சித்ராங்கிக்கு தீட்சதர்மேல் மரியாதை இருக்கின்றது. அவர் வரும்போதெல்லாம பள்ளியறை கதவைத் திறக்கக் கடமைப்பட்டவள். மற்றவர்களுக்கு வேண்டுமானால் தில்லைநாதர் படியளக்கலாம். மீனாம்பாளுக்கும் சித்ராங்கிக்கும் அவர்தான் பரமன் 14. மனதில் கவலை இரையை அண்மித்த சிலந்திபோல உட்கார்ந்திருந்தது. கைக்கெட்டிய தூரத்தில் எண்ணையின்றி பொசுங்கும் திரியின் வாசம் கவனத்தை அதிகம் ஈர்க்கவில்லை. மதியம் கோவிலுக்கும் போகும் முன் உடுத்திய பட்டுபுடவையை பாரமாக உணர்ந்தபோதும் அவிழ்த்துபோட ஆர்வமின்றி சோர்ந்திருந்தாள். கடந்த சில நொடிகளாக நகங்களைக் கடித்து துப்ப ஆரம்பித்து, இப்போது நக இடுக்கு […]
அன்புடையீர், எதிர்வரும் பிப்ரவரி மாதம் 5ந்தேதி மாலை ஆறுமணி அளவில் இந்திய பிரெஞ்சு பண்பாட்டு உறவுளை மேம்படுத்தும் வகையில் சந்திப்பு ஒன்றினை புதுச்சேரியில் ஏற்பாடு செய்துள்ளோம். இத்துடன் அழைப்பிதழை இணைத்திருக்கிறோம். நவீன தமிழிலக்கியத்தைச் சார்ந்த மூத்த பெருமக்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளனர். தாங்களும் விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம் நா.கிருஷ்ணா பிரான்சு.
சித்ராங்கிக்கு தீட்சதர்மேல் மரியாதை இருக்கின்றது. அவர் வரும்போதெல்லாம பள்ளியறை கதவைத் திறக்கக் கடமைப்பட்டவள். மற்றவர்களுக்கு வேண்டுமானால் தில்லைநாதர் படியளக்கலாம். மீனாம்பாளுக்கும் சித்ராங்கிக்கும் அவர்தான் பரமன் 14. மனதில் கவலை இரையை அண்மித்த சிலந்திபோல உட்கார்ந்திருந்தது. கைக்கெட்டிய தூரத்தில் எண்ணையின்றி பொசுங்கும் திரியின் வாசம் கவனத்தை அதிகம் ஈர்க்கவில்லை. மதியம் கோவிலுக்கும் போகும் முன் உடுத்திய பட்டுபுடவையை பாரமாக உணர்ந்தபோதும் அவிழ்த்துபோட ஆர்வமின்றி சோர்ந்திருந்தாள். கடந்த சில நொடிகளாக நகங்களைக் கடித்து துப்ப ஆரம்பித்து, இப்போது நக இடுக்கு […]
நடராஜருக்குச்சேரவேண்டிய நிலமான்யங்களில் பெரும்பகுதியை இவர்களுக்குக் கப்பம் கட்டிக்கொண்டிருக்கிறோம். இனி நம்முடைய குடும்பங்களில் நடக்கும் பால்ய விவாகத்திற்கும் வரி செலுத்தவேண்டுமாம் 13 தீட்சதர் வீடெங்கும் இருட்டுடன், தீயில் உருகிய வெண்ணெயின் வாடை. காற்று வீசுகிறபோதெல்லாம் வாசல் மரங்கள் சோர்ந்து அசைந்தன. தெருத் திண்ணைகளிரண்டிலும் பொது தீட்சதர்கள் உத்தரீயத்தை உடலில் போர்த்திக்கொண்டு அமர்ந்திருந்தனர். சிலர் சுவரிலும், சிலர் தூண்களிலுமாக சாய்ந்திருந்தனர். சிலர் சம்மணம் போட்டும், வேறு சிலர் முழங்கால்களை தரையிற் பக்கவாட்டில் மடித்துமிருந்தனர். அர்த்தஜாம பூஜையிலிருக்கும் தீட்சதர்களைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களும் […]
கூரை எரவானத்தில் ஒரு கையும் இடுப்பிலொரு கையுமாக கமறி கமறி இருமியபடி நின்றுகொண்டிருந்த மருமகன் வேண்டா வெறுப்பாக பதிலிறுத்தார் 12. நள்ளிரவு பூசை முடிந்ததன் அடையாளமாக கோவில் பிரகாரத்திலிருந்து வெளியேறிய இரண்டொருவர்களைதவிர்த்து வீதியில் மனிதர் நடமாட்டமில்லை. தில்லை நகரம் உறங்கத் தம்மை தயார் படுத்திக்கொண்டிருந்தது. ஜாதிமல்லி பூக்கள் இருளை அள்ளி முகத்தை துடைத்துக்கொண்டிருந்தன. தெற்கு திக்கிலிருந்து வீசிய காற்றினால் அதன் மணம் தெருக்கோடிவரை வீசியது. நகரின் உப்பரிகைகளும், கோபுரங்களும், வீட்டுக் கூரைகளும், மரங்களின் மேற்பகுதிகளும் பனியுடன் கலந்த […]
