author

புதிய சொல்

This entry is part 14 of 19 in the series 28 ஜூன் 2015

சத்யானந்தன் ஒரு மோசமான தோல்வி எதிர் நீச்சலிட எழும் நூறு கரங்களை ஓயச் செய்தது ஒரு பிரம்மாண்ட வெற்றி முளைவிடும் நூறு புதிய தடங்கள் மண் மூடிப் போகச் செய்தது தற்செயலான கரவொலிகள் கூட அசலான கலைஞனின் ஆன்மாவைக் கட்டிப் போட்டது கலையுலகும் இயங்குலகும் செக்கைச் சுற்றிய வட்டத்தில் வெவ்வேறு புள்ளிகளில் தினமும் ஒரு புதிய பக்கத்தில் ஒரு புதிய சொல் கவிஞனுக்கே சாத்தியம்

செய்தி வாசிப்பு

This entry is part 17 of 23 in the series 21 ஜூன் 2015

  சத்யானந்தன்   யானைகள் காடுகளை விட்டு நீங்கி அப்பாவி மக்களின் குடியிருப்புகளில் அட்டகாசமாய்ப்  புகுந்து அநியாயம் செய்தன   இயற்கை மலையில் வெறி வந்து நிலத்தைச் சரித்து பேரிடர் ஏற்படுத்தியது   கூலித் தொழிலாளிகள் கூட்டணி அமைத்து சதிகாரர்களுடன் உலக அளவில் ஒப்பந்தம் போட்டு மரங்களைக் கடத்துகிறார்கள்   விவசாயி சாகுபடி செய்யாமல் தற்கொலை செய்து விட்டார்   பாலியல் வன்முறைக்கு வெளியில் நடமாடும் பெண்களே காரணம்

பிரம்மலிபி- நூல் மதிப்புரை

This entry is part 21 of 23 in the series 21 ஜூன் 2015

சத்யானந்தன் எஸ்ஸார்ஸியின் பிரம்மலிபி உள்ளிட்ட சிறுகதைகளில் பலவற்றை நாம் திண்ணையில் வாசித்திருக்கிறோம். படிக்காதவற்றையும் சேர்த்து ஒரு தொகுதியாக வாசிக்கும் அனுபவம் நமக்கு அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களிடம் உள்ள கதைகள் மனித உறவுகளில் உள்ள முரண்கள் புதிர்கள் இவை கலைமிகுந்த ஓவியங்களாய் நம்முன் விரிகின்றன. சுழல்-  இந்தக் கதை நடுத்தர வர்க்கத்துக் கனவுகள் எப்படி வணிகமாகின்றன என்பதைப் பற்றிய கதை – கைபேசி எண்களை எப்படித்தான் கண்டுபிடிப்பார்களோ – மாத சம்பளம் வாங்குகிறவர்களுக்கு இலவச நிலம் […]

நான் அவன் தான்

This entry is part 16 of 23 in the series 14 ஜூன் 2015

சத்யானந்தன் பொறுமையின்றி அழுத்தும் ஒலிப்பானின் பேரொலியில் ஒரு ஓட்டுனர் சுத்தியலாகிறார் நச்சரிக்கும் மேலதிகாரி துளையிடும் கூராணி அண்டை அயலின் அன்புத் தொல்லைகள் அங்குசங்கள் உறவுகளின் சொல்லாடல்கள் பின்னகரும் கடிகார முட்கள் ஒரு நாளின் ஆரோகண அவரோகணங்கள் அனேகமாய் அபசுரங்கள் ஒரு கேலிச்சித்திரம் வரைந்தால் நானும் இவற்றுள் ஒன்றாய்… பசுமையும் நிழலுமான ஒரு தருவே மனிதர்களின் தேடல் பறவைகளுக்கு மட்டுமே அதன் நிரந்தர அரவணைப்பு

கடந்து செல்லுதல்

This entry is part 20 of 24 in the series 7 ஜூன் 2015

சத்யானந்தன் எப்போதோ அமையும் மலைவாசம் அப்போது மட்டும் அனுபவமாகும் கடந்து செல்லும் மேகம் குளிர்ந்ததாய் வெப்பமாய் பதின்களில் கடந்து சென்றது நாம் காதல் என்று பெயரிட்டது மாதக் கணக்கில் உன் மௌனங்களை நான் கடந்து சென்றேன் நீ வருடங்கள் தாண்டி மௌனம் கலைத்த போது காலம் கடந்து சென்றிருந்தது நம்மூர் பெரிய ஏரியின் தெள்ளிய நீரில் வடிவம் மாறி மாறிக் கடந்து செல்லும் மேகங்களின் பிம்பங்கள் ரசனை இயலாமற் போனாலென்ன? அங்கே குடியிருக்கும் தவளைகளும் மீன்களும்

