author

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – -9 குளிர், 10 வேண்டாம் பூசனி

This entry is part 10 of 13 in the series 6 செப்டம்பர் 2020

ஸிந்துஜா  தி.ஜா.வின் பேரிளம் பெண்கள் ! – 9 குளிர், 10 வேண்டாம் பூசனி   தி. ஜானகிராமனின் இளம்பெண்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். அவர்கள் ஆண் எழுத்தாளர்களின் புளகாங்கிதங்களிலும் பெண் எழுத்தாளர்களின் ஆற்றாமைகளிலும் பரவிக் கிடப்பவர்கள். அதனால் இங்கே பார்க்கப்படப் போவது சுவாரஸ்யமான அவரது பேரிளம் பெண்கள் ! ஜானகிராமனின் கிழவிகள் அவரைப் பாடாய்ப் படுத்துகிறார்களா அல்லது அவரால்தான்  அவர்களைக் கண்ட்ரோலில் வைக்க முடியவில்லையா என்று குழப்பமாயிருக்கிறது. என்ன அடாவடியாக ஒரு பேச்சு ! ஆளைத் தூக்கிவாரிப் போடச் செய்யும் […]

செப்டம்பர் 2020 – வாரம் ஒரு சிறுகதை – சால்வை

This entry is part 11 of 13 in the series 6 செப்டம்பர் 2020

   திருமணத்துக்கு அழைக்கத் திலகவதியுடன் அவளது பையன் முத்து, மருமகள் சித்ரா, பேரன் என்று சிரிப்பும் கூச்சலுமாக உள்ளே வந்தார்கள்.  அனைவரும்  சாரங்கபாணியையும், நாகலட்சுமியையும் கீழே விழுந்து வணங்கினார்கள்.  “புவனத்துக்குக் கலியாணம். போன மாசமே உங்களுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன் மாமா. நீங்க ரெண்டு பேரும் அவசியம் முன்னாடியே வந்து கலியாணத்தை நடத்திக் கொடுக்கணும்” என்றாள் திலகவதி குங்குமத்தை நாகலட்சுமியிடமும் பத்திரிகையை சாரங்கபாணியிடமும் நீட்டியபடி. சல்வார் கமீஸ் அணிந்திருந்த திலகவதியைப் பார்த்து “இந்த டிரஸ் உனக்கு நல்லா இருக்கு. புடவையைக் கட்டித்தானே  இவ்வளவு நாளா பாத்திருக்கேன்” […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -8

This entry is part 5 of 9 in the series 30 ஆகஸ்ட் 2020

ஸிந்துஜா  ஸ்ரீராமஜெயம்   ஆமாம். ராகவாச்சாரி திருடி விடுகிறார். அச்சாபீஸில் ப்ரூப் ரீடராக அவர் வந்து இருபத்தி ஆறு வருஷமாகிறது. வயது, ஊழிய காலம் இரண்டிலும் முதலாளிக்கு அடுத்த பெரியவர் அவர்தான். அவருடைய திருட்டைக் கண்டுபிடித்து விடுவது காவலாளி வேலுமாரார். அவன் வேலைக்குச் சேர்ந்து இருபது வருஷங்களாகிறது. இந்த இருபது வருஷங்களில் ஒருநாள் கூட ராகவாச்சாரி ஆபீஸ் ஆரம்பிக்கிற எட்டரை மணிக்கு முன்னால் வந்து அவன் பார்த்ததில்லை. ஒரே ஒருநாள் அவர் இரண்டு நிமிஷம் நேரத்துக்கு முன்னால் வந்தார். அன்று ஜப்பான்காரன் சென்னை மீது குண்டு வீசிவிட்டுப் போனான் !   ராகவாச்சாரி எட்டு […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 7

This entry is part 18 of 18 in the series 23 ஆகஸ்ட் 2020

குழந்தைக்கு ஜுரம் – 7 “மனைவி சொல்வதைக் கேட்டார். குழந்தையைப் பார்த்தார். மணிபர்ஸைப் பார்த்தார். புத்தகம் போடும் பஞ்சாபகேசனை நினைத்தார். வாத்தியார் நெஞ்சு புகைந்தது. வயிற்றைப் பற்றிக்கொண்டு வந்தது” முதல் நாலு வரிகள் இவை . விதையை ஆழப் புதைக்கிறார். அது விருட்சமாகத் தலையெடுக்கிறது.  ஒரு குறிப்பு:  கீழ்வரிகளில் கதை சுருக்கமாகச் சொல்லப்படுகிறது. விமரிசனத்தில் கதைச் சுருக்கத்துக்கு அவ்வளவு வேலை இல்லை என்று நினைப்பவன் நான். ஆனால் இங்கே அதைச் சொல்லக் காரணம் இருக்கிறது. அது பின்னால். சரவண வாத்தியார் ஸ்கூலில் வேலை […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 6

This entry is part 9 of 14 in the series 16 ஆகஸ்ட் 2020

ஸிந்துஜா கள்ளி – 6 சுப்பண்ணா கிருஷ்ணனிடம் வந்து பத்து ரூபாய் கைமாத்தாகக் கேட்கிறார். அது எந்த மாதிரியான கை? பிடில் வாசிக்கிற கை. நாற்பது வருஷங்களாக லட்சோப லட்சம் பேர்களை அதன் ஸ்வரத்தில் மோடி கிறக்கிய கை. மகா மகா தாள அசுரர்களையெல்லாம் பல்லைப் பிடித்துப் பார்த்த கை. இங்கே இருக்கிற கீர்த்தி போதாதென்று நினைத்தோ என்னவோ பல பாஷைகள் பேசுகிற சங்கீதக் கோஷ்டியோடு அவரை வெள்ளைக்கார நாடுகளுக்கு அனுப்பினார்கள். அவர் போனார். ஆறு மாசம் […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -5

