Articles Posted by the Author:

 • கம்பரின் கடலணை – திருமாலின் பாம்பணை

  முனைவர் மு.பழனியப்பன் தமி்ழ்த் துறைத்தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவாடானை கடலில் கட்டப்பட்ட பழமையான பாலங்களுள் ஒன்றாக விளங்குவது இராமர் கட்டிய சேதுப்பாலம் ஆகும். வால்மீகி இராமாயணத்தில் இப்பாலம் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. கம்பராமாயணத்திலும் இப்பாலம் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. நாசா என்ற அமெரிக்க நிறுவனம் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே பழங்காலத்தில் கடல்வழிப் பாலம் இருந்ததாக செயற்கைக்கோள் வரைபடத்தைச் சான்றாகக் காட்டுகின்றது. இசுலாமிய சமயத்தில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே ஆதாம் பாலம் என்றொரு […]


 • திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பு

  மு.பழனியப்பன் தமிழ்த்துறைத்தலைவர் அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரி திருவாடானை அன்புடையீர் வணக்கம் இதனுடன் செம்மொழித்தமிழாய்வு நிறுவனத்தின் நிதி நல்கையுடன் திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தும் பத்துநாள் பயிலரங்க அழைப்பினை இணைத்துள்ளேன். தலைப்பு மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும் நடைபெறும் நாள்கள் 16-3-2015 முதல் 25-3-2015 வரை இதனைத் தங்கள் இதழில் வெளியிட்டு உதவ அன்புடன் வேண்டுகிறேன். நன்றி அன்புடன் மு.பழனியப்பன்


 • பண்பாட்டு நோக்கில் பாதாதி கேசம், கேசாதி பாதம் ஆகிய சிற்றிலக்கியங்களின் வளர்ச்சி

  பண்பாட்டு நோக்கில் பாதாதி கேசம், கேசாதி பாதம் ஆகிய சிற்றிலக்கியங்களின் வளர்ச்சி

    முனைவர் மு.பழனியப்பன் இணைப்பேராசிரியர் அரசு தலை மற்றும் அறிவியல் கல்லூரி தேவகோட்டை   பதிற்றுப் பத்து, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை போன்ற சங்க இலக்கியப் பனுவல்களில் பாடினி, விறலி பாத்திரம் மிக முக்கியமான பாத்திரமாக இடம்பெற்றிருக்கும். இப்பாத்திரம் கேசம் முதல் பாதம் வரை வருணனை செய்யப்பட்டுள்ள திறம் படிப்பவர் மனதில் விறலி பற்றிய அழகான சித்திரத்தை படியச்செய்யும். இவ்வருணனை பிற்காலத்தில் ஒரு சிற்றிலக்கிய வகையாகத் தோற்றம் பெற்றது. சங்க இலக்கியத்தின் அடிப்படையில் தமிழ் இலக்கிய வகைமையில் […]


 • பெருந்திணை- இலக்கண வளர்ச்சி

  முனைவர் மு.பழனியப்பன் இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை தமிழ் அக இலக்கண மரபில் பெருந்திணை வளர்த்தெடுக்கப்பெற்றுள்ளது. அகன் ஐந்திணையில் தொல்காப்பிய கால வளர்ச்சி நிலை அப்படியே இருக்க, கைக்கிளையும் பெருந்திணையும் பின்வந்த இலக்கண ஆசிரியர்களால் வளர்த்தெடுக்கப்பெற்றுள்ளன. இவ்வளர்ச்சி ஆண், பெண் இருவர் பக்கத்திலும் ஒத்த அன்பினைக் கொள்ளாத கைக்கிளையும், பெருந்திணையும் புறப்பொருள் திணைகளாகவும் கொள்ளத்தக்க அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளன. தொல்காப்பியப் பெருந்திணை தொல்காப்பியர் பெருந்திணைக்கான இலக்கணத்தைப் பின்வருமாறு எடுத்துரைக்கின்றார். […]


 • நாளும் ஞானம் அருளும் திருவாடானையின் திருமுருகன்

  நாளும் ஞானம் அருளும் திருவாடானையின் திருமுருகன்

  முனைவர் மு.பழனியப்பன் இணைப்பேராசிரியர், மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை பாண்டியநாடு தமிழ் வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்கு வகித்த நாடு ஆகும். பாண்டிய நாடு, சங்க காலத்தில் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தது. பக்தி இலக்கிய காலத்தில் ஞான சம்பந்தப் பெருமானை அழைத்து வந்து சைவம் செழிக்க வைத்தது. தொடர்ந்து குமரகுருபரர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் என்று நாளும் பக்திப் பயிர் வளர்க்கும் பகுதியாக பாண்டியநாட்டுப்பகுதி விளங்கி வருகின்றனது. பக்தியும் […]


 • சிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள்

  சிங்கப்பூரில் 34 ஆம் ஆண்டுத் திருமுறை மாநாடு -2014 – பங்கேற்பாளரின் அனுபவக் குறிப்புகள்

