வளவ. துரையன் [ புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தில் 7—12—2014-இல் ஆற்றிய சொற்பொழிவின் கட்டுரை வடிவம் ] ”பாரதபூமி பழம்பெரும் பூமி—நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் “ என்று பாடினார் மகாகவி பாரதியார். பழம்பெருமை என்பது நாட்டின் பழமையைக் குறிக்கும்அந்தப் பழமையைக் காட்டப் பல சான்றுகளாகக் கலைச்செல்வங்கள் இன்றும் நிலைகொண்டுள்ளன. அவை நம் நாட்டின் பழமையைக் காட்டுவதோடு நம் பண்பாட்டைக் காட்டும் ஆடிகளாக விளங்குகின்றன. அவற்றில் சில மட்டுமே இங்கு காட்டப்படுள்ளன. முதலில் நாணயங்கள் பற்றிக் காண்போம். […]
[ புதுச்சேரி தொண்டை மண்டல நாணயவியல் கழகத்தில் 7—12—2014-இல் ஆற்றிய சொற்பொழிவின் கட்டுரை வடிவம் ] ”பாரதபூமி பழம்பெரும் பூமி—நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் “ என்று பாடினார் மகாகவி பாரதியார். பழம்பெருமை என்பது நாட்டின் பழமையைக் குறிக்கும்அந்தப் பழமையைக் காட்டப் பல சான்றுகளாகக் கலைச்செல்வங்கள் இன்றும் நிலைகொண்டுள்ளன. அவை நம் நாட்டின் பழமையைக் காட்டுவதோடு நம் பண்பாட்டைக் காட்டும் ஆடிகளாக விளங்குகின்றன. அவற்றில் சில மட்டுமே இங்கு காட்டப்படுள்ளன. முதலில் நாணயங்கள் பற்றிக் காண்போம். பண்டைக் காலத்தில் […]
வளவ. துரையன் அடர்ந்த காட்டினுள் புகுந்த வேடர்கள் அக்காட்டில் இருக்கும் விலங்கினங்களை வேட்டையாடுகிறார்கள். அவர்கள் பார்வையில் ஓர் ஆண் மானும் பெண் மானும் பட்டு விட்டன. உடனே அவற்றை நோக்கி அவர்கள் அம்பு எய்தார்கள். அம்பு பெண் மான் மேல் தைத்து உள்ளே புகுந்தது. ஆண் மான் தப்பித்து அங்கிருந்த ஓர் ஓடையைத் தாண்டி மறு கரைக்குப் போய் விட்டது. பெண் மானும் தைத்த அம்புடன் அக்கரைக்கு ஓடும்போது வேறு சிலர் அவ்வழியே வந்து விட்டார்கள். அவர்கள் […]
சீட்டாட்டம் எங்காவது நடப்பதை வழியில் பார்த்தால் சிலர் அப்படியே அங்கு நின்று விடுவார்கள். அவர்கள் ஆடாவிட்டாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற பைத்தியம் அவர்கள். இந்த சீட்டுப் பைத்தியங்களைப் போலவே சில கிரிக்கெட் பைத்தியங்களும் உண்டு. கிரிக்கெட் ஆடினாலோ அல்லது அதைப் பற்றி யாராவது பேசிக் கொண்டிருந்தாலோ அவை அப்படியே அவற்றில் மூழ்கிப் போய் விடும். அதுபோல குமார் ஒரு ஜோசியப் பைத்தியம். யாராவது கைரேகை பார்ப்பவர்களோ அல்லது கிளி ஜோசியக்காரர்களோ அவர்கள் தெருவின் வழியாய் வந்து விட்டால் […]
வளவ. துரையன் இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார். எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்று மாருதி கூறினார். அண்ணனுக்கு மொழிந்த நீதிகள் பயனளிக்காததால் வீடணன் இலங்கையை விட்டு நீங்கி இராமபிரானிடம் அடைக்கலமானார். பின்னர் சுக்ரீவனும், அனுமனும், வீடணனும் உடன் வர இராம இலக்குவர் இருவரும் இலங்கையை அடைய வேண்டி கடற்கரையை அடைந்தனர். […]
