1 – கங்கா ஸ்நானம் அறுபதினாயிரம் மனைவிகள் ஓர் அரசனுக்கு என்ற கதை பிரபலமான ஒன்று. அறுபதினாயிரம் குழந்தைகள் ஓர் அரசனுக்கு?இருந்திருக்கிறார்கள். சாகரா என்னும் அரசனுக்கு. (புராணத்தில் இந்த அறுபதினாயிரம் என்னும் எண் ஏன் வசீகரமாய் இருந்திருக்கிறது என்பதைத் தீர விஜாரிக்க வேண்டும்.) சாகராவிடம் உள்ள ஒரு குதிரையை இந்திரன் திருடிச் சென்று (அம்மாடி ! அகலிகையைத் திருடுகிறான், குதிரையைத் திருடுகிறான், இன்னும் வேறு ஏதாவது லிஸ்டில் சேர்க்க வேண்டுமா என்று தெரியவில்லை…) கபில முனிவரின் குடில் அருகே கட்டி வைக்க, குதிரையைத் தேடி வரும் அறுபதினாயிரம் புத்திரர்களும் […]
திறன் ஆய்வு அவருடன் அங்கிருந்த நான் கை குலுக்கவில்லை. ஆனால் அருகாமையில் நின்று கொண்டு பார்த்தவாறிருந்தேன். அவருக்கு மாறுகண். ஒற்றைக் கை. மூன்று கால்கள். உதய வணக்கம் கண்ணுக்கு நல்லது என்று கிழக்கே பார்த்துக் கும்பிட்டார். அது மேற்கே சரிந்த பார்வை போல் எனக்கென்னவோ தோன்றிற்று. ஒற்றைக் கையைப் பார்த்தபடி பெருமிதமாக உரைத்தாராவர். ‘ஒற்றைக் கைக்கு ஏது வலம்? ஒற்றைக் கைக்கு ஏது இடம் ? அன்னம் புசிக்க அதுவேதான். ஆய் கழுவவும் அதுவேதான்’. சிரித்தபடியே முன் சென்றார். […]
ஸிந்துஜா பல புத்தகங்களை எடுத்து நாம் படிக்கிறோம், அந்த நேரத்தைக் கழிக்கவென்று. சிலசமயம் சுவாரஸ்யம் மேலிட்டும். படித்து முடித்தபின் அவை புத்தக அலமாரிகளில் போய் மீதி வாழ்வைக் கழிக்கின்றன. அல்லது பேப்பர்காரரின் தராசை அடைகின்றன. ஆனால், சில புத்தகங்கள் ! அவற்றை நாம் மறுபடியும் படிக்கின்றோம். மறுபடியும். மறுபடியும். அவற்றின் அர்த்தம் நிரம்பிய வார்த்தைகளில் நமது தேடல் நிகழும் போது ஒவ்வொரு முறையும் வாசிப்பு அனுபவம் முற்றிலும் புதியதாக, ஆச்சரியத்தை உண்டாக்குவதாக, நேசிக்கத் தக்கதாக மாறி மாறி […]
ஸிந்துஜா சமீபத்தில் படித்த ஒரு புத்தகம்: “கு.ப.ரா.கதைகள்”. அடையாளம் வெளியீடு. உள்ளே நுழையும் போதே “ஆய்வுப்பதிப்பு” என்று முன்னெச்சரிக்கிறார்கள் ! கு.ப.ரா. கதைகளைத் தேடி அலைந்து கண்டுபிடித்துதொகுப்பை அளித்திருக்கும் திரு சதீஷ் பாராட்டுக்குரியவர். இக் கதைகள் படைப்பாளியின் கலையாழம் பற்றிய பிரக்ஞை , மனித மனங்களின் இடையே ஊடாடும் உணர்வுகளின் மீதான நுண்ணிய அவதானிப்பு, பெண்களிடம் கொண்ட எல்லையற்ற பரிவு ஆகியவற்றைக் கு.ப.ரா.கொண்டாடினார் என்று தெரிவிக்கின்றன. இவரைக் குருவாக வரித்துக் கொண்ட தி. ஜானகிராமன் ஒரு சந்தர்ப்பத்தில் எழுதினர்: “ராஜகோபாலனைப் போல ஒரு வரியாவது எழுத வேண்டும் என்று எனக்கு வெகுகால ஆசை. அது […]
1.பாழ் இந்தக் கதவுகள் தாமாகத் திறந்து தாமாக மூடிக் கொள்வன. வெட்ட வெளியில் அலையும் காற்று கதவின் மீது மோதி போர் தொடுப்பதில்லை. தானாகத் திறக்கும் போது சுதந்தரமாய் நுழைந்தால் போச்சு என்ற திடத்துடன். இந்தக் கதவுகளுக்குப் பின்னால் விரிந்து கிடக்கின்றன பெரிய கூடமும் அகலமான அறைகளும். அன்றொருநாள் தவழ்ந்த குழந்தையின் உடல் மென்மை கூடத்துத் தரையில் படுத்து கிடக்கிறது. சுவர்களைத் தட்டினால் முன்னர் மாலைகளில் பரவிய பெண்களின் கீச்சொலியும் சிரிப்பும் சத்தத்துடன் வருகின்றன. இரவென்றால் […]
