“கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் அறிவொன்று மில்லாத ஆய்க்குலத்[து] உன்றன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம் குறைவொன்று மில்லாத கோவிந்தா உன்றன்னோ[டு உறவேல் நமக்கிங்[கு] ஒழிக்க ஒழியாது அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே இறைவாநீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்” இது ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் இருபத்தெட்டாம் பாசுரம் ஆகும். கடந்த இரு பாசுரங்களில் ஆயர்குலப் பெண்கள் தாங்கள் நோன்பு நோற்பதற்கான உபகரணங்களையும் சில சன்மானங்களையும் பெற்றார்கள். “இவர்கள் ஊராருக்காக […]
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய் இது திருப்பாவையின் இருபத்தேழாம் பாசுரமாகும். இது சர்க்கரைப் பொங்கல் பாசுரமாகும். வாசித்தாலே தித்திக்கும் பாசுரமாகும். இந்த மார்கழி 27-ஆம் நாளில்தான் கூடாரவல்லிப் பண்டிகை […]
26. மாலே மணிவண்ணா மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான் மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப்பா டுடையனவே சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே கோல விளக்கே கொடியே விதானமே ஆலின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய் இது திருப்பாவையின் இருபத்தாறாம் பாசுரம் ஆகும். இப்பாசுரத்திற்குப் பூர்வாச்சாரியார்கள் மிகச்சிறப்பான அவதாரிகை அருளியிருக்கிறார்கள். கண்ணன் இச்சிறுமிகளிடம் பேசுகிறானாம். ”சிறுமிகளே! வியாசர் ’சாரீரகமீமாம்ஸை’ என்று பெரிய சாஸ்திரம் எழுதினார். […]
ஒருத்தி மகனாய்ப் பிறந்தோ ரிரவில் ஒருத்தி மகனா யொளித்து வளரத் தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் இது திருப்பாவையின் இருபத்தைந்தாவது பாசுரமாகும். இப்பாசுரம் முழுக்க முழுக்க கிருஷ்ணாவதாரம் பற்றிப் பேசுகிறது. “கடந்த பாசுரத்தில் என்னை மங்களாசாசனம் செய்தீர்கள்; அது சரி, பறைகொள்வான் என்று சொன்னீர்களே! அது என்ன” என்று […]
அன்றிவ் வுலக மளந்தா யடிபோற்றி சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகட முதைத்தாய் புகழ் போற்றி கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய் இது திருப்பாவையின் இருபத்து நான்காம் பாசுரமாகும். கடந்த பாசுரத்தில் ஆய்ச்சிகள் ”இங்ஙனே போந்தருளி” என்று வேண்டினார்கள். “இரண்டு படைகளுக்கும் நடுவே கொண்டுபோய் என் தேரை […]
நெய்தல் என்பது ஐவகைத் திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடமும்தான் நெய்தல் எனப்படும். அங்கு தலைவனும் தலைவியும் ஒருவரை ஒருவர் நினைந்து இரங்கியிருப்பர். இப்பகுதில் உள்ள பத்துப் பாடல்களும் அவர்கள் இரங்கி இருக்கும் நிலையினைக் கூறுவதால் இப்பகுதி நெய்தல் பத்து எனப்பட்டது. நெய்தல் என்பது ஒருவகைத் தாவரமாகும். அது நீரில் வாழக் கூடிய கொடிவகையைச் சார்ந்தது. அதன் மலர்கள் நீல நிறம் உடையவை. இது விடியலில் மலர்ந்து, மாலையிலே கூம்பும் தன்மையதாகும். நெய்தற் பத்து—1 […]
தொண்டி என்பது சேர நாட்டின் கடற்கரை நகரமாகும். இது தற்போது குறும்பொறை நாட்டில் ஒரு சிற்றுராய்க் காட்சியளிக்கிறது என்பர். ஒரு சிலர் மலைநாட்டில் உள்ள இந்நாளைய ஆலப்புழைதான் தொண்டி என்பர். இராமநாதபுர மாவட்டத்திலும் தொண்டிப் பட்டினம் உள்ளது. இப்பகுதியின் பத்துப் பாடல்களிலும் தொண்டி சிறப்பிக்கப்படுவதால் இப்பகுதி தொண்டிப் பத்து எனப்பட்டது. ஐங்குறு நூறு நூலில் இப்பகுதிக்கு ஒரு சிறப்பு உள்ளது. இப்பகுதிப் பாடல்கள் எல்லாம் அந்தாதித் தொடையாக அமைந்துள்ளன. தொண்டிப் பத்து—1 திரையிமிழ் இன்னிசை அளைஅ அயலது […]
வைரமுத்து எழுதிய “தமிழை ஆண்டாள் கட்டுரை தினமணி [08-01-18] இல் படித்தேன். நம்பிக்கையில்தான் ஒவ்வொருவரும் வாழ்வை நடத்தி வருகிறோம். அதன் அடிப்படையில் ஆண்டாள் கூறும் செய்தியாக நம்பிக்கை மீது நம்பிக்கை வைப்போம் என அவர் கட்டுரையைச் சிறப்பாகவே முடித்துள்ளார். ஆனால் இறைவனையும் இயற்கை இறந்த நிகழ்வுகளையும் கழித்துப் பார்க்க வேண்டும் என்கிறார். ஒரு நூலை அது எழுந்த காலத்தின் சூழலை வைத்துத்தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும் இப்போதைய கண்ணாடியை அணிந்து பார்த்தல் தகாது. நாலாயிரத் திவ்யபிரபந்த்த்தின் ஒருகூறான […]
சிறுவெண்காக்கை ஐங்குறுநூற்றில் சிறுவெண்காக்கைப் பத்து என ஒரு பகுதி உண்டு. சிறுவெண்காக்கை என்பது நீர்ப்பறவைகளில் ஒன்றாகும். இது நீர்க்கோழி போல நீர்நிலைகளில் மீன்பிடித்து உண்ணும். இதனுடல் முழுதும் காக்கைபோலக் கறுத்திருக்கும். கழுத்தின் கீழ்ப்புறம் மாத்திரம் சிறிது வெளுத்துக் காணப்படுவதால் இது சிறுவெண்காக்கை எனப்படுகிறது. இது நம் நாட்டிலும், மலாயா, சுமத்திரா, ஜாவா முதலிய நாடுகளிலும் காணப்படுகிறது. தமிழ் நாட்டில் ஐப்பசி முதல் நான்கு மாதங்களுக்கு நீர்நிலைகளில் காணப்படும். பிற காலங்களில் வேறு நாடுகளுக்குச் சென்று விடும். நீர்நிலைகளில் […]
வெள்ளாங் குருகு என்னும் பறவையைப் பற்றிய செய்திகள் இப்பத்துப் பாடல்களிலும் பயின்று வருதலால் இப்பகுதி வெள்ளாங்குருகுப் பத்து என்று பெயர் பெற்றது. வெள்ளாங்குருகு என்பது நீர்ப்பறவை இனத்தைச் சேர்ந்தது. வயிற்றுப்புறத்தில் வெண்மை நிறமும், முதுகுப்புறம் சாம்பல் நிறமும் கொண்ட பறவை இது. ஆணை விடப் பெண் வேறு சில வண்ணங்களுடன் அழகாக இருக்கும். பெண்குருகின் வாலில் 26 முதல் 28 இறகுகளும், ஆண் பறவையின் வாலில் 14 முதல் 16 இறகுகளும் இருக்கும். நிலத்தில் இருக்கும்போது இது […]