author

மானசா

This entry is part 12 of 19 in the series 6 ஜூலை 2014

பவள சங்கரி “மானசா.. ஏய் மானசா.. எந்த உலகத்துல இருக்கே நீ.. எப்பப் பார்த்தாலும் காதுல பாட்டை மாட்டிக்கிட்டு, ஏதோ உலகத்துல சஞ்சாரம் பண்ணிக்கிட்டு .. என்ன பண்றே.. நான் கழுதையா கத்துறது ஏதாவது உனக்கு காதுல உழுகுதா.. இல்லைனா எப்பப் பார்த்தாலும் சிரிப்பும், கும்மாளமும் தான்” ஏனோ இந்த அம்மாக்களுக்கு மட்டும் தான் கடந்து வந்த அந்த ஸ்வீட் சிக்ஸ்டீன் மனசு மறந்தே போகுது.. எத்தனை சுகமான பருவம் அது. கண்ணுல பார்க்குறதெல்லாம் அழகு. எதோ […]

ஆத்ம ராகம்

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

”அப்பா.. அப்பா, பேப்பர் படிக்கறீங்களா. சாப்பிட்டாச்சாப்பா” ‘இல்லப்பா. உனக்காகத்தான் வெயிட்டிங். நிம்மியும் இன்னும் சாப்பிடலை. அவளோட ரூமில் படிச்சிட்டிருக்கா பாரு. சப்பாத்தியும், சன்னாவும் செய்திருக்கேன். வாங்க சாப்பிடலாம்” “சாரிப்பா, இன்னைக்கு நான் உங்களுக்கு டின்னர் தயார் பண்ண ஹெல்ப் பன்ணமுடியாமப் போச்சு. பை த வே, அப்பா ஷி ஈஸ் சுமனா, என்னோட ஃபிரண்ட். இன்னைக்கு நம்மளோட டின்னர் சாப்பிடப் போறாங்க” “வணக்கம் அப்பா” அவள் உடுத்தியிருந்த ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட், பாய் கட் முடி […]

உலக அமைதிக்கு ஒரு வணக்கம்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

புவியெங்கும் நிறைந்திருப்பது அச்சமும் வெறுப்புமாம் செப்புகின்றனர் ஆடவர், கனிந்த வாழ்வின் அறுவடைக் களத்தில் காத்திருப்பதோ இடைவிடாத விதியின் அமைதியில்லாத அரிவாள். ஆயினும், இனிய ஆன்மாவாயிற்றே நான், ஆனந்தமே என் பிறப்பு, சோளக்கதிரேறும் மேற்கூரையிலிருந்து நான் காண்பதோ உன் விடிவெள்ளியின் பொன் மாங்குயில் காட்சியன்றோ! எங்கனம் காப்பேன் யான் புவியின் விருப்பையும், செருக்கையும் எவர் அறிவார் ஒளிர்ந்து சறுக்குமந்த வெள்ளிச் சிறகுகளையும் , மாலைநேரம் கூட்டில் அடையும் அந்த மாடப்புறாக்களையும்? எங்கனம் காப்பேன் உரத்தக் களைப்பிலிருந்து உலகை யான், […]

மொட்டைத் தெங்கு

This entry is part 3 of 23 in the series 23 மார்ச் 2014

முன் குறிப்பு :  காட்டை அழித்து நாட்டை விரிவு படுத்தும் கூட்டம் ஒரு புறமும், வாய்க்கால் வரப்பு தகராறு என்ற பெயரால் தோட்டத்தையே அழிக்கத் துணியும் கூட்டம் இன்னொரு புறமும், இவையெல்லாம் போக மரத்தை வெட்டி பணம் சம்பாதிக்கும் கூட்டம் ஒரு புறமும் இப்படி ஆளாளுக்குப் பங்கு போட்டுக்கொண்டு நம் வாழ்வாதாரமான இயற்கை வளங்களை அழித்துக்கொண்டிருப்பது வேதனைக்குரியது. எத்தனை வேளான் விஞ்ஞானிகளும், நம்மாழ்வார்களும் உயிரைக் கொடுத்துப் புலம்பினாலும் கேட்பார் இல்லை. நாட்டில் நீர்வளம் மிக மோசமாகக் குறைந்து […]

தாயகம் கடந்த தமிழ்

This entry is part 17 of 18 in the series 26 ஜனவரி 2014

சென்ற வாரம் (ஜனவரி 20 – 22, 2014) இந்தியாவில், கோயம்புத்தூர் மாநகரில், ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்’ என்ற அரசு மற்றும் அரசியல் அமைப்புகள் சாராத, தன்னார்வத் தமிழர்கள் மூலம் கோவையில் சென்ற ஆண்டு துவக்கப்பட்ட ‘தமிழ்ப் பண்பாட்டு மையம்’ என்ற அமைப்பின் மூலமாக உலகத் தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கு வழமையான அலங்காரங்களுடன் நடந்தேறியது.  புலம்பெயர் தமிழ் அறிஞர்கள் பலர் நம் தாய்மொழியைக் காக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் தங்கள் உரை மற்றும் கட்டுரைகளை முன் வைத்தார்கள். […]

நோ செண்டிமெண்ட்ஸ் மம்மி!

