Articles Posted by the Author:

 • கவிதைகள்

  கவிதைகள்

      (1) காத்திருக்கும் காடு   செல்லுமிடமெல்லாம் எம்மோடுகூட வரும் செழித்த பெருங் காடு.   ஒரு பெரிய ஓவியச் சீலையின் மூலையில் ஏதோ வரைவது போல் ஒரு கலைமான் காட்டில் எங்கேயோ திரிவது தெரியும்.   எம்மருகில் தெரியும் பெயர் தெரியா மரமும் காட்டில் எங்கேயோ இருக்கும் மரம்.   மேல் உறைந்து பனி அடியில் நதி மெல்ல நகருமென மெய்யுள் மூச்சோடும்.   புலி எங்கே?   புலி வந்து போகும் சிறு […]


 • சிநேகிதம்

  சிநேகிதம்

  செல்லவில்லை. இல்லை செல்ல முடியவில்லை. செல்ல முடிந்திருந்தாலும் ‘எடுப்பதற்குள்’ சென்றிருக்க முடியுமா? ‘எடுப்பதற்குள்’ சென்றிருக்க முடிந்தாலும் இற்றைப் பொழுதில் இரு பறவைகளில் ஒரு பறவை தனியாய் இன்னொன்றை நினைந்திருப்பதைப் போல அற்றைப் பொழுதிலும் அவனை நினைந்திருந்திருப்பேன் என்பதன்றி வேறென்ன செய்திருக்க முடியும்? சென்றிருக்க முடியும் என்பதால் இப்படியெல்லாம் என் வாலை நானே விழுங்குகிறேனா? செல்லவில்லை என் பால்ய சிநேகிதன் சாவுக்கு என்பது நினைத்தால் தேள் கொட்டும் இன்னும். கு.அழகர்சாமி


 • இளைப்பாறல்

  இளைப்பாறல்

  சற்று நில். மண் பற்றிக் கொள்ளட்டும். திரிந்தலையும் மேகங்களைக் கண்டு பறந்தலையும் பறவைகள் உன்னிடம் சேருங் கால் இளைப்பாறுவாய் நீ நினைப்பொடுங்கி நிழல் பரப்பும் தருவாகி. கு.அழகர்சாமி


 • ஆட்டம்

  ஆட்டம்

  ஆட்டம் சூடு பிடித்திருக்கும். கணிணியும் அவனும் மோதும் உச்சக்கட்டத்தில் கவனத்தின் குண்டூசி முனையில் இறுதிப் போர் நடக்கும். தன்னையே தான் பணயம் வைத்து ஆடுகிறானா? கடைசி நகர்த்தலில் கணிணி நகைக்கும். காணோம் அவன். தேடி ’மெளஸைக்’ ‘கிளிக்’ செய்தால் மெலிதாய்க் கீச்சிடுவான். கு.அழகர்சாமி


 • இலங்கை

  இலங்கை

    (1)   என்ன ஆனான் அவர்களிடம் அவன்?   காணவில்லை அவன்.   ’காணாமல் போய் விட்டானெ’ன்று ஏதோ தெரியாததைத் தெரிவிப்பது போல் தெரிந்ததே தெரிவிக்கப்படும்.   கரைந்த கனவா அவன்?   பொய்த்தவர் முதலில் தம்மிடம் தோற்றுப் போனவரென்று அவர்களுக்குத் தெரியவில்லை.   எப்படி அவர்கள் கொலை நிழலை மண்ணில் குழி தோண்டிப் புதைத்து விட முடியுமென்று நம்புகிறார்கள் ?   மண்ணிலிருந்து மீட்டெழும் அவன் எலும்புக் கூடு மானுடத்தின் சாட்சியாய்.   அது […]


 • அப்பா வாசித்த திருக்குறள் புத்தகம்

  அப்பா வாசித்த திருக்குறள் புத்தகம்

      நைந்து  போயிருக்கும் புத்தகம்.   அட்டைகள் இல்லை.   முன் பக்கங்கள் சில முகம் கிழிந்து போயிருக்கும்.   கிழிந்த பக்கங்கள் கவனமாய் நூல் கட்டி வைக்கப்பட்டிருக்கும்.   ஒடிந்து போய் விடுமோ என்று எத்தனையோ பக்கங்கள் ஓய்ந்திருக்கும்.   திரிக்கப்பட்ட சிறிய நூலொன்று புத்தக  அடையாளமாய் வைக்கப்பட்டிருக்கும்.   கடைசியாய் எந்தப் பக்கம் வாசிக்கப்பட்டிருக்குமென்று தெரியவில்லை.   புத்தகத்துக்குத் தெரியுமோ?   கவனமாய் புத்தகத்தைத் திறப்பேன் பழங்காலப் புதையல் போல.   எங்கே […]