நண்பர் இந்திரனும் நானும் வழக்கம்போல தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தபொழுது, “நான் சந்தித்த ஐரோப்பிய எழுத்தாளர்கள் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகளை நூல் வடிவத்தில் கொண்டுவரும் எண்ணம் இருக்கிறது நாகி உங்களால் ஒரு முன்னுரையைத் எழுதித் தர முடியுமா? எனக் கேட்டிருந்தார். மூத்த படைப்பாளிகளில் ஒருவர் முன்னுரை கேட்பது அசாதரண நிகழ்வே. ஆனால் எழுத்தாள நண்பரின் பண்பை அறிந்தவர்களுக்கு அதில் வியக்க ஒன்றுமில்லை. எனது சொந்த அனுபவங்கள் அவரை படைப்பாளியாக மட்டுமல்ல பழகுவதற்கு இனியவர், பண்பாளர் என்றே உணர்த்தியிருக்கின்றன. இக்கட்டுரைகள் […]
தீட்சதிரின் மகனை மனதில்வரித்துக்கொண்டு அவன் தந்தையுடன் சம்போகம் செய்வதுகூட ஒரு தாசியின் தர்மத்திற்கு உகந்ததுதானென்ற மனப்பக்குவத்தை பெண்ணிடம் மீனாம்பாள் ஏற்படுத்தியிருந்தாள். 11 இளவேனிற் காலமென்பதால் வெப்பம் முன்னிரவு நேரத்திலும் மூட்டம்போல கவிந்திருந்தது. நீர்ப் பாசி போல கரிய இருள் இரவு நீரில் கலந்தும் கலவாமலும் மிதந்துகொண்டிருந்தது. மரங்கள் காற்றை எதிர்பார்த்து அசைவின்றி இருந்தன. தொழுவத்தில் கட்டத் தவறிய பசுவொன்று வெகுநேரமாக இருட்டில் நிற்கின்றது. மரகதப்பச்சையில் ஒளிறும் அதன் விழிகளின் காட்சியில் பள்ளி அறையின் சன்னல் கம்பிகளைப் பிடித்தபடி […]
தாங்கள் அறுவடை செய்த செல்வத்தை தான தருமம் செய்வதைக் காட்டிலும் தாசிக்கு தருவதனூடாக தங்கள் ஆண்மையை வெளியுலகிற்கு உறுதிபடுத்து நினைக்கிறார்கள், அவ்வளவுதான். 10. சீர்காழியிலிருந்து திரும்பிய முதல் நாள் இரவு தூக்கமின்றி கழிந்தது. உப்பரிகையின் கைப்பிடி சுவரிலமர்ந்து வானத்தை வெகு நேரம்பார்த்தாள். நட்சத்திரங்களில் இளைஞனைத் தேடினாள். விரல்கொண்டு அவளது முழங்கையையை தடவிப்பார்த்துக்கொண்டாள் இளைஞைனின் விரல் தீண்டிய இடங்களில் வெது வெதுப்பினை உணர்ந்தாள். மயிற்கால்கள் சிலிர்த்தன. ஓர் ஆணின் ஸ்பரிஸம் இதற்கும் முன்பும் சித்ராங்கிக்கு நேர்ந்துள்ளது. இவள் வயது […]
செண்பகத்தின் கைக்குப்பதிலாக வேறொரு கையை பிடித்திருந்தாள். அந்த வேறொரு கை பெண்ணுக்குரியதுக்கூட அல்ல ஆணுக்குரியது வெட்கமாகப் போய்விட்டது. அவனும் அப்போதுதான் உணர்ந்திருக்க வேண்டும். கையை உதறினான். 9. ஜெகதீசனை முதன் முதலாக பார்க்க நேர்ந்தது திருவிழாக் கும்பலொன்றில். உள்ளூரிலல்ல இருபது கல் தொலைவிலிருந்த சீர்காழியில். சித்ராங்கி பாவாடை சட்டையில் அந்திச்சூரியன்போல ஜொலித்த காலம். அப்போதும் செண்பகம்தான் அவளுக்குத் துணை. மீனாம்பாள், சத்த வண்டி அமர்த்த முலைப்பால் உற்சவத்திற்கு வந்திருந்தார்கள். சித்திரை திருவாதிரையில் பிரம்மோற்ஸவம் தொடங்கும். இதில் 2ம் […]
சித்ராங்கி க்குத் தனது அழகைபற்றிய கர்வமிருந்து. அழகாய் இருப்பவள் கர்வப்படுவதில் என்ன தப்பு? சிதம்பரத்தில் மட்டுமில்லை விஜய நகர சாமாராச்சியத்திலேயே அப்படியொரு பெண் சொரூபத்தை கண்டதில்லையென இதே கட்டிலில் வைத்து கிருஷ்ணப்ப நாயக்கர் கூறவில்லையா? 8. கையெழுத்து மறையும் நேரம். மெல்ல மெல்ல பகல் விலகிக்கொண்டிருந்தது. இரவு தன்னைக்காட்டிக்கொள்ளாமல் பாய்வதற்குத் தயாராய் பதுங்கியிருந்தது. ஒன்றிரண்டு நாழிகையில் தெருவாசல், முற்றம் வழியாக பாய்ந்து வீட்டை நிறைத்துவிடும். மேல வீதியிலிருந்த எல்லா வீடுகளும் ஒன்றுபோலவே சிற்றோடு வேய்ந்து தெருவாசலில் […]