Articles Posted by the Author:

 • மோட்டூர்க்காரி!

  மோட்டூர்க்காரி!

  முன் குறிப்பு: கீழ்கண்ட இந்த கதை முற்றிலும் என் கற்பனையே. எந்த குறிப்பிட்ட நபரையும் கருத்தில் கொண்டு எழுதவில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். மெல்ல மொட்டவிழும் மலர்களின் இனிமையான மணம். மென்மையாக பூபாளம் இசைக்கும் காதல் பறவைகளின் கீதம். மணி 5.15. அலார பென்குயினின் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டு, எழுந்திருக்கலாமா என்று யோசிக்கும்போதே வேண்டாம் என்று சொல்ல நொண்டிச் சாக்கைத் தேடுகிறது மனம். இன்று ஒரு நாள் போகாமல் விட்டால்தான் என்ன ஆகிவிடப் போகிறது? சரியான […]


 • குரங்கு மனம்

  குரங்கு மனம்

    “அருந்ததி, அம்மா சாப்பிட்டாங்களா? எங்கே ஆளையேக் காணோம்” “இல்லப்பா, எங்கப்பா நேரத்துக்குச் சாப்பிடறாங்க.. என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க. அழுதுகிட்டே இருக்காங்க. இன்னும் உங்கப்பா செத்த அதிர்ச்சியில இருந்து மீளவே இல்லை பாவம். நானும் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தேன். வேற என்ன செய்யிறதுன்னு தெரியல. நீ போய் பாரு ஜனா”. கணவனும், மனைவியும் மாறி மாறி வருந்திக் கொண்டிருந்தனர். அப்பாவை திடீரென்று இப்படி ஒரு விபத்து அள்ளிச் சென்றுவிடும் என்று கனவிலும் யாரும் நினைக்கவில்லை. […]


 • முற்பகல் செய்யின்…….

  முற்பகல் செய்யின்…….

  பெண்டுலம் வைத்த பழங்கால உயரமான தேக்குமரக் கடிகாரம் டங்.. டங்.. என்று முரட்டுத்தனமாக ஒலிக்கிறது. மணி 12 அடித்திருக்குமோ.. இல்லையில்லை 11 தான் அடிச்சுது. நான் எண்ணிக்கிட்டேனே. இப்பதான வந்து படுத்தேன்.. 12 ஆகியிருக்காது. தண்ணி தாகமா இருக்கே.. கண்ணைத் திறக்க பயம். கையைத் தடவி கட்டிலுக்கருகில் தண்ணீர் பாட்டிலைத் தேடினாள். அயோடா, தண்ணீர் கொண்டு வந்து வைக்க மறந்துட்டேனோ. இருக்காதே. இது வரைக்கும் மறந்ததில்லியே. மெல்ல கண்ணைத் திறந்து பார்த்தால் என்ன வந்துடப்போவுது? ‘காக்க, காக்க […]


 • சுமைதாங்கி சாய்ந்தால் ……..

  சுமைதாங்கி சாய்ந்தால் ……..

    “நைனா, அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க. மணி 10.30 ஆகப்போகுது. வந்து சாப்பிட்டுட்டு வந்துடுங்க. அப்பறம் மயக்கம் வந்துடும். சக்கரை வேற ஏறிப்போயிடும் ”   “ம்ம்ம்”   “என்னம்மா, முத்துலட்சுமி நைனா வறாங்களாமா, இல்லையா. இன்னும் எவ்ளோ நேரந்தான் நானும் சமையல் ரூமிலயே வெந்துக்கிட்டு இருக்குறது. உடம்பெல்லாம் அடிச்சிப் போட்டாப்பல இருக்கு. போய் படுக்க வேண்டாமா.. என்ன பண்றாங்க அப்புடி.?”   “அம்மா, நைனா ஏதோ பழைய தபால் எல்லாம் எடுத்து வச்சி பார்த்துக்கிட்டு இருக்காங்க.. […]


 • பசுமையின் நிறம் சிவப்பு

  பசுமையின் நிறம் சிவப்பு

    ”ஏம்மா.. வீட்டில யாரும்மா. எங்கம்மா உன் புருசன்? பணம் வாங்கறப்ப தேடி வந்து மணிக்கணக்கா குந்திக்கிட்டிருந்து வாங்கத் தெரியுது.  வட்டி கூட நேரத்துக்கு ஒழுங்கா வந்து கட்ட முடியல..  ஏம்மா எல்லாரும் சோத்துக்கு உப்பு போட்டுத்தானே திங்கறீங்க. எத்தனை வாட்டி நடக்குறது? எங்களுக்கெல்லாம் வேற பொழப்பே கிடையாதா?”   “ஐயா, அவுரு கடைவீதிக்கு போயிருக்காருங்க.  வந்தவுடனே வரச்சொல்றேங்க. சத்தம் போடாதீங்க ஐயா, அக்கம் பக்கத்துல மானம் போவுது.”   “ஓ.. மானமா அப்படி ஒன்னு இருக்குதா […]


