This entry is part 6 of 7 in the series 14 மார்ச் 2021
ஆயிரத்தொரு இரவுகள் என்ற புனைவைப் பற்றி நாம் கேட்டிருப்போம். ஃபிரேம் (Frame) வகையான கதை சொல்லல் முறையில், அதாவது திரைப்படத்திற்கான காட்சிகள் ஒன்று – இரண்டு என எழுதப்படுவதுபோல் கதைக்குள் கதை வைத்துக் (Genre )கதை சொல்லல். ஆயிரத்தொரு இரவுகள் அரபிக் கதையல்ல. இந்தியாவிலிருந்து மேற்காக நகர்ந்தது . பஞ்சதந்திரம் மற்றும் ஜாதகக்கதைகள் இப்படியான பிரேம் கதைகளாக உருவாகி பாரசீகத்துடாக அரேபிய வியாபாரிகளால் வியாபாரப் பொதிகளோடு எடுத்துச் செல்லப்பட்டது. இப்படியான கதை சொல்லல் ஐரோப்பாவுக்குச் சென்று அங்குள்ள […]
2020 கார்த்திகை மாதம்- மெல்பேன் – மல்கிறேவ் மிருக வைத்தியசாலை வசந்தகாலமாக இருக்கவேண்டும் ஆனால் இந்த வருடம் குளிர்காலமும் வசந்தமும் ஒன்றுடன் ஒன்று பிரியாது இருந்தது. அது பெரிதான பிரச்சனை இல்லை . கொரானால் மெல்பேன் நகரம் மூடப்பட்டு அல்பேட் காமுவின் பிளேக்கின் கற்பனைக்கு, 21ம் நூற்றாண்டில் நிஜமான வடிவம் கொடுக்கப்பட்ட காலம். ஆனால் மிருகவைத்தியர்கள் அவசரகால வேலையாளர்களின் பகுதியாக இருப்பதால் தொழில் செய்ய அனுமதியுள்ளது. மிருக வைத்திய நிலையத்தில் காலை பத்து மணிக்குப் பதியப்பட்டிருந்த முதலாவது […]
அமெரிக்காவில் 2020 இல் நடந்து முடிந்த தேர்தலை மதத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எப்படி எதிர் கொள்வார்கள்? அமெரிக்க மக்களில் அதிகமானவர்கள் இறை நம்பிக்கைகொண்டவர்கள். டொனால்ட் ட்ரம்ப்பும் சரி ஜோசப் பைடனும் சரி பைபிளில் தங்களது உறுதியை எடுத்துக் கொள்பவர்கள் . அதிலும் பைடன் ஒரு ஐரிஸ் கத்தோலிக்கர் . தலைவர்கள் அப்படிப்பட்டவர்கள் என்றால் மக்களும் அவ்வழியே . இல்லையா ? ஆபிரகாமிய மதங்களது தொடக்கப்புள்ளியான ஆபிரகாம், கடவுள் சொன்னதற்காகத் தனது மகனைப் பலியிடத் துணிந்தவர். யூதர்கள் கடவுளின் […]
ஜோசஃப் ஜேம்ஸ் என்பவரைப் பற்றி சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே குறிப்புகள் என்ற நாவலை வாசித்தபோது பேனாவாலும் ஹைலைட்டராலும் எனக்குப் பிடித்த பகுதிகளைக் கோடிட்டேன். புத்தகத்தின் பெரும்பாலான பக்கங்களில் கோடாகி, புத்தகத்தின் பக்கங்கள் வரிக்குதிரையின் தோலாக மாறிவிட்டது. மீண்டும் வாசித்தேன். அப்பொழுது மேலும் கோடுகளிட்டேன் . இதுவரை நான் எனது பாடப்புத்தகங்களைக் கூட இப்படிக் கோடிடவில்லை. பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை வாசிக்கக் கையில் எடுத்துவிட்டு, வார்த்தைகள் புரியவில்லை என வைத்துவிட்டேன் . இம்முறை கூர்ந்து […]
