உஷாதீபன்

ஆத்மாவில் ஒளிரும் சுடர்

This entry is part 2 of 45 in the series 2 அக்டோபர் 2011

      பசுமையான, நெஞ்சை ஈர்க்கும் வண்ணம் கச்சிதமான அட்டைப் படத்தைக் கொண்ட அந்தப் புத்தகத்தைக் கண்ட போது, உடனேயே வாங்கிப் படித்துவிட வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டுப் போனது. அதிலும் சுரா அவர்களின் இளமைத் தோற்றம் எங்கள் குடும்பத்து சாயலாக, அப்படியே அச்சு அசலாக ஒத்து இருந்ததாக உணரவே, மனதில் சட்டென்று பரவிய ஈரமும் நெருக்கமும் என்னை அப்படியே புரட்டிப் போட்டு விட்டன.   திரு சுரா அவர்களின் துணைவியார் அவரோடு இணைந்த வாழ்க்கையின் சாராம்சங்களையும், […]

மாயங்களின் யதார்த்த வெளி

This entry is part 3 of 41 in the series 25 செப்டம்பர் 2011

ஜன்னலுக்கு வெளியே தலை நீட்டிக் கொண்டு தன் கைகளை உள்ளே விடத் துடிக்கும் அந்த மரத்தையே நோக்குகிறாள் நந்தினி. என்ன இது, என் கண்களையே என்னால் திறக்க முடியவில்லையே, பிறகு நான் எப்படிப் பார்க்கிறேன்? பயப்படாதே நான்தான் உன்னை எழுப்பினேன். நீ எழுப்பினாயா…எப்படி? வெளியே இருக்கும் நீ எப்படி என்னை எழுப்ப முடியும்? கண்களைத் திறக்காமல் நான் எப்படி உன்னைக் காண்கிறேன்….? என்னால் நீ உறங்குவதற்கு குளிர்ந்த காற்றை அளிக்க முடியுமென்றால் உன்னை என்னால் எழுப்ப முடியாதா? […]

அப்பா…! அப்பப்பா…!!

This entry is part 2 of 54 in the series 4 செப்டம்பர் 2011

எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் அப்பாவின் அடையாளம் வந்து தொற்றிக் கொள்கிறது. அவரை நினைவுபடுத்துவது தன்னின் ஒவ்வொரு செயல்களும்தான். அப்பாவைத் தவிர்க்கவே முடிவதில்லை. வாழ்க்கை முழுவதும் அவருடைய நினைவுகளை விட்டுத் தாண்டவே முடியாது என்றுதான் தோன்றியது. கூடவே இருந்து வழி நடத்துகிறார். அதுதான் உண்மை. அத்தனை எளிமையான வாழ்க்கையில் ஒரு மனிதன் தனக்கான அடையாளங்களாய் இவ்வளவையும் விட்டுச் சென்றிருக்க முடியுமா என்பதுதான் ஆச்சரியம். எந்த எதிர்பார்ப்புமற்ற மிக எளிமையான ஒருவனின் வாழ்க்கை தன்னைத்தானே நிலை நிறுத்திக் கொள்கிறது. […]

இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்

This entry is part 1 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

முதலில் இம்மாதிரி ஒரு தலைப்பில் ஆரம்பிப்பதே தவறு என்றுதான் தோன்றுகிறது. தலைப்பை வைத்தே அவரை யாருக்கும் தெரியாது என்பதை நாமே உறுதிப் படுத்துவதாக ஆகி விடுகிறது என்பதுதான் உண்மை. ஆனாலும் கூட இம்மாதிரி விஷயத்திற்கெல்லாம் இப்படித் தலைப்பிட்டுத்தான் சொல்லித் தொலைக்க வேண்டியிருக்கிறது. காரணம் நம் தமிழ்நாட்டின் நிலைமை அப்படி. அதாவது தமிழ்நாட்டிலுள்ள பல எழுத்தாளர்களின் நிலைமை என்று சொல்ல வந்தேன். கேரளா போன்ற மாநிலங்களில் ஒருவர் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தால் கூட அவரை ஊரறிய மேடை ஏற்றி […]

அம்மாவின் மனசு

This entry is part 1 of 46 in the series 5 ஜூன் 2011

அம்மாவிடம் கதைகள் கேட்பதென்றால் அலாதி விருப்பம்.       அந்த மாதிரி ஒரு அப+ர்வ சந்தர்ப்பம் எப்பொழுது வாய்க்கும் என்று காத்துக் கொண்டிருப்பான். வேறு யாரும் உடன் இருக்கக் கூடாது அப்போது. சொல்லப்படும் கதைகள் முழுவதும் இவனுக்காகவே. அத்தனையையும் இவனே கேட்டு மகிழ வேண்டும். மகிழ வேண்டுமா? அப்படியா சொன்னேன்…தவறு…தவறு. அம்மாவின் கதைகளில்தான் எங்கிருந்தது மகிழ்ச்சி? சந்தோஷமான வாழ்க்கையில் அங்கங்கே சோகமும், துக்கமும், இழையாடுவது உண்டு. ஆனால் வாழ்க்கையே சோகமென்றால்? கதையைச் சொல்லிக் கொண்டிருக்கையில் எங்காவது அம்மா சிரித்தாளா? எந்த […]