இருட்டுப் போர்வையைத் தரை போர்த்திக் கொள்கிறது எம்மை அணைக்க யாரும் இல்லையென இலைகள் கேவின வியர்வை ஆறுகள் மறையும் மந்திரம் தேடினர் மாந்தர்கள். அணு அனல் நீரால் வரும் சக்தி வாசல்களும் அனல்கள் கக்கின ஒரே ஓர் அசைவு போதுமென உச்சிக் கழியில் கொடி கூக்குரலிட்டது புகை போக்கிகளோடு நேர்க்கோடொன்றாய் புகையும் நிற்கிறது கடைசியில் வந்த காற்று கவிதையில் அடங்காத சொல்லெனத் தனியே போனது
வளவ. துரையன் புள்ளின்வாய்கீண்டானைப்பொல்லாஅரக்கனைக் கிள்ளிக்களைந்தானைக்கீர்த்திமைபாடிப்போய் பிள்ளைகளெல்லாரும்பாவைக்களம்புக்கார் வெள்ளிஎழுந்துவியாழமுறங்கிற்று புள்ளுஞ்சிலம்பினகாண்போதரிக்கண்ணினாய் குள்ளக்குளிரக்குடைந்துநீராடாதே பள்ளிக்கிடத்தியோபாவாய்நீநன்னாளால் கள்ளந்தவிர்ந்துகலந்தேலோரெம்பாவாய். இஃதுஆண்டாள்நாச்சியார்அருளிச்செய்ததிருப்பாவையின்பதின்மூன்றாம்பாசுரம். இப்பாசுரத்தில்போதரிக்கண்ணினாய்’ என்றுகூப்பிடுவதிலிருந்துதன்கண்ணழகைக்கொண்டுகர்வம்கொண்டும்கிருஷ்ணன்தான்நம்மைத்தேடிவரவேண்டுமேதவிரநான்அவனைத்தேடிச்செல்லவேண்டியதில்லைஎன்றும்உள்ளேகிடப்பவளைஎழுப்புகிறார்கள். கடந்தபதின்மூன்றாம்பாசுரத்தில் ’மனத்துக்கினியான்என்றுஇராமன்பெருமைபாடினீர்களே’என்றுஅவள்கேட்கிறாள். உடனேஅவர்கள்முன்பு’இராமனையும்சொன்னோம்; கண்ணனையும்சொன்னோம்இப்போதுஇருவரையும்சேர்த்துப்பாடுகிறோம்’என்கிறார்கள். மேலும்கண்ணனும்இராமனும்ஒன்றுதானே? யசோதைகண்ணனைஅழைக்கையில்இராமனைக்கூப்பிடுவதுபோல்; ”வருகவருகவருகவிங்கேவாமனநம்பீ வருகவிங்கேகரியகுழல்செயவாய்முகத்தென் காகுத்தநம்பீவருக’ என்றுதானேஅழைக்கிறாள். ஆயர்சிறுமிகள் தங்கள்சிற்றிலைக்கண்ணன்சிதைக்கவருகையில், “சீதைவாயமுதம்உண்டாய்எங்கள்சிற்றில்சிதையேல்” என்றுதானேஇராமன் பெயர்சொல்லிவேண்டுகிறார்கள். பொய்கையில்வஸ்திராபகரணம்செய்தபோதுகோபியர்கள் “இரக்கமேன்ஒன்றும்இலாதாய் இலங்கைஅழித்தபிரானே’ என்றுதானேமுறையிடுகிறார்கள். எனவேநாம்இருவரையும்இணைத்துப்பாடுவோம்எனஎண்ணுகிறார்கள். அதனால்தங்கள்குலதெய்வமானகண்ணனைமுதலில் ‘புள்ளின்வாய்கீண்டான்’ என்கிறார்கள். இங்குகொக்குவடிவில்வந்தஅசுரனின்கதைபேசப்படுகிறது. கம்சனால்ஏவப்பட்டபகன்எனும்அசுரன்கொக்கின்வடிவம்எடுத்துக்கண்ணனைவிழுங்கவந்தான். கண்ணன்அதன்வாயைக்கிழித்துஅவனைமாய்த்தான். பெரியாழ்வாரும்இதை, ‘பள்ளத்தில்மேயும்பறவையுருக் கொண்டு கள்ள அசுரன் வருவானைத் தான் கண்டு புள்ளிதுவென்று பொதுக்கோ வாய் கீண்டிட்ட’ என்று அருளிச் செய்வார். பொதுக்கோ […]
[ புதிய மாதவியின் ‘பெண் வழிபாடு” சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து] மும்பையை வசிப்பிடமாகக் கொண்ட புதிய மாதவி நவீன இலக்கியத்தில் ஒரு முக்கியமான இடத்தை வகிப்பவர். கவிதை, சிறுகதை, விமர்சனம் என பல வகையான தளங்களில் இயங்கி வருபவர். ‘பெண் வழிபாடு’ எனும் அவரது சிறு கதைத் தொகுப்பு அண்மையில் வெளி வந்துள்ளது. இத்தொகுப்பில் பல்வேறு தளங்களில் இயங்கும் கதைகள் இடம் பெற்றிருப்பதால் வாசிக்கக் களைப்பில்லாமல் இருக்கிறது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும். பெண் தலைமை தாங்கும் […]