ரஸ்கின்பாண்ட் (மரங்களின் மரணம் – ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் : வளவ. துரையன் ) ஒரு குளிர்காலத்தில் ‘ மேப்பில்வுட் ’ மலைப்பக்கத்தில் இருந்த அமைதியும் நிதானமும் எப்பொழுதும் இல்லாதபடி மறைந்துவிட்டன. அரசாங்கம் மலைகளுக்குப் புதிய சாலை அமைக்கத் தீர்மானித்து விட்டது. பொதுப்பணித்துறையானது வீட்டின் வலப்பக்கத்தில்,நான் காட்டை நன்றாகப் பார்க்க வசதியாய் இருந்த ஜன்னலிலிருந்து ஆறு அடி தூரத்தில் அமைத்தால் பொருத்தமாக இருக்கும் என எண்ணியது. என்னுடைய குறிப்புப் புத்தகத்தில் நான் எழுதினேன்: அவர்கள் பல மரங்களை வெட்டிவிட்டார்கள். முதலில் […]
இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார். எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்று மாருதி கூறினார். அண்ணனுக்கு மொழிந்த நீதிகள் பயனளிக்காததால் வீடணன் இலங்கையை விட்டு நீங்கி இராமபிரானிடம் அடைக்கலமானார். பின்னர் சுக்ரீவனும், அனுமனும், வீடணனும் உடன் வர இராம இலக்குவர் இருவரும் இலங்கையை அடைய வேண்டி கடற்கரையை அடைந்தனர். அப்பொழுது வீடணன் “பெருமானே, […]
வளவ. துரையன் திருக்கனூருக்கு ஒரு பட்டிமன்றம் நடத்தப் போயிருந்தோம். 1970 முதல் 1980 முடிய வாராவாரம் ஞாயிறு மாலைகளில் பட்டி மன்றம்தான் பேசுவோம். பேசுபவர்கள் ஏழு பேர் என்றால் எங்களுடனேயே கேட்பதற்கும் நான்கைந்து பேர் வருவார்கள். வளவனூர் கடைத்தெருவில் ஞாயிறு மாலை நான்கு மணிக்கு எங்கள் கூட்டத்தைப் பார்ப்பவர்கள் சிரித்துக் கொண்டே “ஜமா இன்னிக்கு எந்த ஊரு போவுது?” என்று கேட்பார்கள். அப்பொழுது இலக்கிய வெறி பிடித்து அலைந்த காலம்; எல்லாரும் பேச்சுப் பயிற்சி பெற்ற காலம். […]
தயரதன் மதலையாய் மண்ணுலகில் வந்து தோன்றிய இராமன் தந்தையின் ஆணை என்று தாய் சொன்ன வார்த்தை கேட்டு தரணி தன்னைத் தீவினை என்று நீக்கி வனம் புகுந்தான். அங்கே மாயமானைப் போகச் செய்து இலங்கை வேந்தன் இராவணன் சீதையைத் தூக்கிச் சென்றான். மாயமானை வதம் செய்து விட்டு வந்த இராமன் இலக்குவனுடன் சேர்ந்து பிராட்டியைத் தேடும் போது வழியில் ஜடாயுவின் மூலம் நடந்தவை அறிந்தான் அனுமனின் வழியாய் சுக்ரீவனின் நட்பைப் பெற்று வாலியை வதம் செய்து […]
பள்ளியின் ஓய்வறையில் உட்கார்ந்திருந்த பொழுது ஒரு மாணவன் வந்து நின்றான். அவனைப் பார்த்த போது சொன்னான். “என் தமிழ்ப் புத்தகத்தைக் காணோம் ஐயா; ஆறுமுகம்தான் எடுத்திருக்கணும்” ”எப்படி சொல்ற?” என்று கேட்டேன். ”என் பை பக்கத்துல அவன்தான் ஒக்காந்திருந்தான். நான் வெளியே போயிட்டு வந்தா புத்தகத்தைக் காணோம்.” ”சரி; போய் ஆறுமுகத்தை அழைத்து வா; கேட்போம்” என்றேன். அழைத்து வரப்பட்ட ஆறுமுகம் தான் எடுக்கவே இல்லை என்று சாதித்தான். ஆனால் சந்தர்ப்ப சூழல்களால் அவன் […]