வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி மொழியாக்கம்-சத்தியப்பிரியன் பிருந்தாவன லீலைகளின் முடிவு. பாகவத புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் இளமைக் கால நிகழ்ச்சிகளாக மேலும் சிலவற்றைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஒரு முறை யமுனை ஆற்றில் நந்த கோபர் குளித்துக் கொண்டிருந்தார்.வருண பகவானின் ஆட்கள் அவரை பிடித்துக் கொண்டு தங்கள் தலைவன் முன் கொண்டு நிறுத்துகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களை துரத்திக் கொண்டு சென்று வருண பகவானிடமிருந்து நந்தகோபரை மீட்டு வந்ததாகக் கூறப் படுகிறது.இதன் மூலம் நாம் அறிந்து […]
வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி மொழியாக்கம்-சத்தியப்பிரியன் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி குறிப்பிடும் தொல் நூல்களில் இரண்டில் மட்டுமே ராதையைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒன்று பிரம்ம வைவாத்ர புராணம்.மற்றொன்று ஜெயதேவரின் பாடல் தொகுப்பு.பாகவத உபன்யாசம் நடத்தும் பாகவதோத்தமர்கள் மீண்டும் மீண்டும் தங்கள் உபன்யாசத்தில் ராதையைக் குறிப்பிடுகின்றனர். இதில் வியப்பு என்னவென்றால் ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு இடத்தில் கூட ராதையைப் பற்றிய குறிப்பு இல்லை. பாகவதத்தில் கூறப்பட்டுள்ளபடி ஸ்ரீ கிருஷ்ணரை தொடர்ந்து சென்ற கோபிகை ஒருத்தியின் பாதத்தடங்கள் […]
வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி மொழியாக்கம்-சத்தியப்பிரியன் கற்பனை விரிவுகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பிருந்தாவன லீலைளைகளில் தனி இடம் உண்டு.. ஆனால் நமது பனியின் நோக்கம் அத்தகைய அழகியல் கற்பனைகளில் மூழ்கி விடாமல் அவற்றிற்கு பின்பு உள்ள உண்மைகளை வெளிக் கொணர்வதில் இருக்க வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணர் பிருந்தாவனத்திற்கு வந்த பிறகு மூன்று அசுரர்களைக் கொன்றதாக ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.வாத்சாசுரன்,பகாசுரன் மற்றும் ஆகாசுரன் என்ற மூன்று அரக்கர்கள் அவர்கள்.வாத்சாசுரன் கன்றின் வடிவிலும்,பகாசுரன் கொக்கு வடிவிலும், […]
மொழியாக்கம்-சத்தியப்பிரியன் யது வம்சம். ரிக் வேதத்தின் பத்தாவது பகுதியில் ஆயு என்ற மன்னனை பற்றிய குறிப்பு வருகிறது. ஆயுவின் புதல்வன் நகுஷன். ஆயுவின் பேரன் யயாதி. யயாதிக்கு ஐந்து புதல்வர்கள். மூத்தவன் யது. இந்த யதுவே ஸ்ரீ கிருஷ்ணரின் மூதாதையன். இந்த வரிசையில் கடைக்குட்டி புரு என்பவன் ஆவான். இந்த புருதான் கௌரவ பாண்டவர்களின் மூதாதையன். ஸ்ரீ கிருஷ்ணரின் மூதாதையனான யதுவைப் பற்றிய குறிப்பு மகாபாரதத்திலும், புராணங்களிலும் காணப் பெற்றாலும் ஹரிவம்சத்தில் அவனைப் பற்றிய கதைச் […]
மொழியாக்கம்-சத்தியப்பிரியன் பக்கிம் சந்திர சட்டர்ஜியைப் பற்றி ஒரு சில வார்த்தைகள். பக்கிம் சந்திர சட்டர்ஜி துர்கா சுந்தரி தேவி மற்றும் ஜாதவ் சந்திர சட்டோபாத்தியாயா என்ற தம்பதியரின் மூன்று புதல்வர்களில் கடைக் குட்டி..,1838ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம்நாள் கொல்கத்தா அருகில் உள்ள கந்தலபாறை என்ற இடத்தில் பிறந்தார். ஜாதவ் சந்திரர் ஒரு துணை நீதிபதி. நற்பண்பு நிறைந்தவர். பக்கிம்மின் மூத்த சகோதரரான சஞ்சீவ் சந்திரா ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். அவருடைய பாலமோ […]