Posted inகவிதைகள்
அன்பின் ’காந்த’ ஈர்ப்பு
’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) உயிர்த்திருந்த நாளில் அவர் தன் சடாமுடியில் ஆகாயகங்கையாய் சூடிக்கொண்டாடியவள் இன்று அந்திமக்காலத்தில் அமைதியாய் தன்வழியில் போய்க்கொண்டிருக்கிறாள்..... அன்பின் பெயரால் தன்னை ஒப்புக்கொடுத்தவரிடம் என்றும் அன்பை மட்டுமே யாசித்திருந்தாள். அவருடைய அரைக்காசுக்கும் உரிமைகொண்டாட வழியற்ற தன் நிலைக்காய் வருந்தியதேயில்லை…