குமரி எஸ். நீலகண்டன் ஒருவன் நடக்க முடியாமல் தடுமாறுகிறான். இன்னொருவன் கைத்தாங்கலாய் அனுசரணையுடன் உதவுகிறான். நோயுற்று இருக்கும் அம்மாவின் துயரத்தைச் சொல்லி ஒருவன் கதறி கதறி அழ சுற்றி இருக்கும் பலரின் கண்களில் நெருப்பு எரிய தீ அணைக்கும் வண்டி போல் கன்னத்திலெல்லாம் நீர் பாய்ந்து வழிகிறது. ஒருவன் செருமி செருமி இரும பக்கத்திலொருவன் கோப்பையில் தண்ணீர் விட்டு உதவுகிறான். ஆடையே இல்லாமல் ஒருவன் அழுது புலம்ப இன்னொருவன் தன் ஆடையை அவிழ்த்து அவன் மானம் காக்கிறான். […]
குமரி எஸ். நீலகண்டன் இப்பொதெல்லாம் பறவைகளின் சப்தம் எப்போதும் தெளிவாய் கேட்கின்றது. சூரிய ஒளிகள் தடையின்றி பூமியில் விழுகின்றன.. காற்று சுதந்திரமாய் உலாவிற்று. மலைப்பாம்பாய் நெளிந்த நெடுஞ்சாலைகள் நிம்மதியாய் சப்தமின்றி தூங்கின. தெரு நாய்கள் வாலாட்ட மனிதர்களின்றி அலைந்தன. பூனைகள் கைக்குழந்தைகளாய் அலறின. ஊரே அடங்கிற்று. அஞ்சி நடுங்கினர் மனிதர்கள் தன்னையும் தன்னை சுற்றி இருப்பவர்களையும் கண்டு… எல்லாவற்றிற்கும் அஞ்சினர் காண்பவற்றையும் காணாதவற்றையும் மனதில் கண்டு… ஓடி ஒளிந்து கொண்டனர் மனிதர்கள் உள்ளே உள்ளே… அகமும் தெரியவில்லை […]
தமிழில் – குமரி எஸ். நீலகண்டன் லீலாக் என்ற புனைப் பெயரில் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதிவரும் உபாசனா சிறந்த ஓவியரும் கூட. தனது ஒவியங்களையும் கவிதைகளையும் இரண்டு சிறகுகளாய் கொண்டு இலக்கிய உலகில் பயணிப்பவர். கலை ஆசிரியரும் கூட. கவிஞரின் வாழ்த்துக்கள் என் கவிதைகளுக்கு எந்த விதிகளுமில்லை. எழுதுவதற்கு எந்த காரணங்களுமில்லை. ஒவ்வொரு வரியும் சமமானது. மென்மையானது. ஒவ்வொரு வார்த்தையும் ரகசியம் இழந்தது. என் கவிதைகள் செய்யுளாய் இருக்கும். திணறும். என் கவிதைகள் ஆடும். தடுமாறும் மீன்களும் […]
குமரி எஸ்.நீலகண்டன் மகாகவி பாரதியின் பேத்தி டாக்டர் விஜயபாரதி தனது 81 வது வயதில் கனடாவில் காலமானார். பாரதியின் மூத்த மகள் தங்கம்மா பாரதியின் புதல்வி. செல்லம்மா பாரதியின் வாய்வழி பாரதியின் பாடல்களை கேட்டு வளர்ந்தவர். சுமார் 15 வருடங்களுக்கு முன்பு நான் சென்னை வந்த புதிது. விஜயபாரதி குடும்பம் கனடாவிலிருந்து விடுமுறையில் பாரதியின் கவிதைகளின் செம்பதிப்பை வெளியிடும் முயற்சியில் சென்னை வந்திருந்தனர். அப்போது அவர்கள் பாரதி பிறந்த எட்டயபுரத்திற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது அங்கே அவர்கள் சென்ற […]
குமரி எஸ். நீலகண்டன் இந்திய ஜன நாயகமானது வலுவானது. உலகிற்கு வழி காட்டக் கூடியது. ஆனால் பொதுநலப் போர்வையை போர்த்திக் கொண்டு அலைகிற சுயநலவாதிகளால் ஜனநாயகமானது தனது ஆரோக்கியத்தை இழந்து கொண்டிருப்பது எதார்த்தம். இன்றைய இந்திய சமூகத்தில் படித்தவர்களில் பத்து பேரிடம் இந்திய ஜனாதிபதி யாரென்று கேட்டால் எத்தனை பேர் சரியாக பதில் சொல்வார்கள்? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தனது ஜனாதிபதியின் பெயரைக் கூட தெரியாத அளவில் படித்த சாதாரண ஜனங்களை நமது பாரம்பரியமிக்க பாரத […]