இந்தியாவில் வாழ்ந்த (84-87) காலத்தில், காசி எனப்படும் வாரணாசிக்கு செல்வதற்கு எத்தனித்தேன். முடியவில்லை. பல வருடங்களுக்குப் பின்னர் அந்த சந்தர்ப்பம் கிடைத்தது அதுவும் ஒரு பகல், இரண்டு இரவுகள் மட்டுமே. காசி பற்றிய முதல் தெரிந்துகொண்டது, எழுவைதீவில் 5 -6 வயதான எனது இளம் பருவத்தில். எனது தந்தை , கங்கை நீர் என இந்தியாவில் இருந்து போத்தலில் கொண்டுவந்தபோது, அம்மாவால் அதில் சில துளிகளை எனது தலையில் வைக்கப்பட்டது. ஊரில் பலர் அந்த நீரை கையால் […]
நடேசன் காந்தியின் நிலத்தில் எங்கள் பயணத்தின் அடுத்த இடம் ராஜ்கோட் நகராக இருந்தது. பிரித்தானியர் காலத்தில் சமஸ்தானத்தின் தலைநகர். அங்கு காந்தியின் தந்தையார் திவானாக இருந்தார். அதுவே காந்தி சிறு வயதில் வாழ்ந்து, இங்கிலாந்து போகும் வரையும் கல்வி கற்ற இடம். அவர் கல்வி கற்ற மேல் நிலைப் பாடசாலையை தற்பொழுது அவரது நினைவிடமாக்கி, அதைக் காந்தியின் வரலாற்று அருங்காட்சியமாக அமைத்திருக்கிறார்கள். இரண்டு மாடி கட்டிடம். அங்கு போனால் அங்குள்ள வரலாற்றின் பகுதிகளை வாசித்தபடியே பல மணி […]
இந்தியாவில் அதிகமாக உல்லாசப்பிரயாணிகள் செல்லும் மாநிலங்கள் ராஜஸ்தான், கோவா, மற்றும் கேரளம் என்பன. இதைவிடப் மற்றய மாநிலங்ளுக்கு செல்வதற்கான வசதிகள் செய்வதற்கு வழிவகைகள் வெளிநாட்டில் உள்ள பிரயாண முகவர்களிடம் இருப்பதில்லை. பெரும்பாலும் நியூ டெல்கி – தாஜ்மகால்- ஜெய்ப்பூர் படங்கள் பதிவான முக்கோணத்தை இந்திய பயணத்திற்கான முக்கிய இடங்கள் என விளம்பரப்படுத்துவார்கள். இதற்கு யார் காரணம்? பெரிய வசதிகள் உள்ள தமிழ்நாடு மாநிலத்திற்கான பயணத்தைப்பற்றிய தகவல்களை வெளிநாடுகளிலிருக்கும் முகவர்களிடம் தேடினால் கிடைக்காது. மற்ற மாநிலங்களுக்குப் பயணிப்பவர்கள் பெரும்பாலும் […]
நடேசன் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றருகில் மகாத்மா காந்தியின் ஆசிரமத்தில் உள்ள அவர் வழக்கமாக அமரும் அந்த வீட்டின் திண்ணையில் பல ஐரோப்பியர்கள் இருந்தார்கள். அவர்களின் குழந்தைகள் அங்குள்ள கைராட்டையில் நூல் சுற்றிப்பார்த்தார்கள். அவர்கள் எல்லோரும் விலகியபின்னர், அந்த இடத்தில் நானும் மனைவியுடன் இருக்க விரும்பி காத்திருந்தேன். தொடர்ந்தும் ஆட்கள் வந்துகொண்டிருந்தார்கள் . சிறிது இடைவெளி வந்ததும் நானும் எனது மனைவியும் சில நிமிடங்கள் அங்கிருந்து ஏற்கனவே பார்த்த ஆசிரமத்திலுள்ள கடிதங்கள், படங்கள் ,மற்றும் பத்திரிகை செய்திகளை அசை போட்டேன் […]