முன்னிலைப் பத்து எதிரே இருப்பவரை முன்னிலைப்படுத்திக் கூறுவதால் இப்பாடல் அமைந்த பகுதி இப்பெயர் பெற்றது. =====================================================================================1. முன்னிலைப்பத்து ”உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகன்குறை வேனில் பாதிரி விரிமலர்க் குவைஇத் தொடலை தைஇய மடவரல் மகளே! கண்ணினும் கதவ,நின் முலையே முலையினும் கதவநின் தடமென் தோளே! [கான்யாறு=காட்டாறு; அவிர்மணல்=கருமணல்; அகன்குறை=பரந்த நீர்த்துறை; குவைஇ=கூட்டிக் குவித்து; தொடலை=மாலை; கதவ=சினமுடையன] தன் ஊட்டாருக்குத் தெரியாம வந்த அவளக் கூட்டிக்கிட்டு அவன் போறான். அப்ப வழியில அவ சில பூக்களைப் பாக்கறா. அதெல்லாம் […]
தலைவன் பொருள்தேடப்பிரிந்து போனதால் தலைவி அவனையே நினைத்து வருந்துகிறாள். தனக்கு இன்பமும், தாய்மைப் பேறும் தந்த அவனையே எண்ணி உருகும் அவளின் துயரையே இப்பகுதிப் பாடல்கள் விளக்குவதால் இப்பெயர் பெற்றது. ==================================================================================== தலைவி இரங்கு பத்து—1 அம்ம வாழி! தோழி! அவிழ்இணர்க் கருங்கால் மராஅத்து வைகுசினை வான்பூ அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள இனிய கமழும் வெற்பின் இன்னாது என்பஅவர் சென்ற ஆறே! [அவிழ்இணர்=முறுக்கவிழ்ந்த பூக்கள் விளங்கும் பூங்கொத்து; கால்=அடிமரம்; மராஅம்=கடம்ப மரம்; வான்பூ=வெண் பூ; […]
தலைவன் பொருள்தேடப்பிரிந்து போனதால் தலைவி அவனையே நினைத்து வருந்துகிறாள். தனக்கு இன்பமும், தாய்மைப் பேறும் தந்த அவனையே எண்ணி உருகும் அவளின் துயரையே இப்பகுதிப் பாடல்கள் விளக்குவதால் இப்பெயர் பெற்றது. ==================================================================================== தலைவி இரங்கு பத்து—1 அம்ம வாழி! தோழி! அவிழ்இணர்க் கருங்கால் மராஅத்து வைகுசினை வான்பூ அருஞ்சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள இனிய கமழும் வெற்பின் இன்னாது என்பஅவர் சென்ற ஆறே! [அவிழ்இணர்=முறுக்கவிழ்ந்த பூக்கள் விளங்கும் பூங்கொத்து; கால்=அடிமரம்; மராஅம்=கடம்ப மரம்; வான்பூ=வெண் பூ; […]
’இடைச்சுரம்’ என்பது இடைவழிப்பயணத்தைக் குறிக்கும். பொருள் தேடச் செல்லும் தலைவனுக்குப் இடைவழிப்பயணத்தின் போது தலைவியின் நினைவு வருவதும் அதனால் அவன் வருந்துவதும் இயல்பானதாகும். இப்பகுதியில் உள்ள பாடல்கள் அனைத்தும் இடைவழியில் அவன் செல்லும்போது ஏற்படும் நினைவுகள் பற்றியே இருப்பதால் இப்பெயர் பெற்றது. ===================================================================================== இடைச்சுரப் பத்து—1 உலறுதலைப் பருந்தின் உளிவாய்ப் பேடை அலறுதலை ஓமை அங்கவட்டு ஏறிப் புலம்புகொள விளிக்கும் நிலம்காய் கானத்து மொழிபெயர் பல்மலை இறப்பினும் ஒழிதல் செல்லாது ஒந்தொடி குணனே. [உலறு=காய்ந்த; உளிவாய்ப் […]
செலவுப் பத்து செலவுன்னா ஒரு எடத்துலேந்து வேற எடத்துக்குப் போறதுன்னு பொருள். இந்தப் பகுதியில இருக்கற பத்துப் பாட்டுகளும் அந்தச் செலவைப் பத்திப் பேசறதால இந்தப் பெயர் வந்தது. ================================================================================= செலவுப் பத்து—1 வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் ஆர்இடைச் செல்வோர் ஆறுநனி வெரூஉம் காடு இறந்தனரே காதலர் நீடுவர் கொல்என நினையும் என் நெஞ்சே! `[கொய்யுநர்=பறிப்பவர்; பஞ்சுரம்=பாலைநிலப் பண்; ஆர்-அரிய; விளிப்பினும்=பாடினாலும்; ஆறு=வழி; வெரூஉம்=அஞ்சும்; இறந்தனர்=கடந்தனர்] அவன் பிரிஞ்சு போனதால அவ ரொம்பவும் வருந்திக் கெடக்கறா. […]
