ரமணி பிரபா தேவி கைக்கெட்டா நினைவுகளாகப் போய்விட்ட என் சிறுபிராயத்து, கிராமத்து மணம் வீசும் ஞாபகப்பெட்டகங்கள் இவை.. நினைவு தெரிந்தபின், ஊரினுள் வசிக்காததாலோ என்னவொ எனக்கு உறவினர்களை விடவும், இயற்கையின் மேல் ஒரு விதமான அன்பும் நேசமுமுண்டு . தொலைக்காட்சியிலேயே இளம்பருவத்தைத் தொலைத்திராக் காலகட்டமது. பெரும்பான்மையான பொழுதுகள் தோட்டத்திலே கழியும். முழுக்க முழுக்க நீர்ப்பாசனத்தாலான காலகட்டமாகையால் நெல் பாசனமுண்டு எங்கள் வயலில். சாலையிலிருந்து காணும்போதே கண்ணுக்கு குளிர்ச்சியளித்த பசுமையான நெல் நாற்றுகள் மனதினில் படமாய் […]