This entry is part 2 of 27 in the series 19 ஜனவரி 2014

  ”ஸ்ரீநிதி.. ஸ்ரீநிதி…  என்ன காரியம் செய்திருக்கிறாய் நீ?  எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு புத்தியில் உறைக்கிறதே இல்லை.  நான் பாட்டுக்கு பயித்தியம் மாதிரி கத்திட்டிருக்கேன். நீ கொஞ்சமாவது  சட்டை பண்றயா?  இன்னும் என்ன சொல்லி உன்னை திருத்தறதுன்னு தெரியல.. கடவுளே”   “எதுக்கும்மா இப்படி தேவையில்லாம கூப்பாடு போடற நீ? இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி சீன் போடற. போம்மா, போய் வேற ஏதாவது வேலை இருந்தா போய்ப்பாரு”   “அடிப்பாவி. நான் இவ்ளோ சொல்லியும் […]

என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’

This entry is part 2 of 29 in the series 5 ஜனவரி 2014

அன்பு நண்பர்களே,​ ​ எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் பெருமைக்குரிய , ‘கோனார் மாளிகை’ பழனியப்பா பிரதர்ஸ்’ நிறுவனத்தின் மூலமாக என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’, பிரபல எழுத்தாளரான, அன்பிற்கினிய, சிவசங்கரி அம்மையார் அவர்களின் வாழ்த்துரையுடன் வெளிவந்திருக்கிறது. ​ ​​ — ​ஓயாத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கிற இந்த உலகத்தில் ஏதேதோ நடந்து கொண்டுதானிருக்கிறது.  அடடா.. இப்படியும்கூட நடக்குமா?  அறிவியல் வெகு தூரம் முன்னேறிவிட்ட இந்த காலகட்டத்தில்கூட இப்படியெல்லாம் நடக்கிறதா? இது எந்த அளவிற்கு […]

பாசத்தின் விலை

This entry is part 1 of 24 in the series 22 டிசம்பர் 2013

பவள சங்கரி ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன் நண்பன் ஆராவமுதன் தன் இனிய குரலில் பதிவு செய்து அனுப்பிய பட்டினத்தடிகளின் பாடலை மெய்மறந்து, உடன் முணுமுணுத்துக்கொண்டே ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் சபேசன். “ஏண்ணா.. ஏண்ணா, நான் […]

கர்ம வீரர் காமராசர்!

This entry is part 7 of 32 in the series 15 டிசம்பர் 2013

‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கக்கூடிய பட்டாசு தொழிற்சாலை நகரமான சிவகாசிக்கு ஒரு உறவினரைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தோம்.. பொதுவாக பயணம் என்றாலே எனக்கு மிகவும் பிடித்த விசயம். அதிலும் மழை வரும் முன்பு, லேசான மண் மணத்துடன், மெல்லிய தென்றல் குளிர் காற்றாய் வீச, உல்லாச உந்தின் கதவின் கண்ணாடிகளை இறக்கிவிட்டு அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு வாலியின் கவிதைகள் தேனிசையாய் முழங்க.. வேறு என்ன வேண்டும்? மதுரை தாண்டி விருதுநகரைத் தொட்டவுடன், அதுவரை வாய் மூடி மௌனமாக […]

இருண்ட இதயம்

This entry is part 7 of 26 in the series 8 டிசம்பர் 2013

பவள சங்கரி “விடுங்க …. ஆரும் பார்க்கப் போயினம்.. “ உதடுகள் மட்டும் ஏதோ சொல்வதை உள்ளம் மறுத்து அதுவே தொடர வேண்டும் என்று ஏங்கும் அதிசயத்தை உணர்ந்தாள் தமிழினி. “தமிழினி, எப்படி இவ்வளவு மென்மையாக இருக்கிறாய்?. அதுசரி, காயம் ஏதும் பட்டதோ? ” கீழே விழப் போனவளை தாங்கிப் பிடித்தபோது, அவன் வார்த்தைகளில் இருந்த அதீத அன்பை உணரும் நேரம் உள்ளமெல்லாம் பூவாய் பூத்தது! “அதெல்லாம் ஒன்னுமில்லை, விடுங்க.. நான் போய்விட்டு வாறன்” “என்ன தமிழினி, […]