 • நிழல் தேடும் நிஜங்கள்

  நிழல் தேடும் நிஜங்கள்

      பவள சங்கரி   ”ஏம்மா.. யாரும்மா அது, கையுறையும், தலையுறையும் போடாமல் வேலை செய்யிறது வாம்மா.. வெளியில வா… முதலாளி வர நேரத்துல ஏம்மா இப்புடி உசிர வாங்குறீங்க?”   “அண்ணே.. நான் புதுசா இன்னைக்குத்தான் வேலைக்குச் சேந்தேன். லேட்டாத்தான் வந்தேன். அதான்..  சூப்பர்வைசரை பாக்கச் சொன்னாங்க.. யாருன்னு தெரியல.. அதான்..” என்று தலையைச் சொறிந்தாள்.   “பாத்தியா.. இதான் பிரச்சனை. தின்பண்டங்கள் பேக் செய்யுற இடத்துல இப்படி தலையை சொறிஞ்சிக்கிட்டு நின்னா.. பாக்குறவங்க […]


 • கனிகரம்

  கனிகரம்

  பவள சங்கரி ”அம்மா.. அப்பா நம்மளை விட்டுப்போயி எத்தனை வருசம் ஆவுதும்மா…? “அவுரு போயி எட்டு வருசம் ஆவுதேப்பா.. நீ காலேசுல சேர்ந்த முதல் வருசமே போயிட்டாரே… நிமிச நேர நெஞ்சு வலியில பொசுக்குனு போயிட்டாரே..” “நானும் வருசா வருசம் வரும்போதெல்லாம், உன்கிட்ட இந்த தறிப்பட்டறையெல்லாம் ஏறகட்டிட்டு என்கூடவே வந்துடுன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறியேம்மா… “ ‘என்னமோப்பா, உங்க அப்பாரோட வாழ்ந்த இந்த மண்ணை உட்டுப்போட்டு எனக்கு எங்கியும் வர புடிக்கலைப்பா. என்னமோ அந்த மகராசரு யாபாரத்துல […]


 • அமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை

  அமெரிக்க அனுபவங்கள் – ஒரு சமூகவியல் பார்வை – புத்தக மதிப்புரை ஆசிரியர் – நாகேஸ்வரி அண்ணாமலை

  முதல் பதிப்பு – 2012 மொத்த பக்கங்கள் – 210 விலை – 165 பொதுவாக ஒரு சிறு பிரயாணம், அது வியாபார நிமித்தமாகவோ அல்லது சுற்றுலா மற்றும் வேறு ஏதாவது காரணங்களுக்காகவோ செல்வதென்றாலே பல முன்னேற்பாடுகள் அவசியமாகிறது. அதுவும் எங்கு பார்த்தாலும் தீவிரவாதமும், கொள்ளையும், பாலியல் வன்கொடுமைக்ளும் மலிந்து கிடக்கின்ற இந்த காலகட்டத்தில் நாடு விட்டு நாடு பயணம் செய்யும் போது, குறிப்பிட்ட அந்த நாட்டைப்பற்றிய அனைத்து தகவல்களும் அறிந்து கொண்டு பயணம் செய்யும்போது ஒரு […]


 • வெளுத்ததெல்லாம் பால்தான்!

  வெளுத்ததெல்லாம் பால்தான்!

    ஏண்ணா.. உங்களுக்கே இது நியாயமா இருக்காண்ணா..  இந்த 55 வயசுல என்னை தையல் கிளாசுக்குப் போகச்சொன்னேள். முடியாட்டியும் உங்க தொல்லை தாங்காம போய் என்னோட இரவிக்கைக்கு பேப்பர் கட்டிங்காவது போட்டு  தைச்சுப் பழகிண்டு வந்தேன்..  ஆனா பென்ஷன் தர்றவாகிட்ட, அசோசியேஷன் மீட்டிங்குல போய் சட்டம் பேசிண்டு, அழிச்சாட்டியம் பண்ணிண்டு இருக்கேளே.. இதுக்கு என்னண்ணா பன்றது? நீங்க கொடுத்த பெட்டிஷன் பெரிய புயலையேக் கிளப்பிடித்துன்னு எல்லோரும் புலம்பறாளே.. அந்த கலாட்டுவுல இப்ப பென்சனை நிறுத்தி வச்சிருக்காளே அவாளைப்போயி […]


 • எம் ஆழ்மனப் புதையல்!

  எம் ஆழ்மனப் புதையல்!

    Out Of My Deeper Heart – கலீல் ஜிப்ரான்     பவள சங்கரி புள்ளொன்று விண்ணேகியது எம் ஆழ்மனதிலிருந்து. உயர உயரப் பறப்பினுமது பரந்து,ப்ரந்து வளர்ந்தது. முதன்முதலில் தூக்கணாங்குருவி  போன்றிருந்த அது பின் ஓர் வானம்பாடியாகவும், அதன்பின்னோர் கழுகாகவும், வசந்த மேகமுமாக ஆனதோடு விண்மீன்களின் சுவர்கத்தையும் நிறைத்தது. விண்ணோக்கிப் பறந்ததோர் பறவை எம் இதயக்கூட்டிலிருந்து. பறக்கும் தருணமதில் பெரிதாக மழித்தெடுப்பினும் விலகவில்லையது, எம் இதயத்திலிருந்து. ஓ எம் விசுவாசமே, எம் மூர்க்க ஞானமே, […]