“அரசகுற்றத்திற்கு மரணதண்டனைபெற்ற அநேகருக்கு இங்கே தான் சமாதி. நேற்று அரசர் பரிவுடன் நடந்துகொண்டார்.இல்லையெனில் கணிகைப்பெண் சித்ராங்கியும் இந்தக்கிணற்றில்தான் பட்டினி கிடந்து செத்திருப்பாள். கொஞ்சம் இப்படி வாருங்கள். இந்த இடத்தில் காதை வைத்து கேளுங்கள். ” 22. சாம்பல் நிற கீரி ஒன்று முட்செடிபுதரிலிருந்து மெல்ல ஓடி வருகிறது. இவர்களைப்பார்த்ததும் அசையாமல் ஓரிரு கனங்கள் நிற்கிறது. தனது கூர்மையான கருத்த மூக்கை அரசமர சருகுகளைச் சீய்த்து எதையோ தேடுவதுபோல பாவனை செய்தது. நிமிர்ந்தபோது அதன்கண்களிரண்டும் இளம்வெயிலில் ஈரத்தன்மையுடன் ஒளிர்ந்தன. […]
“தெற்கே அருங்கூர் அருகே கிருஷ்ணபட்டணம் என்ற புதிய நகரமொன்றை ஏற்படுத்தியிருக்கிறோம். அங்கு குடிவரும் மக்களுக்கு விவசாயத்திற்கான நிலமும், குடியிருப்புக்கான மனையும் வழங்கிவருகிறோம். நீங்கள் விரும்பினால் உங்கள் தேவாலயத்தையும், பங்குச் சாமியார்இல்லதையும் அங்கே கூடக் கட்டிக்கொள்ளலாம்.” 21. பிரதானி நந்தகோபால்பிள்ளை உரையாடலை திசை திருப்பும் காரணம் அறியாது பிமெண்ட்டா யோசனையில் மூழ்கினார். இந்துஸ்தானத்திற்கு வந்திருந்த நான்கைந்து மாதங்களிலேயேப அவர் உள்ளூர் மொழிகளைக் கற்றிருந்தார். குறிப்பாக தமிழர்களின் பேச்சுதமிழுக்கும், எழுதும் தமிழுக்குமுள்ள வேறுபாடுகள் இருப்பதை புரிந்துகொண்டார். திருச்சபை ஊழியர்கள், உள்ளூர் […]
20. சாளரத்தின் வழியே பகற்பொழுதின் ஒரு துண்டு பிமெண்ட்டா அறையிலும் கிடந்தது. குளிர்ந்த காற்று சலசலவென்று காதருகே சலங்கைபோல ஒலித்துக் கடந்தது. அக்காற்றுடன் மைனாக்களின் கீச்சு கீச்சும், ஒன்றிரண்டு காகங்களின் கரைதலும், இரட்டை வால் குருவியின் கிக் -கிக்கும், குயிலொன்றின் குக்கூ அக்கோவும் கலந்திருந்தன. மீட்பரின் குரல்போல அவை பேசின. அறையில் தளும்பிக்கொண்டிருந்த குளிர்காற்றில் சிறிது நேரம் அசையாமற் கிடந்தார். எத்தனை சுகமான அனுபவம். எட்டுமணி நேரத்திற்கு முன்பு எரிமலைக்கருகில் கிடத்தியதுப்போலவிருந்தது. இப்போதோ நேற்றைய மனநிலை இல்லை. […]
அன்புடையீர் இந்திய மொழி இலக்கியங்களை பிரெஞ்சு நண்பர்களுக்கு அறிமுகப் படுத்தும் வகையில் ஒர் வலைப்பூவை கூடிய விரைவில் எளிய வகையில் அறிமுகப்படுத்த உள்ளோம். உங்களுக்கு எங்கள் முயற்சியில் ஆர்வமும், பிரெஞ்சிந்திய மொழிகளில் ஞானமும், பிரதிபலன்களை எதிர்பார்க்காது உதவ முடியுமென்ற நம்பிக்கையுமிருப்பின் தங்கள் ஆதரவும் பங்களிப்பும் அவசியமாகின்றன ஏப்ரலில் தொடங்கவிருக்கும் இவ்வலைத்தளம் குறித்து நண்பர்களுக்கு உரியகாலத்தில் தெரிவிப்பேன். நா.கிருஷ்ணா nakrish2003@yahoo.fr ———————————————————– Chers amis, Afin de faire connaître la littérature Indienne auprès des Français, […]
போர்ச்சுகல்லில்கூட இதுபோன்றதொரு நகரை பார்த்ததில்லைதான். ஒருவேளை லிஸ்பன் நகரை வேண்டுமானால் கிருஷ்ணபுரத்துடன் ஒப்பிட்டுபேசலாம். கீழை நாடுகளின் ‘ட்ராய்’ என்று வர்ணிக்கவும் எனக்குத் தயக்கமில்லை. 19. இதே நாட்களில் மக்களை வாட்டிவதைத்த வெயிற் காலங்களுமுண்டு. அப்போதெல்லாம் சிங்கவரம் ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்துவிட்டு, கிருஷ்னபுரத்தையும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறை மிதித்திடவேண்டுமென்று நான்கு திசைகளிலிருந்து கால் நடையாகவும், வண்டிகட்டிக்கொண்டும் வந்துபோகும் ஆயிரக்கணக்கான மக்கட் கூட்டத்தினராலும், மன்னரின் ஆயிரத்துக்கு மேற்பட்ட படைவீரர்ககளின் குதிரைகளின் குளம்படிபட்டும், முன்னூறுக்கு மேற்பட்ட யானைகள் அவ்வபோது வீதிகளில் […]