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து, செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும், குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே, புற்றர வல்குல் புனமயிலே! போதராய், சுற்றத்துத் தோழிமா ரெல்லாரும் வந்து, முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி,நீ எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்! திருப்பாவையின் பதினோராவது பாசுரம் இது. இந்தப் பாசுரத்திற்கும் இதற்கு அடுத்த பன்னிரண்டாம் பாசுரத்திற்கும் தொடர்பு உண்டு. இப்பாசுரம் கடமையைச் செய்வதைக் காட்டுகிறது என்றால் அடுத்த பாசுரம் தன் கடமையைச் […]
”ஜரகண்டி”எனும் தலைப்பில் ஒரு சிறுகதை. மிகவும் எள்ளலானது. அரசு விழாக்கள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுவது. ‘ஜரகண்டி’ என்ற சொல் மிகவும் பிரபலமானதாகும். முன்கூட்டிப் பதிவு செய்து திட்டமிட்டுத் திருமலை அடைந்து பதினைந்து மணி நேரம் அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுப், பெருமாளருகில் சென்று தரிசிக்கும் போது காதில் ஒலிக்கும் குரல் ஜரகண்டி. அதைச் சொல்லிக் கொண்டே நம்மை இழுத்து அப்புறப் படுத்தி விடுவார்கள். இதை அப்படியே ஒப்பிட்டு எஸ்ஸார்சி எழுத்தாளர் ஒருவர் அரசு விருது வாங்கும் விழாவுக்குச் […]
உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்! எழுந்திராய்! நாணாதாய்! நாவுடையாய்! சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய். ”பங்கயக் கண்ணான்” வளவ. துரையன் உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண் செங்கல் பொடிக்கூறை […]
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். இப்பாசுரத்தில் பெண்களெல்லாம் கிருஷ்ணனைக் கண்டு மயங்கும்போது, அவன் தன்னைக் கண்டு மயங்கும்படியான பெருமை கொண்ட ஒருத்தியை எழுப்புகிறார்கள். பல பிள்ளைகள் படிக்கும்போது ஒருவன் மட்டும் திறமையானவாய் இருப்பது போலே எல்லாப் […]
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லஞ் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச் சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் அனைத்தில்லத் தாரு மறிந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையின் பன்னிரண்டாம் பாசுரமான இதில் இராமபிரானுக்கு இளையபெருமாளைப் போலே கிருஷ்ணனுக்கு இடைவிடாமல் கைங்கர்யம் செய்து வருபவனின் தங்கையை எழுப்புகிறார்கள். அவன் எப்பொழுதும் கண்ணனுடனேயே சுற்றிக் […]
ஒரு பயண நூல் எழுதுவது என்பது எளிதான செயலன்று. அதை விட அதனை வாசிப்பது என்பதும் சாதாரண செயலன்று. ஏனெனில் பயண நூல் படிக்கும் போது அதை எழுதிய பயணியுடன் சேர்ந்து நாமும் அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்லக் கூடிய மனப் பாங்கினைப் பெற வேண்டும். அதற்கு ஏற்றபடி அப்பயண நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏதோ போனோம் வந்தோம் என்றிராமல் தான் சென்ற இடங்களில் பார்த்த மக்கள் வாழ்ந்த சூழ்நிலை, அவர்களின் மொழி, பண்பாடு, […]
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத் தூப[ம]ம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ உன்மகள்தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்! ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்த திருப்பாவையில் இது ஒன்பதாம் பாசுரமாகும். மார்கழி நோன்பு நோற்பதற்காக ஒவ்வோர் இல்லமாகச் சென்று எழுப்பும் பெண்கள் இப்போது உடைமையைக் கொண்டு போவது உடையவனுக்கே உரிமை என்று […]