பாலை என்பது தனித்திணையாக கூறப்படவில்லை. குறிஞ்சியும், முல்லையும் காலத்தின் வெம்மையால் தம் தன்மையை இழந்து கோடையின் கொடுமை வாய்ப்பட்டால் பாலையாகும். பிற்காலத்தில் நெய்தலும் அவ்வாறு ஆகும் என்றும் கூறி உள்ளனர். தலைவனைத் தலைவி பிரிந்திருத்தல் பாலை நிலத்துக்குரிய பொருளாகும். பாலைத்திணைக்குரிய நூறு பாடல்களையும் ஓதலாந்தையார் பாடி உள்ளார். ஓதல் என்பது இவரின் ஊர்ப்பெயராக இருக்கலாம் என ஒரு சாராரும், ஓதல் என்பது இவரது தொழில் அதாவது ஓதலாகிய அறிவுத் தொழிலைக் குறிக்கும் என ஒரு சாராரும் கூறுகின்றனர். […]
மஞ்ஞை என்றால் மயில் என்று பொருள். இப்பகுதியில் உள்ள பத்துப் பாடலிலும் மயில் பயின்று வருதலால் இப்பகுதிக்கு மஞ்ஞைப் பத்து எனப் பெயர் வந்தது. ===================================================================================== மஞ்ஞைப் பத்து—1 மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் துறுகல் அடுக்கத் ததுவே பணைத்தோள், ஆய்தழை நுடங்கும் அல்குல் காதலி உறையும் நனிநல் ஊரே [ஆல=ஆட; குடிஞை=பேராந்தை; இரட்டும்=மாறி மாறி ஒலிக்கும்; துறுகல்=குண்டுக்கல்; அடுக்கம்=பக்கமலை; பணை=பருத்த; தழை=தழையாடை; நுடங்கும்=அசையும்; உறையும்=தங்குகின்ற] கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யப் போறேன்னு அவகிட்ட சொல்லிட்டு அவன் ஊருக்குப் […]
இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் கிளிகள் தொடர்புபடுத்தப் பட்டுள்ளதால் இப்பகுதி கிள்ளைப் பத்து என வழங்கப்படுகிறது. ===================================================================================== கிள்ளைப் பத்து—1 வெள்ள வரம்பின் ஊழி போகியும் கிள்ளை வாழிய, பலவே! ஒள்ளிழை இரும்பல் கூந்தல் கொடிச்சி பெருந்தோள் காவல் காட்டி யவ்வே [வெள்ளம்=நூறாயிரம்; கொடிச்சி=குறிஞ்சி நிலப்பெண்; அவ்=அவை] அவ அவளோட கூட்டத்தோட தெனைப்புனம் காக்க வரா. அதால அவன் அங்க அவளைப் பாத்துப் பேச வாய்ப்பு ஏற்படுத்தியது கிளிதான? அதால அவன் கிளியப் பத்திச் சொல்ற பாட்டு […]
இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் குரங்கு பயின்று வருதலால் இப்பகுதி குரக்குப்பத்து என்னும் பெயர் பெற்றது. இப்பாடல்களில் ஆண்குரங்கைக் கடுவன் என்றும், பெண் குரங்கை மந்தி என்றுன் குரங்குக் குட்டியைப் பறழ் அல்லது குட்டி என்றும் கூறப்படிருப்பதைக் காண முடிகிறது. ===================================================================================== குரக்குப் பத்து—1 அவரை அருந்த மந்தி பகர்வர் பக்கின் தோன்றும் நாடன் வேண்டின் பசுப்போல் பெண்டிரும் பருகுவன் தொல்கேள் ஆகலின் நல்குமால் இவட்கே! [அருந்த=தின்ற; பகர்வர்=வணிகர்; பங்கு=பை தொல்=பழமை; கேள்=நட்பு; தொல்கேள்=பல பிறவிகலிலும் தொடர்ந்த […]
குன்றக் குறவன் பத்து இப்பகுதியில் உள்ள பத்துப் பாடல்களிலும் குன்றக் குறவன்’ என்னும் பெயர் தொடர்ந்து வருவதால் இப்பகுதிக்குக் குன்றக்குறவன் பத்து என்று பெயர் வந்தது. குன்றக் குறவன் என்பவர் குன்றிலே பிறந்து பின் நிலம் சென்று வாழாமல் குன்றிலேயே வாழ்பவராவர். ============================================================================ குன்றக் குறவன் பத்து—1 குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி நுண்பல் அழிதுளி பொழியும் நாட! நெடுவரைப் படப்பை நும்மூர்க் கடுவரல் அருவி காணினும் அழுமே [ஆர்ப்பின்=ஆரவாரம்; எழிலி=மேகம்; அழிதுளி=அழிக்கின்ற மழை; படப்பை=தோட்டம்; கடுவரல்=விரைவாக […]