தான் எடுத்துக்கொண்ட நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் மனப் போக்கே ‘வெறி’ என்று சொல்லப்படும். தங்களால் தீர்க்க முடியாத வாழ்க்கைச் சிக்கல்கள் ஏற்படும்போது குறிஞ்சி நில மக்கள் தங்கள் நிலத் தெய்வமான முருகனுக்குப் படையலிட்டு வழிபடுவர். தெய்வமானது பூசாரியின் வாயினால் அருள்வதை வெறியாட்டு என்பர். ‘வெறி’ என்பதற்கு மணம் என்றும் தன்னை மறந்த நிலை என்றும் பொருள் உண்டு. வெறியாட்டில் இவை இரண்டும் கலந்து காணப்படும். இப்பகுதியின் பாடல்களில் முருகனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்த மூத்தோர்கள் ஏற்பாடு செய்தலும், […]
இப்பகுதில் உள்ள பத்துப் பாடல்களிலும் ‘தெய்யோ’ என்னும் அசைச்சொல் இறுதியில் வருவதால் இப்பகுதி தெய்யோப் பத்து என வழங்கப்படுகிறது. துன்பத்தில் உழன்று மீண்டவனை ‘நீ எப்படித் தாங்கினையோ தெய்ய’ என்பது போலப் பொருள் கொள்ளலாம். தெய்யோ என்பது பொருளில்லாத அசைச்சொல்லாகும் ==================== தெய்யோப் பத்து—1 யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப! இரும்பல் கூந்தல் திருந்திழை அரிவை திதலை மாமை தேயப் பசலை பாயப் பிரிவு தெய்யோ? [யாங்கு=எவ்வாறு; வல்லுநையோ=வல்லவன் ஆயினையோ?; ஓங்கல்=மலை; வெற்ப=மலைநாட்டுத் தலைவன்; இழை=அணிகலன்; திதலை= […]
அம்ம வாழிப் பத்து இப்பகுதியின் பத்துப் பாடல்களும் ‘அம்ம வாழி’ எனத் தொடங்குவதால் இப்பகுதி “அம்ம வாழிப் பத்து” என்று பெயர் பெற்றது. ===================================================================================== அம்ம வாழி, தோழி! காதலர் பாவை அன்னஎன் ஆய்கவின் தொலைய, நன்மாமேனி பசப்பச் செல்லல் என்பதம் மலைகெழு நாட்டே! [பாவை=தெய்வப் பாவை; ஆய்கவின்=ஆய்ந்த அழகு; தொலைய=நீங்க; மாமேனி=மாந்தலிர் போன்ற உடல்] ”கொஞ்ச நாள் பொறுத்துகிட்டு இரு; கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செஞ்சுட்டு வரேன்”னு சொல்லிட்டு அவன் போறான்; அப்ப அவனும் கேக்கற […]
இப்பகுதியின் பாடல்கள் எல்லாம் ‘அன்னாய்’ என்னும் விளிச்சொல்லோடு முடிவதால் இப்பகுதி அன்னாய்ப் பத்து எனப் பெயர் பெறுகிறது. ===================================================================================== அன்னாய்ப் பத்து—1 “நெய்யொடு மயக்கிய உழுந்துநூற் றன்ன வயலையஞ் சிலம்பின் தலையது செயலையம் பகைத்தழை வாடும் அன்னாய்! [மயக்கிய=கலந்து பிசைந்த; நூற்றன்ன=நூல் திரித்தல் போல் கையால் திரித்தல்; சிலம்பு=மலை; தலையது=உச்சியில்; வயலை=வயலைக் கொடி; செயலை=அசோகம்; தழை=தழையாடை] அவன் அவளை ஒரே ஒரு தடவை சந்திச்சான். அப்பறம் பாக்கவே முடியல; தோழி மூலமா அவளப் பாக்க நெனக்கறான். அதால […]
ஐங்குறு நூறு——குறிஞ்சி .மலையும் மலைசார்ந்த பகுதியும் குறிஞ்சி எனப்படும். இங்கு வாழ்பவர் குறவர் மற்றும் குறத்தியர் எனப்படுவர். வேட்டையாடுதலும் தேனெடுத்தலும் இவர்கள் தொழிலாகும். ஐங்குறுநூற்றில் குறிஞ்சிப்பகுதியைப் பாடியவர் கபிலர் ஆவார் குறிஞ்சிக்குக் கபிலர் என்றே இவரைச் சிறப்பித்துக் கூறுவர். சங்க நூல்களில் இவர் பாடிய பாடல்கள் பல காணப்படுகின்றன. இவர் மதுரைக்குக் கிழக்கில் உள்ள வாதவூரில் பிறந்தார் என்று கூறுவர். பாரி இறந்த பின் அவனுடைய மகள்களை இவர் திருக்கோயிலூருக்கு அழைத்துச் சென்று அங்கு ஆண்ட மலையமான் […]
தருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத் தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும் மற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ அருக்கனென முடிவிளங்க அழகு வீற அண்டர்கள் பூமழை பொழிய அடியார் போற்ற செருக்கி விளையாடி உகந்து ஆடிர் ஊசல் சீரங்கநாயகியார் ஆடிர் ஊசல் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பெயரரான கோனேரியப்பனையங்கார் அருளிய “சீரங்கநாயகியார் ஊசலின் எட்டாம் பாடல் இதுவாகும். சீரங்கநாயகியாரைச் சூழ்ந்துள்ளோர் இப்பாடலில் குறிக்கப்படுகின்றனர். முதலில் பத்துவகைக் கொத்தினர் காட்டப்படுகின்றனர். உடையவர் சீரங்கம் […]
தருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத் தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும் மற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ அருக்கனென முடிவிளங்க அழகு வீற அண்டர்கள் பூமழை பொழிய அடியார் போற்ற செருக்கி விளையாடி உகந்து ஆடிர் ஊசல் சீரங்கநாயகியார் ஆடிர் ஊசல் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பெயரரான கோனேரியப்பனையங்கார் அருளிய “சீரங்கநாயகியார் ஊசலின் எட்டாம் பாடல் இதுவாகும். சீரங்கநாயகியாரைச் சூழ்ந்துள்ளோர் இப்பாடலில் குறிக்கப்படுகின்றனர். முதலில் பத்துவகைக் கொத்தினர் காட்டப்படுகின்றனர். உடையவர் சீரங்கம் […]
பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரனான கோனேரியப்பனையங்கார் தாம் அருளிச் செய்த “சீரங்க நாயகியார் ஊசல்” நூலின் ஏழாம் பாடலில் அடியார்கள் திரண்டு வந்து நாயகியாரை வாழ்த்தியதைச் சொல்கிறார். இதற்கு முந்தைய ஆறாம் பாசுரத்தில் ஆழ்வார்கள் எல்லாரும் வந்திருந்து சீரங்கநாயகியாரைப் போற்றியதைப் பாடினார். நாதமுனி தவமாக மாறன் பாட நயந்தெழுத வேதன்எழுத் தழிந்த வாறும் போதன் எதிராசன் வளையாழி மண்ணோர் புயத்தெழுதக் கூற்றினெழுத் தழிந்த வாறும் ஏதமில் கூரத்தாழ்வான் பதக்குண் டென்றே எழுதிட வாதியர்கள் எழுத்தழிந்த வாறும் தீதில் […]
02-02-18 : இன்றுதான் பயணம் தொடங்குகிறது. காலை 6.45. மணிக்கே எங்கள் வழக்கமான தானி [ஆட்டோ] ஓட்டுநர் மனோகர் வீட்டிற்கு வந்து விட்டார். எம்மைக் கொண்டு போய் திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையதில் சேர்த்து விட்டார். நடைமேடை வரையில் எம் பைகளையும் சுமந்துகொண்டு வந்து வைப்பது அவரின் வழக்கம். வழக்கம் போல திருச்செந்தூரிலிருந்து சென்னை வரை செல்லும் விரைவு வண்டி 7.40 மணிக்கு வந்தது. நேற்றும் அதற்கு முன் நாளும் அது 9 மணிக்குதான் வந்தது. எங்களுக்கு முன்பதிவு […]
”வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப் பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத்துத் திருமாலால் எங்கும் திருவருள்பெற்[று] இன்புறுவர் எம்பாவாய்” ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் 30-ஆம் பாசுரமான இதுதான் இந்நூலின் இறுதிப்பாசுரமாகும். பகவான் வங்கக் கடல் கடைந்த விருத்தாந்தம் இங்கு சொல்லப்படுகிறது. ஆயர்குலச் சிறுமிகளைப் பார்த்துக் கண்ணன் கேட்கிறான். […]