ளித் துள்ளி விளையாடுவது கண்டு ஆனந்திப்பேன். ஆகாயச் சட்டை போட்டு விட்டு அழகு பார்ப்பேன். தினம் தினம் வீட்டுக்குக் கூட்டி வந்து விடுவேன். இரவில் என் கூடப் படுக்க வைத்துக் கொள்வேன். தூங்காத கடலைத் தூங்க […]
கடல் பேசிக் கொண்டே இருக்கும். கேட்டுக் கொண்டே இருப்பேன். ஒவ்வொரு கணமும் அலை அலையாய் முடியாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்கும். கடல் விரிவினும் மிக்கதோர் உண்மையைக் கற்றுக் கொள்ள கடல் கேட்கும் கேள்விகளா? ஆழத்தில் உள்ளொடுங்கின் அமைதியென்று மெளனமாய் இருக்கை நன்றென்று உணர்வேன். கடல் மறந்ததை கடலிடம் சொல்லி விடலாமென்றால் கடல் பேசாமல் ஓய்வதாயில்லை. கு.அழகர்சாமி
பொழுது சாயும் வேளை. கறுப்புப் பூனை பரபரப்பாயிருக்கும். காரணமில்லாமல் இருக்காது. இருளின் துளியாய்த் திரியும் அது. இன்று இருளைத் தூவித் துரிதப்படுத்த முடிவு செய்திருக்கும். கால் பதித்த இடங்கள் கறுப்பு மச்சங்களென கறுப்புக் கோடுகளை மைதானமெங்கும் இழுத்துத் தாவியோட இரவு முன் கூட்டியே இறங்கியிருக்கும். பல் நாய்க்குட்டிகள் தாய் நாயின் பால் முலையை உண்ணுவது போல் மண்ணில் விழுதுகள் ஊன்றியிருக்கும் ஆல்மரத்தின் மேல் தாவும். மேகங்களை மண்டியிட வைக்கப் […]
கு.அழகர்சாமி நெல் விளையும் காவிரி பூமியிலே கல் விளைத்த கவின் கோயில் அதிசியம். பெருங்கனவின் தொடுவானை மீறித் தொட்ட அருஞ்செயலின் கலைச்சிற்ப சாகசம். ஏக வெளியைக் காதலித்துக் கைப்பிடித்து எல்லை தாண்டிய கோபுரக் கலை உச்சம். நடமாடாக் கற்கோயில் கலை நடனம். நடுவெளியில் நிலத்தொளிரும் கலைதீபம். சட்டென இங்கென்று தென்பட்டுச் சிரிக்கும் காட்டுப் பூவெனும் கட்டிடக் கலையின் மந்தகாசம். பறவைகள் வட்டமிட்டுப் பறந்து வியந்து பாடும் வீழாநிழல் கல்லால(ய) மரமெனும் வித்தகம். நேர்கண்டவுடன் நிறைவாகி கண்கள் வழி […]
இரகசியமாய் இருக்க முடியவில்லை. ஜன்னலாய் மூட நினைத்தால் நான் கதவில்லாத ஜன்னல். திரையென்று மறைக்க நினைத்தால் நான் வெட்டவெளி வானம். வாசல் கதவு சாத்தப் போய் வாசலுக்கு வெளியே நான். பிறர் கண்களை மூடப் பார்த்தால் என் கண்கள் பிறர் கண்கள். என் கண்களை மூடப் பார்த்தால் பிறர் கண்கள் என் கண்கள். இருளென்று நினைத்தால் இருளுக்குள் கரந்திருக்கும் வெளிச்சம் கவனிக்கும் என்னை. என் ஆடையும் ’சக்கரவர்த்தி’ […]
(1) ஒரு மீன் செத்து மிதக்கும். குளத்தின் தண்ணீரில் குளம் விடும் கண்ணீர் தெரியவில்லை. (2) ஒன்றும் குறைந்து போவதில்லை. படிகள் இறங்கிச் செல்லும் குளத்திற்கு உதவ. (3) குளத்தில் போட்ட கல். பாவம்; நீந்தியிருந்தால் மீனாகியிருக்கலாம். (4) நீர் நிறைந்து தெளியும் குளம் கண்ணாடியா? சூரியனை எறிந்து பார் தெரியும். (5) ஊர்க் குளம் காணோம். அடுக்கு மாடி வீடுகள் குடித்திருக்கும். […]
அண்டத் தொகுதியின் எந்த ஒரு கோளின் கோடியிலிருந்தோ ஓர் அதீத ஜீவி கண்ணிமைக்கும் மின்னல் இயக்கத்தில் கட்டமைத்த விண்கலத்தில் உ(ரு)ண்டை பூமியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும். எத்தனை சூரியரோ? சூரிய வெளிச்சக் கீற்றுகளின் சூக்குமப் படிக்கட்டுகளில் சும்மா மாறி மாறித்தாவி சீறி சீறிப் பாய்வது போல் பயணிக்கும். கால முள் பின்னகர இந்த ஸ்திதியிலிருந்து இன்னொரு ஸ்திதியில் மாறி இனிப் பயணம் தொடரும். பூமி சேருமுன் எந்த ஸ்திதியில் எப்படிச் சேரும் என்பதைக் […]
இரயில் எதற்கோ நிற்க ’இரயில் நின்ற இடமாகும்’ பெயர் தெரியாத ஒரு பொட்டல்வெளி. இரயில் விரித்த புத்தகம் போல் வெளியின் இரு பக்கங்களிலும் விரிந்து காணும் காட்சிகள். பாதி பிரபஞ்ச ஆரஞ்சுப் பழமாய் ஆகாயம் கவிழ்ந்து கிடக்கும். சடுதியில் ’மூடு வெயில்’ இறங்கி வந்து கருவேல முள்ளில் கிழிபட்ட காயத்தில் மறு கணத்தில் ’சுள்ளென்று’ உக்கிரம் கொள்ளும். கண்ணுக்கெட்டிய தொலைவில் சின்னப் புள்ளிகள் உயிர் கொண்டு நகர்வது போல் சில […]