பி எஸ் நரேந்திரன் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி அடைந்த பின்னடைவு பெரியதொன்றுமில்லை என நிரூபிக்கும் புள்ளிவிவரங்களைப் பார்க்கிறேன். புள்ளி விவரங்கள் பொய் சொல்வதில்லை என்கிற வகையில் அது நல்லதுவே. ஆனால் என்னுடைய எண்ணம் அதற்கு நேர்மாறானது. பா.ஜ. கட்சியின் இந்தத் தோல்வி சாதாரணமான ஒன்றல்ல என்பதே என்னுடைய கருத்து. எனவே அதனைக் குறித்து உள்ளது உள்ளபடி கொஞ்சம் ஆராயலாம். Shall we? First of all, it is a morale booster […]
பொழுதுபோகாத சமயங்களில் பாண்டிச்சேரியில் கவர்னர் கிரண்பேடி செய்து கொண்டிருக்கும் அல்லது செய்ய முயன்று கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்திருத்த வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருப்பது வழக்கம். கவர்னர் பேடி நிர்வாகம் தெரிந்தவர். அதேசமயம் அரசாங்க அலுவலங்கள் பொதுமக்களின் நன்மைக்காக மட்டுமே இயங்கவேண்டும் என்கிற நல்லெண்ணமுடைய அப்பாவிப் பெண்மணி. தான் சொல்வதை எவனும் கேட்கமாட்டான் என்று அவர் மனதுக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும் விடாமுயற்சியை அவர் கைவிடுவதில்லை என்பதால் கிரண்பேடி மீது எனக்கு மரியாதை உண்டு. அரசு அலுவலகங்களுக்கு விசிட் செய்து அத்தைப்பாட்டி […]
பி எஸ் நரேந்திரன் “முகலாயர்கள் இந்தியர்களே” என்கிற பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். முகலாயர்களே தங்களை இந்தியர்கள் என்று ஒருபோதும் சொல்லிக் கொண்டதில்லை. முகலாயர்கள் உஸ்பெஸ்க்கிஸ்தானிலிருந்து வந்த சப்பை மூக்குடைய, மஞ்சள் நிற மங்கோலியர்கள். பாபரிலிருந்து பகதூர்ஷா வரைக்கும் தாங்கள் சக்டாய் பரம்பரையினர் (Chagtai family) எனச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டவர்கள். ‘முகலாயர்’ என்கிற பெயரே ‘மங்கோலியர்’ என்கிற பெயரின் திரிபு. பாபர், தாய் வழியில் செங்கிஸ்கானின் பரம்பரையிலும், தந்தை வழியில் தைமூரின் பரம்பரையிலும் […]
பி எஸ் நரேந்திரன் இந்தியப் பள்ளி, கல்லூரி பாட நூல்களை எவ்வாறு இந்திராகாந்தியும், கம்யூனிஸ்டுகளும் கெடுத்துச் சிதைத்தார்கள் என்பதனை மிக அருமையாக விளக்கியிருக்கியிருக்கிறார் எஸ் எல் பைரப்பா. எமர்ஜென்ஸிக்குப் பிறகு தேர்தலில் தோற்கிறார் இந்திரா. அதனைத் தொடர்ந்து ஆட்சியமைக்கும் ஜனதாக் கட்சியின் ஆட்சி அல்பாயுசில் முடிகிறது. அதற்குப் பின்னர் நடந்த தேர்தலில் இந்திராகாந்தி கம்யூனிஸ்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து பொதுத்தேர்தலைச் சந்தித்து அதில் வெற்றியும் பெறுகிறார். அதற்குப் பிரதியுபகாரமாக இந்தியக் கல்வித் திட்டங்களை அமைக்கும் உரிமையைக் கோருகிறார்கள் கம்யூனிஸ்டுகள். […]
ராஜாஜியின் திருமாலிருஞ்சோலை சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாயிருந்த சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் “திருமாலிருஞ்சோலை” என்கிற பெயரில் ஒரு தலையணை சைஸ் புத்தகம் எழுதியிருக்கிறார். பலரும் அறியாத அற்புதமான வரலாற்றுத் தகவல்களுடன் தலபுராணத்தையும் கூறுகிற புத்தகம். அதிலிருந்து எடுக்கப்பட்டது இந்தப் படம். எகிப்தின் பேரரசர் ஒருத்தர் நாமம் தரித்துக் கையில் சடாரி வைத்திருந்த வைஷ்ணவர் என்கிறார் ராஜாஜி. அதற்கான ஆதாரமாக பைபிளையும் ஆதாரமாகக் கொடுக்கிறார். இன்னொரு படத்திலிருக்கிற வைஷ்ணவர் எகிப்தின் பிரமிடுகளைக் கட்டியவர் எனக்கூறி அதற்கும் புத்தக ஆதாரம் […]