ஒரு வழிப் பாதை

This entry is part 19 of 21 in the series 31 மே 2015

  சத்யானந்தன்   மரம் நெடிதுயர்ந்து நின்றது   பாழுங் கிணற்றுள் இறங்கி நீண்ட வேர்கள் ஒரு நாள் ஒரு தவளையைக் கண்டு மௌனம் கலைத்தன     “எங்களைப் பற்றி நீ மேலே போகலாமே”     “பற்றுதலால் கிடைப்பதெல்லாம் திரும்ப முடியா இடமே”   கீழ் நோக்கித் தாவியது தவளை

ஒலி வடிவமில்லாக் கேள்விகள்

This entry is part 10 of 19 in the series 24 மே 2015

  கருத்து அதிகாரம் எது? எதில்?   நூறு பேர் சபையில் நாலு பேர்   மேடைக்கு அழைக்கப் படுவதில் அவருக்குள் ஒலிவாங்கி வசப்படும் வரிசையில்   இறுதிச் சொற்பொழிவு இவரது என்பதில்   கருத்துச் சுதந்திரக் கனவு வெளியில் ஒரு தீவு கருத்து அதிகார பீடம்   ஒலிபெருக்கிகள் ஓய்ந்து கரவொலி உரிமை மட்டுமுள்ளோர் கருத்து அதிகாரப் பேச்சாளர் யாவரும் வெளியேற   வெற்றிட அரங்கம் தோற்றம் மட்டுமே   அங்கே எங்கும் வியாபித்திருக்கும் சபைக்கு […]

அந்தக் காலத்தில்

This entry is part 20 of 25 in the series 17 மே 2015

  எல்லாம் நன்றாக இருந்த காலத்தில்   கைக்குத்தல் அரிசிதான் கைத்தறித் துணிதான்   கட்டை மாட்டு வண்டி காத்துக்குப் பனை ஓலை விசிறி   தொலைபேசி திரைப்படம் தொலை நோக்கி விமானம் பேனா குண்டூசி எதுவுமில்லை   விதவைக்கான இருளைக் கண்டு பெண்கள் உடன் கட்டை ஏறி எரிந்து மறைந்தார்கள்   மனைவி இறந்தால் பன்னிரண்டு வயதில் மணப்பெண் உண்டு விதவனுக்கு   புகைப்படம் எடுப்போருக்கு அடுப்புக்கரி ரசயானக் கலவையை   ஆகாய விமான ஆராய்ச்சிக்கு […]

இயல்பான முரண்

This entry is part 12 of 26 in the series 10 மே 2015

சத்யானந்தன் நகரும் புள்ளிகளான தடங்களில் வெவ்வேறு திசையில் நீ நான் பல முனைகளைக் கடந்த போதும் எதிலும் நாம் சந்திக்கவே இல்லை இருந்தும் என் எழுத்துக்கள் சொற்கள் இடைப்பட்டு புள்ளி ஒன்று உன்னாலே முளைத்து விடுகிறது இதனால் ஒவ்வொரு வாசிப்பிலும் என் முரண்பாடுகள் சில புதிதாய் சில வேறு வடிவாய் தடம் மாறுதல் இயல்பான முரண்

கலை காட்சியாகும் போது

This entry is part 7 of 25 in the series 3 மே 2015

நகரின் ஏதோ ஒரு கட்டிடத்துள் ஆளரவமில்லாக் கண்காட்சிக் கூடத்து மூலையை நீங்கி ஒரு நவீன ஓவியம் நிறைந்த நிதியை செல்வாக்கைப் பறைசாற்றும் விரிந்த வரவேற்பறைச் சுவரில் காத்திருப்போரினுள் அவர்களை அங்கே வரவழைத்த காரணம் தவிர வேறு எதுவும் விழித்திருக்காது கலாரசனையும் தான் தன் கலைக்கான ரசனையின் கவனிப்பின் விமர்சனத்தின் தொடுகை கலைஞனின் கூர் ஆசை அதைச் சென்றடையும் வரைபடம் அவன் தூரிகைக்கு அப்பால் காட்சிக் கூடத்திலிருந்து மாளிகைக்கு கலை பயணித்த வாகனம் வணிகம் காரணம் அதுவல்ல