Articles Posted by the Author:

 • மதுரையில் ஆடிய குரவைக்கூத்து

  மதுரையில் ஆடிய குரவைக்கூத்து

  முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிஙகம்அரசு கலைக்கல்லூரி சிவகங்கை ;கண்ணகி கணவன் பின் செல்லும் சாதாரண பெண்ணாக மதுரைக்குள் நுழைகிறாள். மன்னனை எதிர்த்து வழக்காடும்  போர்க்குணம் உடையவளாக ஒரு சில காட்சிகளுக்குப் பிறகு மாற்றம் பெற்றுவிடுகிறாள்.  இந்த மாற்றத்திற்குக் காரணம் எந்நிகழ்வுகளாக இருக்கமுடியும் என்று எண்ணிப் பார்க்கவேண்டிஇருக்கிறது. வேற்றிடத்திலிருந்து மதுரைக்கு வந்துள்ள பெண் கண்ணகி. அவள் கோவலனைப்போல் மதுரையைச் சுற்றிப் பார்க்கவம் இல்லை. ஊரார் நிலை பற்றி அறிந்தவளும் இல்லை. அப்படிப்பட்ட சூழலில் நாடு அறிந்து […]


 • தமிழ்க்கல்வி சிறக்க பரிந்துரைகள் சில

  தமிழ்க்கல்வி சிறக்க பரிந்துரைகள் சில

  தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி,சிவகங்கை. உலகம் முழுவதும் தமிழ் பரவியிருந்தாலும், தமிழர் பரவியிருந்தாலும் தமிழுக்கு எங்கும் இரண்டாம் இடம் என்பதே தற்கால நிலைப்பாடாகும். பொருள் சார்ந்து இயங்கும் இந்த உலகத்தில் படிப்பை முடித்தவுடன்நாளும் பொருளை அள்ளித்தரும் கல்விகளுககு மட்டுமே மக்களிடத்தில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. இந்தச் சூழலில் தமிழைப் படித்தவர்களின் தமிழ்வழியில் படித்தவர்களின் எதிர்காலம் என்பது வரவேற்புமிக்கதாக இல்லை என்பதே உண்மை. மக்களால் விரும்பப்படுகின்ற அளவிற்குத் தமிழ்க் கல்வி அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்குவதாக […]


 • சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்

  சங்க இலக்கியங்களில் பகுத்தறிவுச் சிந்தனைகள்

    முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை   சங்க இலக்கியங்கள் தமிழ் மொழியின் மூத்த இலக்கியங்கள் ஆகும். இதனுள் சங்ககாலத் தமிழரின் அறம், அன்பு, பண்பு, அறிவு போன்ற பல தரப்பட்ட சிந்தனை வளங்கள் பொதிந்து கிடக்கின்றன. தற்போது கிடைக்கும் கடைச்சங்க கால இலக்கியங்கள் ஆரியரின் வருகைக்கு அன்மையில் படைக்கப் பெற்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக ஆரியர் நாகரீகமும், தமிழர் நாகரீகமும் கலந்துப் படைக்கப் […]


 • தொல்காப்பிய அகம் புறம் சார்ந்த இணையப் பதிவுகள்- ஒரு மதிப்பீடு

  தொல்காப்பிய அகம் புறம் சார்ந்த இணையப் பதிவுகள்- ஒரு மதிப்பீடு

  முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை தமிழிலக்கிய மரபுகளுக்கும், நெறிகளுக்கும் தொடக்க மூலமாக அமைவது தொல்காப்பியம் ஆகும். இத்தொல்காப்பியத்தின் கருத்துகளை, கோட்பாடுகளை அறிவிக்கின்ற மூலங்களாக மூல நூல்களும், திறனாய்வு நூல்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள இணையப் பரவலால் தொல்காப்பியம் சார்ந்த கருத்துகள், மூலங்கள் இணையம் வழியாக  பரவி வருகின்றன. அவை பற்றிய தகவல்களையும் மதிப்பீடுகளையும் அளிப்பதாக இக்கட்டுரை அமைகின்றது. தொல்காப்பிய பொருளதிகார நூற்பாக்களை, உரைகளுடன் படிக்க  வாய்ப்பாக தமிழ் […]


 • திருக்குறளைப் பரப்பும் அலேமன் ரமேஷ்ராவ் அவர்களின் குறுவட்டு

  திருக்குறளைப் பரப்பும் அலேமன் ரமேஷ்ராவ் அவர்களின் குறுவட்டு

  தமிழ்த்துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை அழியா மதிப்புடையது திருக்குறள். அதன் அழிவின்மைக்குக் காரணம் அதனுள் உள்ள உண்மைத்தன்மையும் தற்சார்புத்தன்மையின்மையும்தான். திருக்குறளை அழிவில்லாமல் தினம் தினம் மக்கள் மத்தியில் உலாவச் செய்வதன் மூலம் மக்களிடத்தில் அமைதியையும், தெளிவையும், அன்பையும், அறிவையும், பண்பையும், சான்றாண்மையையும், நாகரீகத்தையும் மேம்பாடு அடையச் செய்ய இயலும். இதற்காக தினம் தினம் திருக்குறளைப் பரப்பும் முயற்சியில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். சொற்பொழிவுகள், புத்தக வெளியீடுகள் என்ற பதிவுகளைக் கடந்து தற்போது திருக்குறள் டிஜிட்டல் […]


 • வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை

  வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை

  தமிழாய்வுத் துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி சிவகங்கை 94442913985 நகரத்தார் திருமண நடைமுறைகளில் மிக முக்கியமான திருமணச் சடங்கு வேவு எடுத்தல் என்பதாகும். நகரத்தார் திருமணங்களைக் கண்டு ரசிக்க வரும் வெளிய+ர்க்காரர்கள் நிச்சயமாக இந்த நிகழ்வு என்ன என்று வினவாமல் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகவும் இன்றியமையாத நிகழ்வு இதுவாகும். சிலேட்டு விளக்கு என்ற காற்றில் அணைந்து போகாத விளக்கினை வீட்டின் முன்புறத்தில் வைத்து இந்தச் சடங்கு முறை செய்யப்படும். இந்த […]


 • நம்பிக்கை என்னும் ஆணிவேர்

  நம்பிக்கை என்னும் ஆணிவேர்

  முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம்அரசு கலைக்கல்லூரி சிவகங்கை மனிதர்கள் மென்மையான உள்ளம் n;க்hண்டவர்கள். தற்கால மனிதர்களின்  மனம் மிகச் சிறிய தோல்வியைச் சந்தித்தால் கூட துவண்டு நம்பிக்கை அற்றுப் போகின்றது. துன்பங்களில் ஈடுபடுவதை மனித மனம் அடிப்படையில் விரும்புகின்றது. துன்பத்தின் துவளுதல் காரணமாக செயலற்றுப் போவதை மனித மனம் விரும்புகின்றது. இந்தத் துன்ப விருப்பத்தில் இருந்து மனித உள்ளத்தை மீட்டுக் கொண்டு வரவேண்டும். துன்பத்தால் செயலற்றுப் போகும் ;மனத்தை அதன் இயல்பிலிருந்து மாற்றி எப்போதும் […]


 • நாள்தோறும் நல்லன செய்வோம்.

  நாள்தோறும் நல்லன செய்வோம்.

  முனைவர் மு.பழனியப்பன், தமிழ்த்துறைத் தலைவர், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை உயிரினங்கள் நாள்தோறும் செய்ய வேண்டிய கடமைகள், செயல்கள் பற்பலவாகும். காலை எழுவது, பல் துலக்குவது, உடல் சுத்தம் செய்வது, உண்பது, அலுவலகப் பணிகள் ஆற்றுவது,  மின்சாரக் கட்டணம் கட்டுவது, தொலைபேசிக் கட்டணம் கட்டுவது, குழந்தைகளின் கல்வியில் நாட்டம் செலுத்துவது, உறங்குவது என்பது போன்ற பணிகள் நாள்தோறும் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கூட இதுபோன்றே பற்பல பணிகள் உண்டு.  இப்பணிகளைக் குறைவின்றிச் […]


 • வீட்டை விட்டுப் பிரியும் கோவலனும் கண்ணகியும்

  வீட்டை விட்டுப் பிரியும் கோவலனும் கண்ணகியும்

  முனைவர் மு. பழனியப்பன் தமிழாய்வுத்துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் நினைவு கல்லூரி சிவகங்கை மனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண்டும் என்று எண்ணுகிறார்கள் என்று ஒரு கேள்வியைக் கேட்டால் அதற்குப் பலப்பல பதில்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும். வீடு என்பது ஒரு தனிமனிதனின் விடுதலை மிக்க இடமாகும். ஒரு மனிதன் தனக்கான வசதிகளை தானெ தேடிச் சேர்த்து அவற்றை அனுபவிக்கும் […]


 • குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்

  குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவைக் கண்டேன்

  நான் என் வாழ்வில் முதன் முதலாகச் சந்தித்த எழுத்தாளர், கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களாகத்தான் இருக்கமுடியும்.  என் சிறுவயதில் என் தந்தையார் பழ. முத்தப்பன் அவர்கள் எங்களின் சொந்த ஊரான புதுவயலுக்கு ஒரு முறை நாங்கள் வந்திருந்தபொழுது ‘‘என்னையும் என் தங்கையையும் கவிஞர் அழ. வள்ளியப்பாவைப் பார்க்கப் போகிறோம். தயாராக இருங்கள்’’என்றார். அந்தச் சில நாள் இடைவெளியில் நானும் என் தங்கையும் எங்களுக்குத் தெரிந்த சில மழலைப்பாடல்களை அழ. வள்ளியப்பா அவர்களின் முன்னிலையில் பாடுவதற்குத் தயார்படுத்திக்கொண்டோம். குறிப்பாக […]