சத்குரு ஜக்கி வாசுதேவ் சத்குரு ஜக்கி வாசுதேவ் இந்தியப் பல்கலக்கழகங்களில் நடத்திக் கொண்டிருக்கும் Youth and Truth நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பாலான இந்தியப் பல்கலைக்கழகங்கள் இன்னும் அரதப் பழசான மார்க்ஸீயர்களின் கைகளில்தான் இருக்கின்றன என்று தெரியவருகையில் அதிர்ச்சியும், ஆச்சரியமும் வருவதனைத் தவிர்க்க இயலவில்லை. இன்னமும் கல்லூரியில் படிக்கும் இந்திய இளையதலைமுறை மார்க்ஸிய மூளைச் சலவையிலிருந்து விடுபட இயலவில்லை என்பது பரிதாபம்தான். சத்குருவிடம் விவாதிக்கும் ஒவ்வொருத்தனிடமும் தெறிக்கும் வெறுப்பு மிகவும் கவலைக்குரியது. ஜக்கியின் ஆணித்தரமான பதில்களால் அவர்களின் […]
ஒன்று — இந்தியா சுதந்திரமடைந்த நாளிலிருந்து இந்திய ஹிந்துக்கள் மூன்றாம்தர குடிமக்களாகவே நடத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். பெரும்பான்மை மதத்தவர்களாக இருந்தாலும் அவர்களது உரிமைகள் மெல்ல, மெல்ல நசுக்கப்பட்டு அவர்கள் ஏறக்குறைய சிறுபான்மை மதத்தவர்களின் அடிமைகளைப் போலவே இன்று நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது வருத்தம் தரும் செய்தி. பெரும்பான்மையினரான ஹிந்துக்கள் தங்களின் மதச் சடங்குகளைக் கூடச் செய்யவிடாமல் தடுக்கப்படுவது அவர்களுக்குத் தொடர்ந்து இழைக்கப்படும் அநீதியின் உச்சகட்டம் என்றே சொல்லலாம். இதுவரை இந்தியாவை ஆண்ட அத்தனை அரசியல்கட்சிகளும் ‘வாக்குவங்கி’ அரசியலை மட்டுமே […]
தனக்குப் போட்டியாக இருந்தவர்களை மும்தாஜின் தகப்பனின் உதவியுடன் விரட்டியடித்த குர்ரம், ஷா-ஜஹான் (உலகத்து அதிபதி) என்கிற பெயருடன் ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாகப் பதவியேற்றார். ஆரம்பத்தில் இருந்தே மும்தாஜ் கிறிஸ்தவப் பாதிரிகளின் மீது, கிறிஸ்தவர்களின் மீது மிக வெறுப்பு கொண்டவளாகவே இருந்தாள். அதற்கான காரணம் தெரியவில்லை. அனேகமாக ஷாஜஹான் பாதுஷாவாவதற்குத் தடையாக இருந்ததால் கிறிஸ்தவப் பாதிரிகளின் மீது அவள் கோபம் கொண்டவளாக இருந்திருக்கலாம். இது வெறும் யூகம் மட்டுமே. கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஷாஜஹானை மும்தாஜ் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தாள். முகலாய […]
பி எஸ் நரேந்திரன் அக்பரின் மகனான சலீம் என்கிற ஜஹாங்கிரின் அன்னை ஒரு ராஜபுத்திர ஹிந்துப் பெண்மணி எனினும் ஜஹாங்கிர் முற்றிலும் ஒரு இஸ்லாமிய பாதுஷாவாக மட்டுமே நடந்து கொண்டவர். அக்பரையும் மிஞ்சுமளவிற்கும் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கமும், அபின் போன்ற போதை வஸ்துக்களை உபயோகிப்பதிலும், அடுத்தவன் மனைவியைக் கவரத் தயங்காத (நூர்ஜஹான்) பெண் பித்தராகவும் வாழ்ந்தவர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஹிந்துக்களைக் கொல்வதிலும், ஹிந்துக் கோவில்களை இடிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டத் தயங்கியதில்லை. ஏற்கனவே சொன்னபடி, போர்த்துக்கீசிய […]
பி எஸ் நரேந்திரன் பதினைந்தாம் நூற்றாண்டில் கோவா வெள்ளைக்கார கடற்கொள்ளையர்களின் (Pirates) தளமாக இருந்தது. அவர்களின் அட்டூழியம் கட்டுமீறிப் போவதனைக் கண்ட தக்காண சுல்தான்கள் அவர்களை அங்கிருந்து விரட்டினார்கள். அதற்குச் சில காலம் கழிந்து போர்ச்சுக்கீசியர்கள் அவர்களின் தளபதியான அல்பகர்க் (Albuquerque) தலமையில் கோவாவின் மீது படையெடுத்து அங்கிருந்த தக்காணத்து சுல்தானின் படைகளை விரட்டியடித்தார்கள். கோவா போர்ச்சுக்கீசியர்களின் காலனியாதிக்க நாடாக மாறியது. தனது நாட்டில் கால்காசுக்கும் பெறாத உபயோகமற்ற சோம்பேறிகள் கோவாவாசிளின் இரத்தத்தை உறிஞ்சி வாழ ஆரம்பித்தார்கள். […]
பின்னூட்டங்கள்