 • இயக்கமும் மயக்கமும்

  இயக்கமும் மயக்கமும்

    (1) ஓடும் ஆற்றைச் சதா பாலம் கடக்கும்.   (2) ஊருக்கு நடக்கும் முன்னே ஊர் போய்ச் சேர்ந்திருக்கும் அவசரமாய் ஒற்றையடிப் பாதை.   (3) எங்கு போய் நிற்பதென்று ஓடிப் பார்த்து விடவேண்டுமென்று ஓடும் நெடுஞ்சாலையில் ஓடும் ஒரு நாய்.   (4) இளைக்க ஓடும் இரயிலின் சக்கரக்கால் பாய்ச்சலை முறியடிக்கும் மலைத் தொடர் சாவகாசமாய் ஊர்ந்து. (5) நீந்த நதி நெடுக இரு கரையும் சதா காத்திருக்கும்.   (6) ஊரும் எறும்புகளில் […]


 • பெரிதே உலகம்

  பெரிதே உலகம்

  கத்திரி வெயில் வறுத்தெடுக்கும் கடற்கரை மணலில் கைவிடப்பட்டதாய்த் திரியும் கிழவனுக்கு அலைகள் தேற்றினாலும் என்ன ஆதரவிருக்கும்? சேரிக் குடிசையிலிருந்து தன் பெண்டின் சிகையைப் பிடித்து ’தர தர’வென்று தெருவில் இழுத்துச் செல்லும் ’தற்கொண்டானுக்கு’ என்ன இரக்கமிருக்கும்? பேருந்திலிருந்து கழுத்தைப் பிடித்து நெட்டித் தள்ளிவிடப்பட்டு சாலைப் புழுதியில் விழுந்து கிடக்கும் குடிகாரன் மேல் பயணிகள் யாருக்கும் என்ன அக்கறையிருக்கும்? பரட்டைத் தலையும் கந்தையுமாய்த் தான் பாட்டுக்குத் திரியும் பைத்தியக்காரனை ’லத்தி’யில் துரத்தும் போலிஸ்காரனுக்கு என்ன நியாயமிருக்கும்? உலகில் எல்லா […]


 • கேட்ட மற்ற கேள்விகள்

  கேட்ட மற்ற கேள்விகள்

      இன்னும் சூரியன் முகம் காட்டவில்லை.   கதவு தட்டப்படும்.   கதவைத் திறக்க கண்டு நாளும் பேசிக் கொள்ளும் ஒற்றைத் தென்னை குனிந்து நிற்கும்.   நேற்றிரவு நிலா இல்லாத வானம் கண்டு உறக்கமில்லையா?   அடையும் பறவைகளில் ஏதேனும் ஒன்று வரவில்லையா?   எதிர் வீட்டு மாடியில் தனித்து விடப்பட்ட தொண்டு கிழவர் ‘தொண தொண’வென்று சதா இரவெல்லாம் பேசித் தொலைத்தாரா?   வாழ்வின் கவலைகள் இப்படித் தேங்காய்க் குலையாய்க் கனக்குமென்று தெரியவில்லையென்றா? […]


 • குழந்தைகளும் தட்டான் பூச்சிகளும்

  குழந்தைகளும் தட்டான் பூச்சிகளும்

  காடு விட்டு பட்டாம் பூச்சிகள் கூட்டமாய் வந்தது போலிருக்கும். சிறகடிக்கும் மனம் போல் விரிந்து கிடக்கும் மைதானத்தில் குழந்தைகள். ஓடித் தொட்டு ஓடித் தொட்டு விளையாடும். யாரும் தோற்கவில்லை. யாரும் ஜெயிக்கவில்லை. விழுந்து எழும். எழுந்து விழும். கூட ஓடி ஓடி மைதானமும் களைத்துப் போய் ஒரு மூலையில் போய் உட்காரும். குழந்தைகளின் விளையாட்டு கலையும். குழந்தைகள் விட்டுப் போன விளையாட்டைக் கண்டு கலையாது வெளியில் தட்டான் பூச்சிகள் விளையாடும். கு.அழகர்சாமி