பிராட்டி 1 கேவிக் கேவி அழ என் கதாநாயகிகளுக்கு நேரமில்லை. அவர்களை நிராகரித்தவர்களை நிராகரித்து விட்டு லைனில் காத்திருக்கும் நண்பர்களைக் காணவே நேரம் போதவில்லை அவர்களுக்கு. 2 ‘சிரிச்சால் போச்சு’ என்று மிரட்டினார்கள் ஏதோ பிரளயம் வந்து விடும் என. என் பெண்கள் எல்லோரும் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள். புன்னகை புரிகிறார்கள். உலகம் அதுபாட்டிற்கு நடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறது. 3 பெண்ணைக் காபந்து செய்வதாக நடிக்கிறார்கள் என்று நீ நினைக்கும் பிஜேபியை உனக்குப் பிடிக்கவில்லை என்றால் […]
கரோனா ஸிந்துஜா 1 எலிகள் குதித்து விளையாடுகின்றன தெருவில். வீட்டு வளைக்குள் நாம். 2 பசும்புல் தரை. பச்சைச் செடி, கொடி, மரம். முத்தமிடும் சுத்தக் காற்று. இரைச்சலற்ற தெரு. முற்றத்திலும் திண்ணையிலும் உரையாடும் குரல்கள். இழந்தவை இவையென நினைத்தவை அனைத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டு இழக்க முடியாததை எடுத்துச் சென்றது. […]
இயல்பு தெரியாததைத் தெரியாது என்று பெருமையுடன் சொல்வது குழந்தை மட்டும்தான். வருகை வரலாமாவென அனுமதி கேட்டுக் கொண்டு கதவைத் திறந்ததும் உள்ளே வருகிறது காற்று. வயது என்னும் கொடுங்கோலன் இப்போது எதையும் அடக்க முடிவதில்லை ஒண்ணுக்குப் போவதை ரெண்டுக்கு வருவதை கடைவாயில் வழியும் எச்சிலை. ஆனால் அடங்கிப் போய் விட்டது கவிதையில் உருகுவதும் கதையில் மயங்குவதும்.. ஒப்பனைகள் அப்பாவின் நிழல் கலைஞரின் கால் நெல்வேலிக் கைகள் காளானாய் முளைத்த கள்ளக் குரல்கள் இவையேதுமில்லா எனக்கெப்படிக் கிடைக்கும் உள்நாட்டு […]
ஸிந்துஜா “குட்டியக் கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு வரியா?” என்று அண்ணாமலை வீட்டுக்குள் வந்த குஞ்சம்மாவைப் பார்த்துக் கேட்டார். குஞ்சம்மா சுகுணாவின் வீட்டில் சமையல் வேலை பார்க்கிறாள். அண்ணாமலை சுகுணாவின் தந்தை. பெங்களூரில் இருக்கும் மகளைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று மதுரையில் இருந்து அன்று காலையில்தான் வந்திருந்தார். “ஆமாப்பா. எட்டரைக்கு அங்க இருக்கணும்ல. நீங்க டிபன் சாப்பிட வாரீங்களா?” என்று குஞ்சம்மா கேட்டாள். முன்தினம் சுகுணா அவளிடம் அவர் ஊரிலிருந்து வரப் போகிறார் என்று சொன்னவுடன் “பொங்கல் சட்டினி கொத்சு செஞ்சிடலாம்மா. அப்பாவுக்கு ரொம்பப் பிடிக்கும்” […]
1 சுடும் உண்மை இருளிலிருந்து இருளுக்குப் போக விரும்புவர்களை விளக்குகள் அணைப்பதில்லை. 2. ஞானம் உன் பேச்சு உன் காதிலேயே விழாத போது மற்றவரெல்லாம் எப்படிக் கேட்பர் உன் பேச்சை? 3 நிதர்சனம் என் நாவல்களைப் பாராட்டவும் விழா எடுக்கவும் ஒரு குழு தேவை. ஏஜன்ட்டுகள் விண்ணப்பிக்கவும். 4 இந்தியா எனது இந்தியா முதலாமவர் கொலைக்குற்றம் சாற்றப்பட்டு வக்கீல் ஆபீசில் இருந்தபடி ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரியைப் புரட்டி வார்த்தைகளைத் தேடுகிறார் வெளியே விட்டெறிய. இரண்டாமவர் ஜாமீன் ஜாக்கிரதையில் கேம்பிரிட்ஜ் அகராதியில் சாது […]