      ஆண்டுதோறும் சிங்கப்பூரில் திருமுறை மாநாடு நடைபெற்று வருகின்றது. முப்பத்து நான்கு ஆண்டு காலமாகத் தொடர்ந்து நடத்தப்பட்ட வரும் திருமுறை மாநாடு இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் 1, 2. 3 ஆகிய நாள்களில் சிங்கப்பூர் நகரின் டாங்க் சாலையில் அமைந்துள்ள தெண்டாயுதபாணி கோயில் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் திருமுறை சார்ந்து இயங்கி வரும் பேச்சாளர் ஒருவரை அழைத்து இம்மாநாட்டில் பேசவைப்பது என்ற அடிப்படையில் இவ்வாண்டு அடியேன் செல்லும் வாய்ப்பு […]


 • திருஞான சம்பந்தர் பாடல்களில் சமுதாயம்

  முனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை, 630561 அருள் ஞானக்கன்று, திராவிட சிசு, ஆளுடைய பிள்ளை, காழியர்கோன், தமிழாகரர் போன்ற பல சிறப்புப் பெயர்களுக்கு உரியவர் ஞானசம்பந்தர். அவர் தம் திருமுறைப்பாடல்களில் சமுதாய உணர்வு மேலோங்கப் பாடியுள்ளார். ஆன்மா கடைத்தேறுவது என்ற நிலையில் ஓர் உயிர் மட்டும் கடைத்தேறுவது என்பது எவ்வளவுதான் பெருமை பெற்றது என்றாலும், அது சுயநலம் சார்ந்ததாகிவிடுகின்றது. ஆனால் தன்னுடன் இணைந்த அத்தனை பேரையும் சிவகதிக்கு உள்ளாக்கும் வழிகாட்டியாக […]


 • உத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை

  உத்தமபுத்திரா புருஷோத்தம் – தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை

  தமிழ்க்கவிதைக்குப் புதுவலிமை சேர்க்கும் நல்லதொரு படைப்பு முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை, 630562 9442913985     படைப்பு மனம் வேறுபட்டது. மற்ற மனங்களை விட அது மிகவும் மாறுபட்டது. நுழையாத வாசல்களிலும் அது நுழைந்து பிரிக்கமுடியாத இழைகளையும் அது பிரித்து சேர்க்க முடியாத சேர்மானங்களைச் சேர்த்து, தொடர்பற்றவற்றை தொடர்புபடுத்தி, தொடர்புடையவற்றைத் தொடர்பிலாததாக்கி படைப்பு மனம் செய்யும் புதுமை  காலகாலத்திற்கும் விரிந்து கொண்டே போகின்றது. முழுவதும் எழுதிவிட்ட வள்ளவருக்குப் பின் […]


 • மறைமலையடிகளாரின் நடைக் கோட்பாடு

  மறைமலையடிகளாரின் நடைக் கோட்பாடு

    மறைமலையடிகளார் தனித்தமிழ் அறிஞர் ஆவார். இவர் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பணியாற்றியவர். சைவ சித்தாந்தக் கொள்கைகைளைப் பரப்ப இவர் சைவ சித்தாந்த மகா சமாசத்தை நிறுவினார். தன் வாழ்வில் நாற்பது ஆண்டுகள் துறவியாகக் கழித்த இவர் தமிழின்பால் கொண்டிருந்த பற்றைத் துறக்காதவர். இவர் இலங்கைக்குச் சென்று தமிழறிவு வளர்த்த பேரறிஞர் இவர் அறுபத்துநான்கு நூல்களுக்குமேல் படைத்தவர். இவர் முல்லைப்பாட்டிற்கும் பட்டிப்பாலைக்கும் ஆராய்ச்சி உரைகளை வரைந்துள்ளார். இவ்விரு உரைகளின் வழி  இவர் கைக்கொண்ட உரைமரபுகளை அறிந்துகொள்ள முடிகின்றது. […]


 • பகைவனும் நண்பனே – நூல் பற்றிய கண்ணோட்டம்

  பகைவனும் நண்பனே – நூல் பற்றிய கண்ணோட்டம்

  முனைவர் மு.பழனியப்பன் எம்.ஏ., எம்.பில், பிஎச்.டி., தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை ஏன் எழுத வேண்டும்? எதற்காக எழுத வேண்டும்? எப்படி எழுதவேண்டும் போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே ஒரு சொல்தான் பதில். அனுபவம். அனுபவித்ததை எழுதவேண்டும். மற்றவர்கள் அனுபவிப்பதற்காக எழுதவேண்டும். அனுபவித்தபடி எழுதவேண்டும். அனுபவங்கள் எழுதத் தூண்டும் ஊற்றுக்கண்கள். நம்பிக்கை வறட்சி ஏற்பட்டுவிடுகின்றபோது அனுபவ எழுத்து ஊற்றுகளே வாழ்க்கையை வளமாக்கும் அட்சயப் பாத்திரங்களாகி விடுகின்றன. அனுபவங்கள் மட்டும் வழிநடத்தினால் ஏராளமாய் எழுதலாம். […]