குமரி எஸ். நீலகண்டன். உலகம் மிகவும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. அழகான உலகம் ஆபத்தின் விளிம்பில் நிற்கிறது. வானம், பூமி, காற்று, கடல், நெருப்பு, பனி, தாவரங்கள், விலங்குகள்,பறவைகள், நுண்ணுயிரிகள், மனிதர்கள் எல்லாம் உள்ளடக்கிய உலகத்தை ஒருவன் அழித்து கொண்டிருக்கிறான். அவன்தான் மனிதன். மனிதனின் ஆசை என்ற புயலில் வானம் கிழிந்து போய் கிடக்கிறது. காற்று விஷத்தில் தோய்ந்து கிடக்கிறது. கடலானது பிளாஸ்டிக், குப்பைகள், வேதிப் பொருட்கள் உட்பட்ட நச்சுக் கழிவுகளால் கருப்புக் கடலாகிக் கொண்டிருக்கிறது. […]
நடிகர் சிவகுமார் அவர்கள் ஈரோட்டில் பேசிய இரண்டு மணி நேர மகாபாரத சொற்பொழிவின் காட்சிப் பதிவினை சமீபத்தில் பார்த்தேன். என்னைப் பொறுத்தவரை எந்தக் குறிப்புமில்லாமல் மகாபாரதக் கதையை சொல்வதென்பது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு கடலில் நீந்திக் கடப்பதற்கு ஒப்பானது. இன்னொரு உதாரணம் கூட சொல்லலாம். திசை தெரியாத அடர்ந்த வனத்திற்குள் நூறு கிலோ மீட்டர் தூரத்திலிருந்து தன்னந்தனியனாய் வெளியே வருவதற்கு ஒப்பானதாகும். மகாபாரதக் கதையை கையாளுவதென்பது மிகவும் கடினமானது. நிறைய குட்டிக் […]
குமரி எஸ். நீலகண்டன் இரவு ஒரு மணி… மயான அமைதி… ஆம்புலன்ஸ் சப்தம்… எங்கும் நிசப்தம்… இலைகளெல்லாம் சிலைகளாய் விறைத்து நின்றன.. வாகனங்கள் முக்கி முக்கி முன்னேறிக் கொண்டிருந்தன.. மழை அழுது கொண்டே இருந்தது.. உண்மையை உரக்கச் சொன்னது இயற்கை…. உணவில்லை…உடையில்லை.. பணமில்லை…மதமில்லை சாதியில்லை.. பதவி இல்லை…பகட்டு இல்லை.. ஆண், பெண் பேதமில்லை… மழை தன் கத்தியால் கீறிக் குதறியது.. பூமியை பிய்த்து எறிந்து வீறாப்புடன் என்றோ இழந்த இடங்களையெல்லாம் மீட்டெடுத்தது. இயற்கையின் ருத்ர தாண்டவம்.. மழையின் […]
சங்கம் தழைத்த கூடல் மாநகர் காற்றோடு கூடவே மலர்ந்தது அங்கே ஒரு அற்புத மலர்… அபூர்வமாய் இருந்தது… தாமரையாகவே தெரிந்தது… அதன் இதழ்கள், தண்டு, இலை, வேரெங்கிலும் ஒரு போற்றுதலுக்குரிய ஒரு புனித ஒளியின் பிரவாகத்தை காண இயன்றது… சேறுகளும், சகதிகளும் அதை ஒன்றும் செய்யவில்லை… மீன்கள், தவளைகள், புழுக்கள், பூச்சிகளென எல்லோரையும் அன்பாய் அரவணைத்தது அந்த மலர். அதன் வேர்கள் ஒரு பெரிய தணியா தாகத்துடன் விரிந்து விரிந்து பூமியின் அகல […]
நவ ரத்தினங்கள் போல் ஒன்பது கட்டுரைகளைக் கொண்ட செறிவான நூல் டாக்டர் எச். பால சுப்ரமணியம் அவர்களின் இந்திய மொழி இலக்கியக் கட்டுரைகள் என்ற நூல். பயணமும் இலக்கியமும் ஒன்றோடு ஒன்று பிணைந்த ஒன்று…பயணமே அனுபவமாய் கலைச் சித்திரமாய் இதயத்தில் ஆழமாய் பதிந்து ரத்த நாளங்களில் பிரவாகமெடுத்து அழகான இலக்கியமாய் படைக்கப் படுகிறது.. எழுத்துக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட ‘யாத்ரி’ நாகார்ஜூன் எனப்படும் எழுத்துலகப் போராளியின் இலக்கியப் படைப்புக்கள் பற்றிய கட்டுரை நாகார்ஜூன் என்ற ஆளுமையைப் பற்றி […]
பின்னூட்டங்கள்