மனிதர்கள் இயல்பிலேயே சண்டைப்பிரியர்கள், அவர்களுக்குச் பிறருடன் கட்டிபுரள ஏதேனும் ஒரு காரணம் வேண்டும். இங்கே அவர்களுக்கு மதம் ஒரு காரணம். 18. பல்வேறு அளவினதாய்க் கதம்பக் குரல்கள். அக்குரல்களில் மனிதர்கூட்டத்தின் எல்லாவயதும் இருப்பதாகப்பட்டது. ஆண்கள், பெண்களென்று குரல்களைப் பிரிந்துணர முடிந்தது. நீர்ப்பாசிப்போல அத்தனை சுலபமாக பிரிக்கவியலாத நிராசையும், தவிப்பும், விரக்தியும் ஏமாற்றமும், அவமானமும் அவற்றில் படிந்திருப்பதை பாதரே பிமெண்ட்டா சிறிது நேரம் படுத்தபடி கேட்டார். அவை எங்கிருந்து வந்ததென்பதை யூகிக்க ஒரு சில நொடிகள் பிடித்தன. அநேகமாக […]
– டெனிஸ்கொலன் நாகரத்தினம் கிருஷ்ணா மார்க்ஸை மறுவாசிப்பு செய்ய இதைக்காட்டிலும் உகந்த தருணம் இருக்க முடியாது. 1989 ம் ஆண்டு பெர்லின் சுவர் இடிந்ததும், கிழக்கு ஐரோப்பாவை பொறுத்தவரை பொதுவுடமையும் உடன் இடிந்ததென சொல்லவேண்டும். குடியில்லாத வீட்டில் குண்டுபெருச்சாளி உலாவும் என்பதுபோல பாசாங்குகாட்டி பொதுவுடமையை சுற்றிவருகிற நாடுகளும் ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்கின்றன. இவற்றுக்கெல்லாம் மார்க்ஸை குறை சொல்ல முடியுமா? சோவியத் நாட்டில் காம்ரேட்டுகள் தோற்றதற்கு சோவியத் மார்க்ஸிஸம் (லெனினிஸமும், ஸ்டாலினிஸமும்) காரணமேயன்றி கார்ல்மார்க்ஸின் மார்க்ஸிஸம் காரணமல்ல என்பதை […]
போங்கடா பன்னாடை பசங்களா! ராட்சசனுமில்ல பூதமுமில்லை. அநேகமாக எந்த ராசாவாவது படையெடுத்துவரலாம். கேட்டால் கோவணத்தை அவிழ்த்துகொடுங்க அதைத் தவிர கொடுக்கறதுக்கு என்ன வைத்திருக்கிறோம். நமக்கு கோழி, பன்றி உயிரு மயிரு எல்லாமொன்றுதான் 17 சின்னான்தான் முதன்முதலாகப் பார்த்தான். காலை தகப்பன் தொப்புளான் ஆண்டைவீட்டுக்குப் புறப்பட்டு போனதும் மண்னாங்கட்டி செய்த முதல் வேலை கவிழ்த்துவைத்திருந்த கூடையைத் திறந்துவிட்டது. கோழிகள் குப்பைமேட்டை நோக்கி ஓடின. குடிசையின் பின்புறம் பூசனிக்கொடிகளைத் தாண்டிச் சென்று பன்றிகள் அடைத்துவைத்திருந்த பட்டியைத் திறந்துவிட்டுத் துரத்தினாள். இனி […]
கறுப்பு நிறத்தில் நீண்ட கழுத்தை மூடிய அங்கியும், இடுப்பில் இறுகச் சுற்றி பக்கவாட்டில் தொங்கிக்கொண்டிருந்த கயிறும் தலையில் கிரீடம்போல ஒரு தலைப்பாகையும் அணிந்து நன்கு சிவந்த தோலுடன் எதிர்பட்ட ஆசாமியைப் பார்க்க வியப்பாக இருந்தது. தோல்வியாதி பிடித்த மனிதன்போலிருந்தான். கையை உயர்த்தி ஆசீர்வதித்தான், அதை ஏதோ கெட்ட சகுனம்போல உணர்ந்தார். 16. நேற்று அணில் கடித்த மாம்பழத்தை எவருடன் பங்கிட்டுக்கொண்டாயென்று கேளுங்கள், மூன்று நாட்களுக்கு முன்பு பல்லாங்குழி ஆட்டத்தின் முடிவில் வீட்டிற்குக்கொண்டுவந்த சோழிகள் எத்தனையென்று கேளுங்கள் அல்லது […]
15. தாசி மீனாம்பாள் வீடு அமைதியாககிடந்தது. வழக்கம்போல தீட்சதர் அதிகாலையில் புறப்பட்டுபோனபோது திறந்து மூடிய கதவு. பொழுது துலக்கமாக விடிந்து, வீடு பகற்பொழுதுக்கு இணங்கிக்கொண்டிருந்தது, கூரையில் இன்னமும் அதிகாலைப் பனியின்வாசம் நீரில் நனைத்த துணிபோல வீடு முழுக்க நிறைந்திருந்தது. வீடு கூட்டவில்லை என்பதன் அடையாளமாக ஆங்காங்கே அதது வைத்த இடத்திற்கிடந்தது. குளத்து நீர் தவலை இருந்த இடத்தில் அசையாமலிருக்க, அதன் மஞ்சள் நிறத்தில் சோகை வழிந்துகொண்டிருந்தது. மனிதர் நடமாட்டமின்மை, அது ஏற்படுத்தியிருந்த அமைதி. அந்திநேர வயற்காடுபோல மீனாம்பாள் […]