“அதோ இருக்கே கூடை! அதிலிருந்து ஆளுக்கு ஒரு பழம் கிடைச்சாத் தேவலை!” “கிடைச்சாத் தேவலைதான்! ஆனா கிடைக்கிறாப்பலேத் தெரியலையே! கூடையைத்தான் ஐயா பக்கத்திலையே வச்சிருக்காரே!” “பக்கத்திலே இல்லாமே தூரத்திலே வச்சிருந்தா மட்டும் நமக்குக் கிடைச்சிடுமா என்ன? ஐயாவாப் பார்த்துக் கொடுத்தாத்தானே சாப்பிட முடியும்?” மேற்கண்ட கசமுசாப் பேச்சு நடந்து கொண்டிருந்த போது கணீரென்று ஒரு குரல் குறுக்கிட்டது. “என்ன? என்ன பேச்சு?” “ஒண்ணுமில்லேய்யா! பசிக்கிற மாதிரி இருந்தது!” கசமுசாக்காரர்களில் ஒருவர் தைரியமாகவே சொல்லிவிட்டார். “பழக் கூடை பக்கத்திலே […]
மலர்த் தோட்டத்தினுள் அந்த மலர்ப் பதுமை மெதுவாக நடந்தாள்! குவளையும் முல்லையும்! கனகாம்பரமும் செண்பகமும்! செவ்வந்தியும் செங்காந்தளும்! நீலோத்பலமும் நாகலிங்கமும்! சம்பங்கியும் ரோஜாவும்! எத்தனை மலர்கள்! தோட்டத்திலுள்ள மலர்களைச் சொல்லவில்லை! இவ்வளவும் வனப்புமிக்க அவள் பொன்னுடலில் பூத்திருக்கின்றன! தன் மேனியில் இத்தனை மலர்கள் பூத்திருக்க அவளுக்கு இன்னும் ஆசையைப் பாருங்கள்! மங்களகரமான மஞ்சள் நிறங்காட்டும் சூரிய காந்தியைப் பறித்துக் கொண்டு, “நீ என் முகத்திற்கு இணைதானோ?” என்று கிண்கிணிக் குரலில் கேள்வி எழுப்ப, “இணையெப்படி யாகும் இனியவளே!” […]
அது அஸ்தினாபுரத்தை நோக்கிச் செல்லும் இராஜபாட்டை. நாலு கால் பாய்ச்சலில் ஒரு குதிரை வாயு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. ‘டக்டக்’ என்று அதன் குளம்படிச் சத்தம் ஏதோ ஒரு வேக கதியில் இன்னிசை எழுப்பிக்கொண்டிருந்தது. திடீரென்று குதிரையின் வேகம் தடைபட்டது. ஓடிய வேகத்தில் கொஞ்ச தூரம் மெதுவாகச் சென்ற குதிரையை அதன்மேல் அமர்ந்திருந்த வீரன், கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தி, வந்த வழியில் திரும்பி, குதிரையைக் சிறிது தூரம் நடத்தினான். அதோ! அங்கே கிடப்பது யார்? அவனுக்கு என்ன […]
மத்திய தரைக் கடலில் நீல வண்ணத்து நீரைக் கிழித்துக் கொண்டு வந்த அந்தக் கப்பல் அலெக்ஸாண்டிரியா துறை முகத்தை வந்தடைந்தது. கப்பலில் ஒரு வெள்ளைக்காரர் வாயில் வந்த படி ஏதோ திட்டிக்கொண்டே வந்தார். அவர் பேச்சில் அடிக்கடி அரை நிர்வாணப் பக்கிரி என்ற வார்த்தை அடிப்பட்டுக கொண்டிருந்தது. அப்பப்ப! அவரது தொனியின் தோரணையில் தான் எவ்வளவு வெறுப்பு மண்டிக் கிடந்தது. யாரைப் பற்றி அவர் அப்படிப் பேசுகிறார்? அதே கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த இந்திய நாட்டுப் […]
சகுந்தலா மெய்யப்பன் அரபு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டைச் சேர்ந்தவர் கலீல் கிப்ரான். இவர் ஒரு சிறந்த மேதை. சிந்தனையாளர். துத்துவ ஞானி. புரட்சிக் கவிஞர். அத்துடன் நகைச்சுவை வேந்தர். இவருடைய நகைச்சுவைகள் கேட்கக் கேட்கத் தெவிட்டாதவை. நினைத்து நினைத்துச் சுவைக்கலாம். அது மட்டுமல்ல. நடைமுறை வாழ்க்கையிலும் மிகவும் சுவைபட நடந்து கொள்வார். அவருக்கு ஒரு நாள் குளியல் துறைக்குப் போய் எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு வர வேண்டும் என்று ஆசை வந்தது. அந்த நகரத்துக் […]