This entry is part 15 of 16 in the series 9 ஆகஸ்ட் 2020

  வெங்கிடி சார் ஏன் ஓடினார்? – 5 வெங்கிடி சார் யார்? போஜனப்பிரியரல்ல : “மாலீ கொஞ்சம் மோர்த் தண்ணி கொண்டா. நீர்க்க இருந்தால் போதும். ரொம்ப நீர்க்க இருக்கணும், நீராரத் தண்ணி விட்டாலும் சரி.”  வயது வித்தியாசமின்றி அடுத்தவர் சொல்லுக்கு மரியாதை தருபவர் : “எல்லாரும் ஒரு வளியா தொலஞ்சாங்கடாப்பா. இப்பதான் அக்கடான்னு இருக்கு ஊடு” என்றது மாலி.  வெங்கிடி சார் சிரிப்பை  சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். இனிமேல் சிரிப்பு தன்னை மீறி வராது என்று தெரிந்தவுடன் “அப்படியெல்லாம் சொல்லப்படாது மாலி” என்று […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் -4

This entry is part 7 of 21 in the series 2 ஆகஸ்ட் 2020

ஸிந்துஜா  கோதாவரிக் குண்டு – 4  ஏமாற்றப்படும் போது ஏமாறுபவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அதுவும் போகிறவன், வருகிறவன், கூட இருக்கிறவன் என்று எல்லோரும் அதைச் செய்தால்? நாமாக இருந்தால் நிதானத்தை இழந்து விடுவோம். எரிச்சல் வரும். கோபத்தில் கத்துவோம். அடிக்கக் கூட  முயலுவோம்.  ஆனால் “கோதாவரிக் குண்டு”வில் வரும் நம்ம ஆள் இருக்கிறாரே, அவர் எதிர்கொள்ளும் விதத்தை எல்லாம் பார்த்தால், உங்களுக்குத் தூக்கி வாரிப் போடும். கதைசொல்லிதான் நம்ம ஆள். அவர் வீட்டுக்குப் பழைய பேப்பர்க்காரன் வருகிறான். அவன் இவரை ஏமாற்றுவான் என்று இவருக்கே திட்டவட்டமாகத் […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

This entry is part 5 of 23 in the series 26 ஜூலை 2020

முள்முடி – 3 நான் ஆறாப்பு வரை பழங்காநத்தத்தில் (மதுரை) இருந்த ஆர்.சி. ஸ்கூலில்தான் படித்தேன். அப்போது ஆசிரியர்/ஆசிரியைகளின் தாக்கம் பள்ளிப் பிள்ளைகள் மீது மிகவும் அதிகம். அவர்கள் நாங்கள் எல்லோரும் கடவுளின்  மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொடுத்த தோத்திரங்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடம். நான் தினமும் இரவு படுக்கப் போகு முன், அந்த வயதிலேயே என்னையும் என் குடும்பத்தில் உள்ள அனைவரையும், உறவினர்களையும், நண்பர்களையும் அவர்கள் குடும்பங்களையும் பிதாவே காப்பாற்றும் என்று சொல்லி நெஞ்சில் சிலுவைக் குறி கீற்றிக் கொள்வேன். இதனால்தான் “முள்முடி” […]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்

This entry is part 20 of 20 in the series 19 ஜூலை 2020

தீர்மானம் – 2 தி. ஜானகிராமனால் 1957ல் எழுதப்பட்ட சிறுகதை. ஒரு சிறுகதையின் பரிபூரண லட்சணம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சான்றாக இந்தக் கதை நிற்கிறது. இக்கதையின் அமைப்பு அதன் வரையறுக்கப்பட்ட எல்லைகளை நன்கு உணர்ந்து செதுக்கப்பட்டுள்ளதால் அனாவசியப் பிசிறு, கோணல்மாணல் அற்று ஒரு பல்லவ சிற்பம் போல அமைந்துள்ளது. ஜானகிராமன் எப்போதும் வணங்கும் சொற்செட்டும் சொல் பொறுப்பும் கதையின் சம்பாஷணைகளிலும் வர்ணனைகளிலும் பிரமிக்கும் அளவு பதிந்து கிடக்கின்றன. இதை இங்கே அழுத்திச் சொல்லக் காரணம், இன்றுள்ள சூழலில் ஒருவர் தனது சிறுகதையில் இயற்கையின் பலவேறுவித விகசிப்புகளை (மரங்கள், வயல்கள், நதிகள் இன்னபிற) வருணிக்கிறேன் என்று ‘நடந்தாய் […]

பிரகடனம்

This entry is part 13 of 20 in the series 19 ஜூலை 2020

ஸிந்துஜா  இன்று இருப்பவனுக்குப்  பொறாமையையும் நாளை வருபவனுக்கு மகிழ்ச்சியையும்  தருபவனே    கலைஞன். . . விரல்கள் வழியே  நினைவுகள்  வழிகின்றன.  மனதின் ரத்தம்  பரவி நிற்கிறது  கறுப்பும் வெளுப்புமாய். உலகு பேசுகையில்  கேட்காத செவிகள்  உலகு பார்க்கையில்  நிழல் தட்டி  மறைக்கும்  கண்கள்  உலகு உணர்கையில்  நிரம்பும் வெற்றிடம்  இவை மூன்றும்   தா.