Articles Posted by the Author:

 • பாகிஸ்தானின் க்வாதர் துறைமுகமும் ஈரானின் ச்சாபஹார் (Chabahar) துறைமுகமும்

  இந்தியாவினால் கட்டி முடிக்கப்பட்டிருக்கும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இரானின் ச்சாபஹார் (Chabahar) துறைமுகத்தின் முதலாவது பகுதி இன்றைக்கு பயன்பாட்டிற்கு வருகிறது. முன்னாள் பாரதப் பிரதமர் அவர்களால் வழிமொழியப்பட்டு, பின்னால் வந்த காங்கிகிரஸ் அரசினால் மூலையில் தூக்கியடிக்கப்பட்டுக் கிடந்த ச்சாபஹார் துறைமுக புராஜெக்ட் இந்தியாவைப் பொறுத்தவரையில் மிக, மிக முக்கியமான ஒன்று. இதன்மூலம் ஆப்கானிஸ்தானும் பிற முன்னாள் சோவியத் பகுதிகளான உஸ்பெக்கிஸ்தான், தஜாகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் போன்ற மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியர்கள் வியாபாரத் தொடர்பு கொள்வது எளிதாக்கப்பட்டிருக்கிறது. மத்திய […]


 • வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 2

  1820-களில் ஸ்லீமன் தனியராக கொலைகாரத் தக்கர்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார். ஆனால் 1828-ஆம் வருடம் அவரது தனி வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நிகழ்ந்த இரு நிகழ்வுகள் அதனை மாற்றியமைத்தது. முதலாவதாக, 1828-ஆம் வருடம் வில்லியம கவண்டிஸ் பென்டிக் (William Cavendish Bentihck) பிரிட்டிஷ்-இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். (இந்த பென்டிக் பிரபுவின் கீழ் முதன் முதலாக கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தியாவில் பணிபுரிவது சட்டபூர்வமாக்கப்பட்டது. அதுவரையில் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த மற்ற பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் இந்தியாவின் கலாச்சார […]


 • வில்லியம் ஸ்லீமனும் இந்திய வழிப்பறிக் கொள்ளையரும் – 1

  – நரேந்திரன்   பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியா சாலைப் பயணிகளுக்கு ஒரு ஆபத்தான இடமாக இருந்தது. பயணம் செய்யும் பல நூற்றுக் கணக்கான, ஏன், ஆயிரக்கணக்கானவர்கள் எந்தத் தடையமும் இன்றி மறைந்து போனார்கள். அவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து யாரும் அக்கறையெடுத்து விசாரிக்கவில்லை. அந்த நேரத்தில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய உள் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்த்தார்கள். காளியை வழிபடும் ஒரு பெரும் ரகசியக் கூட்டமொன்று இப்பயணிகளைக் கொல்வதாக வந்த வதந்திகளையும் பிரிட்டிஷ் […]


 • மங்கோலியன் – II

  நரேந்திரன் உலக வரலாறு பெரும்பாலான நாடு பிடிக்கும் பேராசையுள்ள சர்வாதிகாரிகளை மிக மோசமான மற்றும் துயரமான முறையில் மரணத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. உலகைப் பிடிக்கப் புறப்பட்ட அலெக்ஸாண்டர் பாபிலோனில் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது விசுவான படைவீரர்களே அலெக்ஸாண்டரின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிட்டு, அவர் கைப்பற்றிய நாடுகளை பங்கு போட்டுக் கொண்டனர். ஜூலியஸ் சீசரின் நண்பர்களான அவரது செனட்டைச் சேர்ந்த பிரமுகர்கள் அவரை ரோமானிய செனட்டில் வைத்தே குத்திக் கொலை செய்தார்கள். தனது போரின் மோசமான தோல்விகள் […]


 • மங்கோலியன் – I

    குறிப்பு :   மிகக் கொடுங்கோலர்களாக அறியப்படுகிற செங்கிஸ்கானும், மங்கோலியப்படைகளும் உலகில் மாபெரும் மாற்றங்கள் வரக் காரண கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். மங்கோலியர்கள் உண்டாக்கிக் கொடுத்த சூழ் நிலைகளே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு பெரும் உந்துதலாக இருந்தது என்பதை பெரும்பாலோர் அறிந்திருப்பதில்லை. இது மங்கோலியர்களின் பல்வேறு ஆளுமைகளைக் குறித்து ஒரு சிறிய அறிமுகம் செய்யும் எண்ணத்துடன் எழுதப்பட்டது. கூடவே சில பல மங்கோலியர்கள் குறித்தான தகவல்களும்.   *   1930-ஆம் வருடம் ஸ்டாலினின் ரஷ்யப்படைகள் மங்கோலியாவைக் கைப்பற்றின.  […]


 • சின்னாண்டியின் மரணம்

  சின்னாண்டியின் மரணம்

  (இது வெறும் கற்பனை மட்டுமே. இருந்தோர், இறந்தோர் அல்லது இறக்கவிருப்போர் எவரையும் குறிப்பிடுவது அல்ல) எல்லோரையும் போலவே ஒருநாள் சின்னாண்டியும் செத்துப் போனார்.   அல்லோகலப்பட்டது புழுதிக்காடு.   செத்த சின்னாண்டி, சிலபேருக்குத் தலைவர் பலபேருக்குப் பகைவர். பெயருக்கு நேரெதிராக பெரும் பணக்காரர்.   புழுதிக்காட்டின் பாதி அவருடையது. மீதியும் அவருடையதே என்பது பொதுஜன அறிவு.   புண்ணாக்கு விற்றே புழுதிக்காட்டை வளைத்ததாக அன்னார் சின்னாண்டி அடிக்கடி சிலாகிப்பார்.   இதில், எள்ளுப் புண்ணாக்கு விற்றவரெல்லாம் ஏழைகளாய் […]